என்னோடு நீயும் உன்னோடு நானும்
சேர்ந்து போராடும்
மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளிகள் நாமல்லவா?
காதலித் தோழியே ! காதலின் துணையே -பகுத்தறிவே நீயும்
கரும்புதந்த தீஞ்சாறோ?- நீயும் பலாக்
கனிதந்த நறுஞ்சுவையோ?- நானும் என்றும்
விரும்பிப் பேசும் செம்மொழியோ?-காதல் அன்பில்
அரும்பும் பேரின்பமோ?- தினம் தித்தித்து
மகிழ்ந்திடும் நறுந்தேனோ? நான்மகிழ்ந்து
வரைந்திடும் சித்திரமோ?
வாழ் நாளெல்லாம் நமக்காகவும்
நாட்டில் வாழும் மக்களின் நலனுக்காகவும் -என்னோடு நீயும் உன்னோடு நானும்
சேர்ந்து போராடும்
மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளிகள் நாமல்லவா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment