வள்ளி உன்அழகுக்கும்
வலதுகையின் தேமலுக்கும் -உன்
உட்கழுத்து மஞ்சளுக்கும் -காதலன் நானே
உருகித்தான் போனேனே
அள்ளிய கூந்தலுக்கும்
அன்பான பார்வைக்கும்
துள்ளிய நடைக்கும் - நானே
தூண்டில் மீனாகிப்போனேனே - நீ சொல்லிய
தமிழுக்கும் இனிமைக்கும்
தெம்மாங்கு பாடலுக்கும்
அமுதான தழுவலுக்கும் -துணை
இதமான சுகமாகிப்போனேனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment