Popular Posts

Thursday, September 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:தேர்தல் கால இலவசங்கள் எங்கள் தேச மக்களுக்கே தேவையில்லையே! எங்கள் தேசமக்களின்-அத்யாவிசிய அன்றாடத் தேவைப் பொருள்கள்-

தேர்தல் கால இலவசங்கள்
எங்கள் தேச மக்களுக்கே தேவையில்லையே!
எங்கள் தேசமக்களின்-அத்யாவிசிய
அன்றாடத் தேவைப் பொருள்கள்-விண்ணிற்கு
விலையேறாமல் இருந்தால் போதுமே!

தேர்தலையே சாதாரணத் திரு நாளாய்
எண்ணாமலே!உண்மையான
சுதந்திர நன்னாளாய் நாமெல்லாம்
எண்ணுகின்ற காலமென்றோ?

தேர்தல்வரும் நாள்தானே!
எங்களின்
திரையரங்குகளிலும் கோவிலகளிலும் ,
மறைந்துபோன ஜாதிகளையே திரும்ப
சந்திக்கு இழுத்துவரும்!

தேர்தலிலோ!
ஜன நாயக வாக்குசீட்டுகள்!
பண நாயக போலி அரசியல் தலைவர்களால்!
காசுக்கு சோரம் போகின்றன!

தேர்தல் கால இலவசங்கள்
எங்கள் தேச மக்களுக்கே தேவையில்லையே!
எங்கள் தேசமக்களின்-அத்யாவிசிய
அன்றாடத் தேவைப் பொருள்கள்-விண்ணிற்கு
விலையேறாமல் இருந்தால் போதுமே!

போலிஅரசியல் வாதிகளோ!
தேர்தலில் வாக்குவரம் கேட்டார்கள்!
அப்புறம்
எம்மக்களின்
த்லையினிலே கைவைத்தார்கள்!

தேர்தலன்று
எங்கள் மக்களின் கால்களில் விழுந்து
வாக்கினைக் கேட்டார்கள்!
தேர்தலில் வெற்றி பெற்றவுடனே!அவர்களோ?
எம்மக்களுக்கு நன்மை செய்யாமலே!
எம்மக்களை கால்களால் எட்டி உதைத்தார்கள்!

ஐந்துவருடத்திற்கு ஒருமுறை வாக்குச்சீட்டை-எம்மக்களோ!
போலி அரசியல் வாதிக்கு விற்றுவிட்டு
ஐந்துவருடம் முழுவதுமே தங்களைத் தாங்களே!
தொலைத்துக் கோண்டிருக்கிறார்க்ள்!

No comments: