எனக்கொரு கொடியுமில்லை
எனக்கொரு படையுமில்லை
எனக்கொரு சிம்மாசனமில்லை
எனக்கொரு அரண்மனை இல்லை
நானொரு சாமான்யனே!
நானொரு கடைக்கோடி இந்தியக்குடிமகனே!
தேர்தல் வந்தாலே என்வாக்குக்கும் ஒரு விலையிருக்குது
நானே விற்கவில்லை என்றாலே போலி அரசியல்வாதியே-அவனே
தானே விலைவைத்து எனக்குக் காகித உறைதனிலே பணம்போட்டு
வீட்டு வாசலிலே கொண்டுவந்து போட்டிடுவாரே!-அவருக்கு வாக்காம்
ஓட்டுதனை போடசொல்லி நெருக்கிடுவாரே!
ஒரு நாள் ஓட்டுவாங்கவந்த புண்ணியவானே
ஓட்டுவாங்கிவிட்டாலோ ஐந்து வருடத்திற்கு
எங்க தொகுதிபக்கம் வரமாட்டாரே!
எனக்கொரு விலைவாசி ஏற்றமில்லாத தேசமில்லை
எனக்கொரு எல்லாத்தேவையும் பூர்த்தியாகவில்லை
எனக்கொரு சமதர்ம அரசு அரியணையிலில்லை
எனக்கொரு நிம்மதியான வாழ்க்கையில்லை
நானொரு சாமான்யனே!
நானொரு கடைக்கோடி இந்தியக்குடிமகனே!
:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment