தெக்க நிலம் வாங்கி தென்னமரம் நானும் வச்சு!
தென்னமரம் தென்றலடிக்க செல்லமகள் நீயுறங்கு!
தெக்கவச்ச தென்னையில திங்களொரு பூபூக்குமே!
தென்னைதந்த செவ்வெழனி தேனாக இனித்திடுமே!
வடக்கு நிலம் தன்னில் சிறுதாழ வண்ண வண்ணபூபூக்கும்-தாழம்பூ!
வாடையது வீசிவந்தா வரிசமுகம் கண்ணுறங்கு!
வளமான இந்தியாவை உருவாக்கும் நல்வழியில்!
வாடி நீயும் நடந்துவாடி நடந்து பார்ப்போம் அறிவியலில் !- நாமும்!
வளர்ந்து மக்கள் நல பேரரசாய் ஆக்கிடவே கண்விழிப்பாய்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment