கடல் நுரையில்லாத கரைதேடிதேடி ஓடினேன்!..!
மனமில்லா பூவைத்தேடித் தேடியே பார்த்தேன்.!
ருசியில்லா கனியில்லாத கனியிதழ் தேடித்தேடியே சுவைத்தேன்.!
வர்ணமில்லா வானவில்.தேடித்தேடியே கண்ணில் கண்டேன்.!
குழந்தைக்கான தொட்டில்.தேடிதேடியே தலைசாய்த்தேன்.!
மரமில்லா காடு.தேடித்தேடியே கூந்தலிலே முகம்புதைத்தேன்.!
காட்சியில்லா கனவு.காதலிலே தேடித்தேடியே கற்பனையில் பறந்தேன்.!
புன்னகையில்லா இதழுக்குள்ளே சிரிப்பைத் தேடிதேடியே அலைந்தேன்..!
பூக்களில்லா தோட்டம்.தேடித்தேடியே நெஞ்சத்தில் கண்டுகொண்டேன்.!
இசையில்லா பாட்டு.அவளின் மெளனத்தில் உணர்ந்து கொண்டேன்.!
உயிரில்லா உடலில்லை என்று உயிரினில் உயிராகி தழுவிக்கொண்டேன்!..!
அன்பில்லாத உலகம் உலகமே இல்லையென்று வாழ்வினை கண்டேன்!
அறிவில்லாத தேசம் தேசமே இல்லையென்று தெரிந்துகோண்டேன்!
காதலில்லாத பிரபஞ்சமே பிரபஞ்சமில்லையென்று கண்டுகொண்டேன்!
மக்கள்ஜன நாயகபுரட்சியின்றி உலகிற்கே விடிவில்லையென்று அறிந்துகொண்டேன்!
!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment