Popular Posts

Tuesday, April 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒண்ணுசேந்த நெஞ்சுக்குள்ளே காதல் வந்து சிரிக்குதடா-சமுதாய வாழ்விலுமே ஒண்ணுசேந்து நின்னா நாடும் செழிக்குமடா!

சாயச் சருகைச் சேலை உடுத்திவந்த என்மாமன் மகளே!உனக்கே
சாத்தாங்குடி கம்பிச் சேலை எடுப்பா இருக்குமடி-
உருகி நானே உடுத்திவந்த
ஊதா கருப்புச் சேலை உனக்கே பிடிக்கலையோ? என் அத்தை மகனே!-
நீயும்
அன்ன நடை நடந்து ஆசாரக் கைவீசி கண்சிமிட்டி நடக்கையிலே!
உன்ன பார்த்த நாள்முதலாய் என் ஜீவன் உன் ஜீவன் ஆனதடி-பருவப்
பச்சை மணக்குதடி பாதகத்தி உன்மேலே நானே
இச்சை கொண்ட காலமெல்லாம் ஏங்கிமனம் வாடுறண்டி!
ஒண்ணுசேந்த நெஞ்சுக்குள்ளே காதல் வந்து சிரிக்குதடா-சமுதாய
வாழ்விலுமே ஒண்ணுசேந்து நின்னா நாடும் செழிக்குமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/விதிதனை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களே!- நம் மதிதனை பகுத்தறிவினாலே எண்ணிட மறந்தது ஏனோ?

விதிதனை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களே!- நம்
மதிதனை பகுத்தறிவினாலே எண்ணிட மறந்தது ஏனோ?
உழைக்கின்ற அளவிற்கு ஊதியம் வேண்டுவது இயற்கைவிதி ஆகுமடா!
அதிலும் வேறுவிதி உண்டோ? வீணர்களே!
விதிதனை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களே!- நம்
மதிதனை பகுத்தறிவினாலே எண்ணிட மறந்தது ஏனோ?
இல்லாமை இருப்பதையே எதிர்த்து போராடி வெல்லும் பொன்னுலகம் காணுமடா!
இருப்பவனே தந்திடவே மாட்டானே -அவனை
இல்லாதவனே விட்டிடவே மாட்டானே
ஓடப்பன் உயரப்பன் ஆயிடவே எல்லாமே ஒப்பப்பன் ஆயிடவே-மார்க்சீய
தத்துவமே மார்தட்டி வருகுதடா!சிரமேற்கொண்டு வாழ்வினில் உயர்ந்தோங்கடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலித்துப் பாரு காதலித்துப் பாரு- உன்னையே நீயே காதலித்துப் பாரு!

காதலித்துப் பாரு காதலித்துப் பாரு- உன்னையே நீயே
காதலித்துப் பாரு காதலித்துப் பாரு-
உன்னையே நீயே காதலித்துப் பாரு-
உன்னையே நீயே
காதலித்துப் பார்த்தால் காதலித்துப் பார்த்தால்
காதலியே நானே ஏதுக்கடா?
நானந்த அர்த்தத்திலே சொல்லவிலை என்னருமைக் காதலியே
வாழ்வினில் முன்னேற உன் நம்பிக்கைதனையே
வளர்ப்பதற்கே நான்சொன்ன கருத்துதாண்டி!
முன்னேறும் வழிதனையே சொன்ன என்னருமை ஆசை காதலனே!- நாடும் நாமும்
முன்னேற என்னதான் போராட்டம் நீயும் செய்தாயோ?
ஆணும் பெண்ணும் சேர்ந்து போராடினால் தானே பொன்னுலகம்
அருகாமையில் இருக்குதடி என்னாசை காதலியே!
யாரை எதிர்த்து? தனியுடைமை கொடுமை எதிர்த்து
யாருக்காக? நம் மக்களுக்காகவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாக்குரிமை விற்கமாட்டேனே வஞ்சகனே போ போ!

எல்லோரும் வாழவே போராடுவோம் போராளியே வா வா!
தனியுடைமை கொடுமை தீர்த்திடுவோம் மக்கள் ஜன நாயகமே வா வா!
முற்றம் தெளித்தேனே மூதேவியே போ போ!
முன்வாசல் தெளித்தேனே சீதேவியே வா வா!
அச்சம் தவிர்த்தேனே துணிவே வா வா!
அடிமைவாழ்வு அழிப்பேனே சுதந்திர சுவாசமே வா வா!
வாக்குரிமை விற்கமாட்டேனே வஞ்சகனே போ போ!-விலை
வாசிஏற்றம் தன்னையே எதிர்ப்பேனே நன்னெஞ்சே வா வா!
எல்லோரும் வாழவே போராடுவோம் போராளியே வா வா!
தனியுடைமை கொடுமை தீர்த்திடுவோம் மக்கள் ஜன நாயகமே வா வா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எல்லோரும் இன்புற்று வாழ்வதுதான் பொன்னான நாளாகுமே!

எல்லோரும் இன்புற்று வாழ்வதுதான் பொன்னான நாளாகுமே!
இன்ப உணர்வு என்பதுவே எல்லா உயிர்களுக்கும் தானாக விரும்பித்
தன்னுள் பொருந்திவரும் இயல்பல்லவோ!தானே
நன்கு உழைத்து பாடுபட்டு பொருள்தேடி உலகிற்கு
என்றும் உதவி வாழ்வதே சிறந்த வாழ்வாகுமே!அதுவே
என்றும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பேரின்பமல்லவா!
எல்லோரும் இன்புற்று வாழ்வதுதான் பொன்னான நாளாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இது மூட நம்பிக்கையா? விஞ்ஞானமா?

இது மூட நம்பிக்கையா? விஞ்ஞானமா?
வியாழனில் நாற்று நடவேண்டுமடி!
வெள்ளியிலே அறுத்திடவே வேண்டுமடி!
திங்களிலே நெல்தனையே அவித்திடவே கூடாதடி!-பிறை
நிலாவிலே வடகோடு உயர்ந்திருந்தால் வரப்பெல்லாம் நெல் நிறையுமடி!
நிலத்தை ஈசான மூலையிலே உழத்துவங்கி கன்னியிலே
உழுதுமுடித்திட வேண்டுமடி!
இது மூட நம்பிக்கையா? விஞ்ஞானமா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறந்திடாதே! குலதெய்வத்தை கும்பிட்டு கும்மியடி அடி கும்மியடி!

குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறந்திடாதே!
குலதெய்வத்தை கும்பிட்டு கும்மியடி அடி கும்மியடி!
கூடி யாவரும் ஒற்றுமையுடன் கும்மியடி அடி கும்மியடி!
கொண்ட ஜனங்கள் அனைவரும் வேற்றுமையின்றி கும்மியடி அடி கும்மியடி!
அனைத்து மக்களும் நலமாக வாழ்ந்திடவே கும்மியடி அடி கும்மியடி!
ஆதாரமான குலதெய்வத்தையே கும்பிட்டு கும்மியடி அடி கும்மியடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மண்ணே மரிக்கொழுந்தே மரகதமே மாருதமே! என்னே உன்மழலை தேன்சிந்தும் செந்தமிழே!

விண்ணே வேராழமே வித்தார கவியிசையே!
ஒண்ணே ஒண்ணு முத்தமொண்ணு தாராயோ!
கண்ணே என்கண்மணியே கண்மணியின் உள்ளொளியே!
காணாத கற்பகமே கண்டெடுத்த மாணிக்கமே!
பெண்ணே பேரழகே பெற்றெடுத்த பேரின்பமே!
எண்ணே எழுத்தே எழுத்துணரும் மாமணியே!
பொன்னே பூவரசே பூத்து நிற்கும் ரோசாவே!
மண்ணே மரிக்கொழுந்தே மரகதமே மாருதமே!
என்னே உன்மழலை தேன்சிந்தும் செந்தமிழே!
விண்ணே வேராழமே வித்தார கவியிசையே!
ஒண்ணே ஒண்ணு முத்தமொண்ணு தாராயோ!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆகாதடி! மாரிகடன் தீர்த்தவற்கு மனக்கவலை தீருமடி!

ஆடிப் பார்ப்போம் காதலாலே கூடுமடி!
பாடிப் பார்ப்போம் பருவ ஆசை அணையுமடி!
ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆகாதடி!
மாரிகடன் தீர்த்தவற்கு மனக்கவலை தீருமடி!
கோடிப் பார்வை பார்த்தாலும் தீராதடி!
கொண்டவன் பார்வை விருப்பமாய் ஆகுமடி!
ஆடிப் பார்ப்போம் காதலாலே கூடுமடி!
பாடிப் பார்ப்போம் பருவ ஆசை அணையுமடி!

Monday, April 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒரு மனதான நேசத்தையே யார்தானோ? மாற்றிவிடவே இயலும் என் தோழி!

மங்கை மனதில் காதலன் ஒருவன் வழியேதான் செல்லும் என் தோழி- ஒரு நிலை காதல் நிலை நிலைத்திடும்
பழகிய கொடிதனையே மாற்றி நட்டுவிடலாம் என் தோழி
நதியின் போக்குதனையும் மாறறி ஓடவிடலாம் என் தோழி
மங்கை மனதில் காதலன் ஒருவன் வழியேதான் செல்லும் என் தோழி- ஒரு நிலை காதல் நிலை நிலைத்திடும் ஒரு
மனதான நேசத்தையே யார்தானோ? மாற்றிவிடவே இயலும் என் தோழி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆதவனின் காதல் வேண்டி தாமரையும் தவமிருக்கும் அதுபோலவே காதலனை நாடும் காதலியின் இதயமுமே!

ஆதவனின் காதல் வேண்டி தாமரையும் தவமிருக்கும்
அதுபோலவே காதலனை நாடும் காதலியின் இதயமுமே!
அலையொன்று பிறிதொன்றினைத் தழுவுதல் போலவே
இனிய இசையொன்று இன்னொன்றுடன் இணையுதல் போலவே!
ஒளிக்கதிர்களே ஒன்றையொன்று அணையுதல் போலவே!
ஆதவனின் காதல் வேண்டி தாமரையும் தவமிருக்கும்
அதுபோலவே காதலனை நாடும் காதலியின் இதயமுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலரே கருத்தொருமித்த போதினிலே =இவ்வுலகினிலே கட்டுக்கள் என்பதேது கானக்குயிலே!

காதலரே கருத்தொருமித்த போதினிலே =இவ்வுலகினிலே
கட்டுக்கள் என்பதேது கானக்குயிலே! அன்புக்
காதலுமிங்கே அணைகடந்த போதினிலே!- சமுதாயமே
கட்டுகின்ற எந்த தடையும் எந்தமூலைக்கு? கானக்குயிலே!
பொறுமையிங்கே புயலாகும் வேளையிலே-அதையே
பிடித்துவைத்து சிறையினில் அடைப்பாருண்டோ?
காதலரே கருத்தொருமித்த போதினிலே =இவ்வுலகினிலே
கட்டுக்கள் என்பதேது கானக்குயிலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கல்விவேண்டும் கல்விவேண்டும் பெண்களுக்கே வாழ்கின்ற மக்களையெல்லாம் காப்பதற்கே!

கல்விவேண்டும் கல்விவேண்டும் பெண்களுக்கே
வாழ்கின்ற மக்களையெல்லாம் காப்பதற்கே!
கல்விவேண்டும் கல்விவேண்டும் பெண்களுக்கே
காணுகின்ற இல்லறமே நல்லறமாகவே!
கல்விவேண்டும் கல்விவேண்டும் பெண்களுக்கே- நன்றாய்
காணுகின்ற இவ்வுலகினை ஆக்குவதற்கே!
கல்விவேண்டும் கல்விவேண்டும் பெண்களுக்கே
வாழ்கின்ற மக்களையெல்லாம் காப்பதற்கே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒருமனிதன் தனிமனிதன் தன்னலமனிதன் தனியுடைமை மனிதன்= தேவைக்கே இந்த உலகம் உண்டென்றால் அதுவும் அழிதல் நன்றாகுமே!

எல்லார்க்கும் எல்லாமும் யாவர்க்கும் வாழ்வாதார எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும் பொதுவுடைமை உலகம்
இந்த உலகம் என்றானால்
அதனையே ஏற்றுதல் நன்றாகுமே!

ஒருமனிதன் தனிமனிதன் தன்னலமனிதன் தனியுடைமை மனிதன்= தேவைக்கே
இந்த உலகம் உண்டென்றால்
அதுவும் அழிதல் நன்றாகுமே!
எல்லார்க்கும் எல்லாமும் யாவர்க்கும் வாழ்வாதார எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும் பொதுவுடைமை உலகம்
இந்த உலகம் என்றானால்
அதனையே ஏற்றுதல் நன்றாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உயர்வென்ன? தாழ்வென்ன? ஒன்றுமில்லையே!- நாமே! வேறுபட்டால் உறவுமில்லை பிரிவுமில்லையே!

அன்பினில் ஆழ்ந்தது என்மனமே
சிறகினை விரித்து உறவினை அணைக்கும்
காதலின்ப வேளையடி-இது இனிமை
கவிதைபாடும் காலமடி!
உயர்வென்ன? தாழ்வென்ன? ஒன்றுமில்லையே!- நாமே!
வேறுபட்டால் உறவுமில்லை பிரிவுமில்லையே!

கவிதைபாடும் காலமடி!
அடியென் காதலியே அன்புத் தோழியே!
அடிமண் நீக்கிய குளமாகவே!=காதல்
அன்பினில் ஆழ்ந்தது என்மனமே
சிறகினை விரித்து உறவினை அணைக்கும்
காதலின்ப வேளையடி-இது இனிமை
கவிதைபாடும் காலமடி!
காதல் அமுதே கருத்துச் செறிவே- நமது உள்ளம்
கலந்த பின்னே இந்த உலகினில்
உயர்வென்ன? தாழ்வென்ன? ஒன்றுமில்லையே!- நாமே!
வேறுபட்டால் உறவுமில்லை பிரிவுமில்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எனைத் தொட்டுச் செல்லும் தென்றல் காற்றினைக் கட்டிக் கொள்வது போலவே!

ஓடோடி வந்தேனே
காதலியே
உனைத் தொட்டுச் செல்லவே
ஓடோடி வந்தேனே!= காற்றினை -எனைத்
தொட்டுச் செல்லும் தென்றல் காற்றினைக்
கட்டிக் கொள்வது போலவே
ஓடோடி வந்தேனே
காதலியே
உனைத் தொட்டுச் செல்லவே
ஓடோடி வந்தேனே
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இலையுதிர்காலமே – இந்த இலையுதிர்காலமே

காதலி
அவள்
அன்பு விலங்கில் கட்டுண்டாளே
ஆசை சிறையினில் சிக்குண்டாளே
இலையுதிர்காலமே – இந்த
இலையுதிர்காலமே

வசந்தங்கள் தனை எதிர்பார்த்தே –தனது
சொந்தங்களையே இழந்ததே
இலையுதிர்காலமே – இந்த
இலையுதிர்காலமே
காதலி
அவள்
அன்பு விலங்கில் கட்டுண்டாளே
ஆசை சிறையினில் சிக்குண்டாளே
தன்வசம் தானிழந்தாளே-காதலன் வசமே
தனையே மறந்தாளே

Sunday, April 18, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ தேங்குவளை மலர்த் தேனாடி வண்டு சிறகுலர்த்தும்

அந்திமாலை அசைந்து போனாள் கண்ணில் இசைந்துபோனாள்
ஏங்குவளைக் கையாள் இள நகையாள்
பூங்குவளைக் காட்டிடையே போனாளே - தேங்குவளை மலர்த்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் பொற்றாமரைக் குளத்தினிலே-காதலனே
தானாடிச் சோலை புகுந்தானே மங்கைக்கு மாலை கொடுத்தானே
தன்னானே தன்னானே தானானே!
தானானே தன்னானே தானானே!

Friday, April 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கட்டுரை/ ”அங்காடித் தெரு ”வுக்கு”வாழ்த்துக்கள் வசந்தபாலன்”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கட்டுரை/

அங்காடித் தெரு –
நன்றி இரவி அருணாசலம் அவர்களே!




வசந்தபாலனுக்கு இது இரண்டாவது திரைப்படம். தமிழில் வந்தவற்றுள் உயர் தரத்தில் இருக்கக் கூடிய ”வெயில்” திரைப்படத்தை முதலில் தந்த நிறைவோடும், நீண்டநாட்களுக்குப் பின்னருமாக 'அங்காடித் தெரு' வைப் படைத்திருக்கிறார். நீண்ட காலத் தாமதத்திற்கு இப்படம் பதில் தந்திருக்கிறது.

ஒன்றைச் சொல்ல வேண்டும். அங்காடித் தெரு , அது பேசிய 'மனிதம்' 'வெயிலை விஞ்சி நிற்கிறது. வசந்தபாலன் திரைப்படத்துறைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்

'அங்காடித் தெரு' பெயரே ஒரு எதிர்பார்ப்பினை எதிர் நோக்கி நிற்கின்றது.'

மனிதஉழைப்பினை உறிஞ்சிக் குடித்துவிட்டு சக்கையாகத் துப்புகிற இடமே 'அங்காடித் தெரு.'என்று உணரவைத்திருக்கின்றது.
இது வெறுமனே காதற்கதை அல்ல . காதற்கதையோடு . அதனூடாக அவர் சொல்லி முடித்த சமூகத்தின்பால் வசந்தபாலன் வைத்திருக்கின்ற அக்கறையுடன் கூடிய ஈர்ப்பான,சமூகத்தின் இன்றைய அத்யாவசிய தேவையான சிந்தனைச் செய்திகளை ,மக்களுக்கு சொல்ல முயன்றிருக்கும் யுக்தி ,பிரபஞ்ச அளவு ஆனது-

உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல், சக மனிதர்கள் மீதான நேசம், முதலாளித்துவ இயந்திரத்தின் குரூரம் எனப் பலவற்றைப் பேசுகிறது 'அங்காடித் தெரு.' பல நூற்றுக்கணக்கானோர் பணியாற்றுகின்ற பல்பொருள் அங்காடியில் இருவருக்கிடையில் ஏற்படுகின்ற காதலும்,.....வேண்டாம்.

கதையென்று எதைச் சொல்ல? அது இங்கு தேவையில்லாதது. உண்மையில் இதனை எழுத முற்பட்டதே இவ்வாறாக திரைப்படங்கள் வருகிற போது நம்மால் வழங்கப்படுகின்ற வரவேற்பு வார்த்தைகள் மேலும் இத்தகைய திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதை அதிகரிக்கும்.

. வசந்தபாலன் மனிதத்தை உயர்த்திப் பிடித்தார்.

கதையில் அதிகாரம் செய்வோரின் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறார்கள். 'அங்காடித் தெரு'வில் அடுத்த வேளைச் சோற்றுக்கு குடும்பமே பரிதவிக்கப் போகிறது என்பதற்காக கெஞ்சல். '

சில இடங்களில் நெகிழ்ந்தும், சில சமயங்களில் தளர்ந்துமாய் 'அங்காடித் தெரு' திரைப்படம் என்னைச் சுற்றிச் சுழன்றது. ஆயினும் நெகிழ்ந்த கட்டங்கள் பல.

மனிதர்களுக்கு மிக அத்தியாவசியமானவை உணவும், நித்திரையும். அது இங்கு மறுபடவில்லை. தரப்படுகிறது. அது தரப்படுவதை காட்சிப்படுத்திய விதம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இப்படியுமா? வசந்தபாலன், இதை நம்பலாமா?

நாயகியின் தங்கை 'ஆச்சாரமான' குடும்பத்தில் வேலைக்காரியாக இருக்கிறாள். அவள் சாமத்தியப்பட்டாள். நாயகனும், நாயகியும் அவளைப் பார்க்கப் போனார்கள். கூண்டு மாதிரி கட்டப்பட்ட ஒன்றில் அல்சேசியன் நாய் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதே மாதிரிக் கூண்டில் சாமத்தியப்பட்ட அச்சிறுமி முடங்கிப் படுத்திருக்கிறாள். அக்காவானவள் அள்ளி எடுத்து அணைத்து அழுகிறாள். எந்த வசனத்தையும் வசந்தபாலன் இதில் வைக்கவில்லை.

நாயகியின் தங்கை நாயகியிடம் கேட்டிருக்கிறாள். 'உங்களோடை வந்தாரே ஒரு அண்ணை. அவர் ஆர்.'

'நீ ஆரென்று சொன்னாய்?' நாயகன் கேட்டான்.

'சிரித்தேன்' நாயகியின் பதில் இது. இப்படிக் காதலை நுணுக்கமாகச் சொல்லவும், வேறும் பலவற்றுக்கும் ஜெயமோகனின் வசனம் நிரம்பவே உதவியிருக்கிறது.

முகவெட்டும், உடம்புக் கட்டும் கொண்ட நடிகர், நடிகைகள் வசந்தபாலன் போன்றோரின் திரைப்படங்களுக்குத் தேவைப்படுவதில்லை. 'பருத்திவீரன், நான் கடவுள், பசங்க, வெண்ணிலா கபடிக்குழு' போன்ற படங்களிலும் அதனைக் கவனிக்கலாம். இந்த நெறியாளர்கள் தங்கள் ஆளுமைகளை மாத்திரம் நம்புகிறார்கள். அந்த ஆளுமைக்குள் பிரதிகளைத் தெரிவு செய்தல், அதனைச் செப்பனிடல், கட்டிறுக்குதல், காட்சி பூர்வமாக அதை வெளிப்படுத்தல், இசை பூசி எம்மை வசியப்படுத்தல் என்று யாவும் அடங்கும்.

வசந்தபாலன் அதை நேர்த்தியாகவே செய்கிறார். ஆனால் ஒன்றில் அவர் எம் நெஞ்சைத் தொட வைக்கவில்லை. அது இசை என்பேன். பின்னணி இசை இத்திரைப்படத்தின் காட்சிக்கும், பிரதிக்கும் இசை ஒத்திசையவில்லை என்பது என் தற்துணிபு. விஜய் அன்ரனி வழங்கிய மேற்கத்தைய இசைக்கோலம் சென்னையின் ரங்கநாதன் தெருவுக்குள்ளால் புகுந்து வெளிவரவில்லை. புகக்கூட மிகச் சிரமப்பட்டது.ஆனாலும் “அவள்அப்படி ஒன்றும் அழகில்லை”என்ற பாடல் எப்போது நினைத்தாலும் நினைவில் ரீங்காரம் செய்துகொண்டு இருக்கும் ;அளவிற்கு நினைவோட்டத்தில் ஓடிகொண்டே இருக்கின்றது.


மேலும் என்ன சொல்ல? தமிழின் மிகத் தரமான திரைப்படங்களின் வரிசையில் 'அங்காடித் தெரு'வும் ஒன்றாகிறது. வாழ்த்துக்கள் வசந்தபாலன்.வுக்கு

0

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உயிர் வாழும்போது உறவுகளில்லையடா -,மூச்சு போனபின்னே சொத்துக்கு அடிபிடி சண்டைகாணும் உலகமடா!

சவப்பெட்டிதனை மூடிடும் முன்னே!முன்னே!
உயில் பெட்டிதனை திறந்திடும் என்னே!என்னே!
சோத்துக்கு சொந்தமில்லை சொத்துக்கு சுற்றமுண்டு-உயிர்
வாழும்போது உறவுகளில்லையடா -,மூச்சு
போனபின்னே சொத்துக்கு அடிபிடி சண்டைகாணும் உலகமடா!
அன்புக்கு இதயமில்லையடா! பண ஆசைதனுக்கு ஆளாய் பறக்குமடா!
பணமதுவே உறவானதடா! பந்தபாசம் எல்லாமே கப்பலேறி போச்சுடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உள்ளமோ ஒன்றில் நில்லாது தவிக்கிறதே

உள்ளமோ ஒன்றில் நில்லாது தவிக்கிறதே -காதலாகிக் கசிந்துருகி
வெள்ளமோ எனஎண்ணும் வண்ணம் ஆசை கரைபுரண்டுதான் ஓடுதே!
கொள்ளிமே லெறும்பு போலவே மனமும் ஒருவழி நில்லாது காதலியுனைத் தேடுதே!-தினம் மயங்கித் தொடருதே மழலையாகியே
கொஞ்சிக் குழையுதே என்ற னுள்ளம்,=மறுமை இல்லாததாலே!
உன்னை யல்லால் எந்தனுக்கு=!
இம்மையில் துணைவேறில்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எந்தப்பொழுது தான் நம் நலத்தில் அக்கறை கொள்வது தோழனே!

சந்திப் பது மாலையிளந்தென்றலிலே -காதலிலே
சிந்திக்கவேணும் வாழ்வுயர்த்தும் இமயத்தையே!
வந்திப்போது எதிர்காலம் பற்றி சிந்தனையெல்லையென்றாலே!
எந்தப்பொழுது தான் நம் நலத்தில் அக்கறை கொள்வது தோழனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாக்குரிமையை விற்று ஒழிந்தன காலங்கள் வாழ்வுரிமையும் போயின!

வாக்குரிமையை விற்று
ஒழிந்தன காலங்கள் வாழ்வுரிமையும் போயின-சுதந்திரத்தை தொலைத்து
கழிந்தன வாழ்க்கை நெறிமுறையும் போயின- விலைவாசி விண்ணேறி வாழ்மக்களைப்
பிழிந்தன அடிப்படைத் தேவைக்கான வாழ்வாதாரங்களும்
அழிந்தன கண்டும் போராட முன்வராத இந்திய மக்களின்
பேடித்தனத்தை என்சொல்வேனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனிதத்தில் இருந்தேன் எல்லாரும் வாழ்ந்திடவே!

இருந்தேன் இருந்தேன்
தோழமையில்
இருந்தேன் இதயத்தில் ஆழ்ந்தே-அன்பினில்
இருந்தேன் இரவுபகல் தெரியாமலே- காதலிலே
இருந்தேன் காலம் நேரம் பாராமலே- நட்பினிலே!
இருந்தேன் உலகம் உயர்வாகவே-ஒற்றுமையில்
இருந்தேன் சமத்துவம் அரியாசனமாகவே!மனித நேயத்தில்
இருந்தேன் பிரபஞ்சமே மகிழ்ச்சியுறவே!மனிதத்தில்
இருந்தேன் எல்லாரும் வாழ்ந்திடவே

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இல்லறத்தை தெரிந்தாயா?

காதலிலே
பாடவந்த பாடலை நானும் அறிந்திடேன் -பாடலுக்கு
ஆடவந்த ஆடலை நீயும் அறிந்தாயா? இன்பத்தினை
நாடவந்த நாட்டியமே நீயும் புரிந்தாயா?-வாழ்க்கையினை
தேடவந்த இல்லறத்தை தெரிந்தாயா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அழகே அவளன்றி எந்ததுறவறமும் எந்த பிரபஞ்சத்திலும் இல்லை இல்லையே!

காதலி
அவளை அன்றி தேவதையும் இல்லை இல்லையே
தோழி
அவளன்றிச் செய்யும் அருந்தவமும் இல்லை இல்லையே
துணைவி
அவளன்றி இல்லறத்தில் ஆவதொன் றில்லையே
அன்பே
அவளன்றி ஊர்உலகம் ,சுற்றம் நான் அறியேனே!
அறிவே
அவளன்றி உலகினில் புதுமைகள் ஏதுமில்லை இல்லையே!
அழகே
அவளன்றி எந்ததுறவறமும் எந்த பிரபஞ்சத்திலும் இல்லை இல்லையே!
ஆக்கமே
அவளன்றி இந்தசமூகத்திலே முன்னேற்றம் என்பதுமில்லை இல்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வண்ணத்தமிழ் காவியமே படித்தேனே!

காதலி அவளின்
கண்ணகத் தேநின்று காதலித் தேனே
மண்ணகத்தே இருந்து விண்ணகத்தே பறந்தேனே-எந்த வானகத்தே பறந்தாலும்
மண்ணகத்தே வந்துதான் தீரணுமே எண்ணகத்து கோடி நினைவுகள் என்றாலுமே!
அன்பகத்து இன்னிசை பாடலே இதயத்தில் ஒலித்திடவே-காதலி அவள்
கண்ணகத் தேநின்று காதலித் தேனே- அவளின் நெஞ்சகத்து
வண்ணத்தமிழ் காவியமே படித்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் மந்திரம் கேட்டவள்!

காதல் மந்திரம் கேட்டவள் போனாளே!
காதல் மதியினைத் தொடரும் விண்மீனாய்!
இரவு நேர மேகங்கள் மிதந்து போனதோ?-அங்கு
உறவுகொள்ள வந்தனவே?விண்மீன்களோ?
பால் நிலவும் விண்மீன்களும் மட்டுமே-அந்த
பால்வீதியில் விழித்திருந்தனவோ?
காதல் மந்திரம் கேட்டவள் போனாளே!
காதல் மதியினைத் தொடரும் விண்மீனாய்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/வாழ்விதிலே!

ஒன்றையொன்று தழுவிக்கொண்டு மேலெழும்பும் அலைகளே போல்
நம்வாழ்க்கையும் தங்களுக்குள்
ஒன்றாகிப் பின்கரைந்து போகுமடா!
கரைமீறாமலே நதியும் ஒழுகுமடா!-வாழ்விதிலே நமது
சுமைதாளாமலே மனமும் அலையுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இயற்கை என்னும் இளையதேவதை!

இயற்கை என்னும் இளையதேவதை!வந்தாளே !வந்தாளே!
தந்தாளே! தந்தாளே!
இன்பங்காணும் இன்னுயிரும் தந்தாளே!
வந்தாளே !வந்தாளே !தந்தாளே!தந்தாளே!
இளமை மின்னும் இனிமையும் தந்தாளே!
தந்தாளே தந்தாளே
உணர்வினில் கலந்து இன்பமே தந்தாளே!
இயற்கை என்னும் இளையதேவதை!வந்தாளே !வந்தாளே!
தந்தாளே! தந்தாளே!
இன்பங்காணும் இன்னுயிரும் தந்தாளே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!

சிறுமழலை விழியினிலே ஒளிமொழி பேச்சில்
திருவிளக்கின் சிரிப்பினிலே தெம்மாங்கு பாட்டில்
அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!
அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!
அந்த சோலையிலே -அங்கு
மலர்ந்த மலர்களிலே -தேனாய்
சிரிக்கும் தளிர்களிலே
அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!
காணும் இடமெல்லாம் - நம்
கருத்தில் நிற்கின்றாள்
அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!
அந்த சோலையிலே -அங்கு
மலர்ந்த மலர்களிலே -தேனாய்
சிரிக்கும் தளிர்களிலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வீறுகொண்டு பயணம் செய்யுங்கள்!

உண்மையும் சமத்துவமும் உயிர்சுவாசங்களாகக் கொள்ளுங்கள்!-தர்மமாம்
சத்தியத்தின் பாதையில் வீறுகொண்டு பயணம் செய்யுங்கள்!
தாள்களை,கைகளை பிணிக்கும் அடிமைத் தளையை நொறுக்குங்கள்!
நாம்காணும் பூமி பூலோக சொர்க்கமாய் சிரிக்கும் அல்லவா?
உரிமைக்கு போராடாத மானுடம் இப்புவிதனில் இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன?
உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்காத சமூகம் உலுத்தர்களின் கூடாரம் அல்லவா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இறுதிவரை தளராது போராடுங்கள்!

எளியோர்களை வீழ்த்திவிட்டும்
வலியோர்களை வாழ்த்திவிட்டும்
வாழும் இவ்வுலகம் கபட உலகமடா!பாட்டாளித் தோழா!
தனியுடைமை பகைவர் உங்கள் ஒற்றுமை
கண்டு அஞ்சுவர் என்பதால் நீவீர்
வெட்டுப் பட்டாலும் சுட்டெரிக்கப்பட்டாலும்
தனியுடைமைக்கு கீழ் அடங்காமல் இறுதிவரை
தளராது போராடுங்கள்!

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தாழ்வுக்கான காரணத்தை ஆராய்ந்து

வாழ்வது வந்த போது மனம் தனில் ரொம்பத்தான் துள்ளிக் குதித்துத்தான் மகிழாதே!
தாழ்வது வந்ததானால் தாழ்ந்து நீயும் தரந்தாழ்ந்து தளர்ந்துதான் போகாதே?
தாழ்வுக்கான காரணத்தை ஆராய்ந்து அதைகளை எடுக்க எண்ணாமலே வாழ்வின்
தாழ்வுகான காரணமாய் விதியைத்தான் நொந்து நூலாய்த்தான் நீயும் போய்விடாதே!உண்மை
காரணத்தை ஆய்ந்து வாழும்வழிதனையே பாராமல் நீயும் சோம்பித் திரியாதே!
/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஊடல் ஒருசுகம் என்றபோதிலுமே

கூடிப் பிரியாதடி-சகியே !
கூடிப் பிரியாதடி-காதலிலே
ஊடி ஓடாதடி ஊடி ஓடாதடி!
ஊடல் ஒருசுகம் என்றபோதிலுமே -எப்போதும்
ஊடலே காதலென்றால் காதலின்பத்திற்கு அதுஆகுமோ?
உணவிலே உப்பே போன்றே காதலிலே !
ஊடலென்றால் சுவையாகிடுமே!
உப்பே உணவானால் கரைசேர்வது உசிதமாகுமோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நீகூறும் தமிழ்வார்த்தைக்கு

தமிழாலே செந்தமிழாலே
ஞயம்பட உரையடி ஞயம்பட உரையடி!காதலின்
இதமான உன்பார்வை கூசிடும் வேளையிலே -அந்த
இடைப்பட்ட அந்த நேரத்திலே
தமிழாலே செந்தமிழாலே
ஞயம்பட உரையடி ஞயம்பட உரையடி!கண்ணோடு கண்ணோக்கின்
வாய்சொல்லில் பயனில்லை என என்பாட்டன் வள்ளுவனும் கூறினாலும்-தமிழமுத
வார்த்தையாலே நீகூறும் தமிழ்வார்த்தைக்கு இந்த பிரபஞ்சமும் ஈடு இணைஇல்லையடி!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நீ வந்தால் தானே விடியலும் விடியலாகுமே!. /

கண்டொன்று சொல்லாதே காணாமல் ஒன்று சொல்லாதே-கண்ணில்
கயமைப் பார்வைபாராதே நெஞ்சில் வஞ்சம் கொள்ளாதே-காதல்
உண்டென்று கூறாமல் உவகையிலே என்னை நீ கொல்லாதே
ஒரு நாளும் நீயின்றி விடியாதே நீ வந்தால் தானே விடியலும் விடியலாகுமே!.
/

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணும் தத்துவத்தை மறவாதே!

கற்றகல்வி அடுத்தவர்க்கு சொல்லித்தர மறவாதே!
காலத்தால் செய்த நன்றி ஒருசிறிதும் மறக்காதே!
கருதிய நூல் கல்லாது மூடனாக இருக்காதே!
கணக்கறிந்து பேசாத கசடனாக வாழாதே!
ஒரு தொழிலும் இல்லாது சோம்பேறி ஆகாதே!
ஒன்றுக்கும் உதவாது சுற்றிக்கொண்டு திரியாதே!
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்!
பேசாமல் முட்டாளாய் இருக்காதே!பச்சோந்தியாகவே!
பரிவு சொலித் தழுவித்தான் பசப்பனாகாதே!
பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்புதனை மறக்காதே!
ஓடப்பரை உயரப்பர் ஆக்கும் தத்துவத்தை மறக்காதே!
பண்புள்ள நல்ல மனிதர்க்ள் துணையினை ஒதுக்காதே!
எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணும் தத்துவத்தை மறவாதே!

தமிழ்பால-/காதல்/கவிதை/தத்துவம்/தனியுடைமை உலுத்தர்கள் கூறும் வேதங்கள் !

கயமை
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே -வஞ்சக
நரிசொல் கேட்டுநல்லவர் என்றும் நடப்பாரோ இந்த பூவுலகினிலே!தனியுடைமை
உலுத்தர்கள் கூறும் வேதங்கள் எல்லாம் உன் நல்வாழ்விற்கே உலைவைத்திடுமே!
உண்மை உணர்ந்து நல்லோர் வழி நீயும் நடந்தால் உலகம் நன்மையாகிடுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/என் கண்ணிரண்டும் உறங்காதே!

என் கண்ணிரண்டும் உறங்காதே-காதலன்
உன்னை நினைத்த போதெல்லாம்
பொங்கு கடலும் உறங்காது பொழுதோர் நாளும் விடியாது
நிலவும் உறங்கும் உலகும் உறங்கும் தென்றல் உறங்கும் ஊரெல்லாம்
எங்கும் உறங்கும் இராக்காலமே என் கண்ணிரண்டும் உறங்காதே
/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ கோழையாகி நிற்காதே!

கானலை நீரென்று எண்ணிக் கடுவெளி திரியும் மான்போல் கனவு காணும் காதலாலே
காலத்தை கழித்து தினம்வெந்து சாகாதே!
வானுறும் இலவு காத்த மதியிலாக் கிள்ளையே போல்-ஒருதலை
காதல் கொண்டு ஏங்கித் தவித்து சோம்பித் திரிந்து கோழையாகி நிற்காதே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பிணந்தின்னும் சாத்திரங்கள் தொடர்ந்திடுமே! தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

ஆலகால விசத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காசுக்கு ஓட்டை விலைக்கு வாங்கும் வஞ்சகரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிடும் வரையினில் -அந்த்
கொடியவரின் பேயாட்சி தொடரும் பிணந்தின்னும் சாத்திரங்கள் தொடர்ந்திடுமே!

தமிழ்பாலா0/காதல்/கவிதை/தத்துவம்/தனியுடைமை கொள்கைதனைக் கொண்டோரைச்

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணுமே
நல்லோரைச் சார்ந்தவரே என்னாளும் வாழ்ந்திடுவாரே-உலகினிலே
இலவு காத்திடும் கிளிபோல் தனியுடைமை கொள்கைதனைக் கொண்டோரைச்
சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மகராசியும்,சுகவாசியும்

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாளே மகராசி- அதை உண்பதே அமுதமாகுமே
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து கொடுத்தாளே சுகவாசி-அதை உண்பதே
அடிவயிற்றினில் என்றும் கடும்பசி ஆகும் மானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்!

வாழ்க்கையின் வெற்றியாகுமடா!
வாழ்க்கையின் வெற்றியாகுமடா!
அவனன்றி அவளில்லை அவளன்றி அவனில்லை
என்றகாதலின் நம்பிக்கையே!
வாழ்க்கையின் வெற்றியாகுமடா!-
காதலின் அடிப்படையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்
வாழ்க்கையின் நம்பிக்கையே ஆகுமடா!
வாழ்க்கையின் வெற்றியாகுமடா!
வாழ்க்கையின் வெற்றியாகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒளிப்பிழம்புதான் இலக்கியமாகுமடா!

வாழ்வுதனையே பிரதிபலிப்பது இலக்கியமாகுமடா!-பதிவுகளிலே-
வாழ்க்கைதனின் எல்லாவித நிகழ்வுகளும் இலக்கியமாகாதடா!-உலகப் பதிவேட்டில்
வாழ்வுதனில் அறிந்தவற்றில் சிறந்தவைதான் இலக்கியமாகுமடா!-சிந்தித்து
வாழ்வுதனில் சிறந்தவைகளின் ஒளிப்பிழம்புதான் இலக்கியமாகுமடா!
வாழ்வுதனில் ரசிப்பவனின் ரசனைக்கேற்ப ஆவதே இலக்கியமாகுமடா!-இலக்கியம்
வாழ்வுதனை முழுவதுமாக எப்போதும் பிரதிபலிப்பது இல்லையடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஊடல் என்பது

பிரிவு என்பது துன்பமாகுமே- நீண்டகாலப்
பிரிவு என்பது பெருந்துன்பமாகுமே!
ஊடல் என்பது சுகமாகுமே--அதிக நேர
ஊடல் என்பது துயரமாகுமே
இன்பத்தின் உச்சிக்கு ஊடலும் ஈர்த்துச் சென்றிடுமே!
இள நங்கையே உன்னூடல் இனிமையதை சேர்ந்திடுமே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

Wednesday, April 14, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/கண்ணினால் காதல்நோய்!

கண்ணினால்
காதல்நோய் சொல்லி இரவு
கனவினால்-கோடி
கதைகள் சொல்லிப் பறக்கும்
தூங்கினால்
கனவுவந்து வந்து மயக்கும்
மீண்டுவிழித்தால்
நனவிலும் வந்து வருத்தும்
என்னடா காதல் பொல்லாத காதல்
எப்படியும் அன்புத் தொல்லை தந்து சிரிக்கும்!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/மலரினும் மெல்லியது காதலடியோ!

மலரினும் மெல்லியது காதலடியோ!உன் மனதினில் என்னை நீயும்
மறுப்பதுதான் ஏனடியோ?-உன்
மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன்
நினைவினில் கூட வாழ்வதா என்று நானும் தீர்மானித்து விடுவேனே!
ஒருதலையாக காதல் என்றால் அதுகரை சேராதே
ஒருதலைக்காதல் வாழ்ந்ததென்று சரித்திரம் இல்லையடி!-காதல்
ஒருமுறைதான் இருந்தும் வெற்றி இல்லை என்றால்
உயிர்தனை மாய்ப்பது என்பதும் எந்தவகைதனில் நியாயமடி!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/ஊடலில் தோற்றவர் வென்றார் இது காதலின் மெய்யடியோ! கூடலில் தோற்காத காதலரின் இன்பம் பேரின்பம் ஆகுமடியோ!

ஊடலில் தோற்றவர் வென்றார் இது காதலின் மெய்யடியோ!
கூடலில் தோற்காத காதலரின் இன்பம் பேரின்பம் ஆகுமடியோ!
ஊடுதல் காதலுக்கு இன்பம் என்றும் என்பாட்டன் வள்ளுவனும் சொன்னானே!
ஊடி ஊடி ஓடிப் போகாதே
கூடிக் கூடிக் குலவும் பொழுதினையே கூட்டாதே!
காதலிலே கால நேரம் பார்த்து நின்றால் கதைக்கு உதவாதே
களவினிலே உலவும் காதலுக்கு ஒருசிறப்பு உள்ளதடியோ!
காதலித்துப் பார்ப்போம் எந்தசக்தி எதிர் நிற்கும் ஜெயிப்போம்!
காதலென்ன கத்தரிக்காயா? விலைகுறைத்து ஏற்றி வாங்குவதற்கு-அடிமனதினில்
ஆழ்ந்து நிற்கும் காதலிந்த உலகினிலே என்னாளும்
காலத்தை வென்று நிற்கும் காதலாகும் உள்ளத்தில் இருத்தடியோ!
தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/ராக்கோழி.!

கத்திகிட்டே இருக்குதடி ராக்கோழி.
கண்டுக்காம கெடக்குதடி சாமஇருட்டு!-கொண்டைய ஆட்டிக்கிட்டு
கொத்திக்கிட்டே திரியுதடி ஊர்க்கோழி!கூடிக் குலவிக் கிட்டே
கொண்டாடத் துடிக்குதடி வெடக்கோழி!
/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கனவுவந்து கனவுவந்து

நனவென ஒன்றில்லை என்றானால், கனவதுவே!கனவதுவே!
காதலர்க்கு காலமெல்லாம் நீங்காத நீண்ட வசந்தகால பயணமாகிடுமே!
, கனவதுவே!கனவதுவே!மெய்யாகட்டும்
நனவதுவே நனவதுவே ஏதுக்கடி!மெய்யாகாத
கனவுவந்து கனவுவந்து கானல் நீராய் சிரிப்பதுந்தான் ஏனடியோ!

தமிழ்பாலா-காதல்/தத்துவம்/கவிதை ,-/ புதியபாதை!

பாலொடு தேன்கலந்ததே அவள்மொழி தமிழானதாலே!-காதல்
பழம் நழுவிப் பாலிலே வீழ்ந்ததே அவளின் பார்வையாலே!
படிப்பதெல்லாம் அவளின் அன்பு நெஞ்சின் அறிவுரைகள் அல்லவா!
பார்ப்பதெல்லாம் இருவரும் சேர்ந்து எழுதிடும் புதியபாதை இலக்கல்லவா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ ஒரேஒருபூ !

இவள்கண்
பலர்காணும் பூவிற்க்கு ஒப்பாகும் என்று
என்னெஞ்சே துள்ளிக்குதித்து சொன்னாலுமே
என்கண் நோக்கும் ஒரேஒருபூ என்றுதான் நானும் அரிதியிட்டுக் கூறிடுவேனே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/காதலொன்று தானடியோ!

பார்வை நோய்தந்த தோழியே பார்வைக்கு பார்வையே மருந்தானதடி
மெய் நோய்க்கு மருந்து வெளியிலுண்டு காதலியே !காதலொன்று தானடியோ!
தன்நோய்க்குத் தானே மருந்தாகுமடியே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கண்டுகேட்டு உண்டுயிர்த்து!

காதலியே என் தேவதையே !என்னில்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றது அறிந்தாளே!அவளின் ஐம்புலனும் காதலியாம்
ஒண் தொடியாள் கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே உள்ளதடா-எந்தன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே துள்ளுதடா!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/ நோக்கு !நோக்கு !

நோக்கு நோக்கு நோக்கடியோ இரு
நோக்கு இவளின்கண் உள்ளதடியோ ஒரு
நோக்கு நோயைத் தந்ததடி= மறு
நோக்கு நோயைத் தீர்த்ததடி-அவளின் கண்ணோ
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் கொண்டதடியோ காதலதில்
நோக்கம் மட்டும் அன்று பெரிதடியோ!.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தனியுடைமை கொடுமையெனவே !

கருத்தினுட்கருத்தாயிருந்துநீயுணர்த்தும் தத்துவத்தையே
காரணம்கண்டுசும்மாதான் தூங்கிக் கிடந்தேனே வெறுமனே
வருத்தமற்றிருந்துசுகம்பெறாவண்ணம் இருந்தகாலத்தை எண்ணியே
வருந்தினேன்மதியின்மையாலே வாளாதிருந்தேனே பகுத்தறிவினாலே
புரிந்துகொண்டு நானும் எல்லோரின் நலனுக்காகவே போராட விளைந்தேனே
தன்னலம் வெறுத்தேனே பொது நலம் விரும்பினேனே
தனியுடைமை கொடுமையெனவே உணர்ந்தேனே! அதை எதிர்த்திடும் நல்ல
மனிதரின் துணைகொண்டு தனியுடைமை தனையே வீழ்த்திட விளைந்தேனே!

தமிழ்பாலா--/காதல்/அரசியல்/தத்துவம்/போராடும் மானுடமே!

கண்ணுணின்றவொளியைக்கருத்தினை காதலன்பினையே
விண்ணுணின்றுவிளங்கியமெய்யினை வாழ் நல்லறத்தையே
யெண்ணியெண்ணியிரவும்பகலுமே போராடும் மானுடமே
உண்ணுகின்ற,உடுத்துகின்ற ,இருக்கின்ற ,அத்யாவசியத்திற்காகவே!

வானைப்போலவளைந்துகொண்டானந்த உயிராம்! தேனைத்தந்தெனைச்சேர்ந்துகலந்த காதல் பேரின்பமே

வானைப்போலவளைந்துகொண்டானந்த உயிராம்!
தேனைத்தந்தெனைச்சேர்ந்துகலந்த காதல் பேரின்பமே-காதலியே
காலமெல்லாம் உன் துணையென்று சேர்ந்து என்னாளுமே!-காதலராய்
வாழ்வெல்லாம் நம் சுகமே பெரிதென்று ஒன்றியிருப்பேனே!

காதல் தூது முன்னுரைத்த கண்வழியே நூறு பாட்டு-காம மோகமின்றி காதல்வச இளமை ஓர் பாட்டு

காதல் தூது
முன்னுரைத்த கண்வழியே நூறு பாட்டு-காம
மோகமின்றி காதல்வச இளமை ஓர் பாட்டு-கருத்தினிலே
பின்னுரைத்த நெஞ்சின்வழி இனிமையாகும் பாட்டு- நல்லறமே
மறவாது நாமே படித்திடுவோம் இன்ப பாட்டு

மழையி லெழுந்த மொக்குள்போல் ! மனதிலெழுந்தது அன்புக்காதல்!பேரின்ப வெளியும்நீயே !

மழையி லெழுந்த மொக்குள்போல் !
மனதிலெழுந்தது அன்புக்காதல்!பேரின்ப
வெளியும்நீயே !
உறவும்நீயே !
உற்றதும்நீயே !
காரணம் நீயே!
கற்பகம்நீயே
இன்பமும் நீயே!
இனிமையும் நீயே!-அன்பு
இலக்கியமும் நீயே!

விழியல்லால் வேலில்லை காதலியே என்கண்மணியே மண்ணின் பெண்கள் மேனியல்லால் வில்லில்லை தேன்மொழியே!-அவர் இடையல்லால் மின்னலில்லை -அவர் நடையல்லால் அன்னமில்லை-

விழியல்லால் வேலில்லை காதலியே என்கண்மணியே மண்ணின் பெண்கள்
மேனியல்லால் வில்லில்லை தேன்மொழியே!-அவர்
இடையல்லால் மின்னலில்லை -அவர்
நடையல்லால் அன்னமில்லை-அவர்
மொழியல்லால் கிள்ளையில்லை-அவர்
புன்னகையல்லால் முத்தில்லை-அவர்
நேர் நடையல்லால் புரட்சியில்லை

நானென்பதொன்றில்லை நீயென்னில் நானாய் இருக்கையிலே! நீயென்று வேறெண்ணி வீணில் காலம் கழிக்காதே! தானென்ற அகந்தையிலே செருக்குற்று போகாதே !

நானென்பதொன்றில்லை நீயென்னில் நானாய் இருக்கையிலே!
நீயென்று வேறெண்ணி வீணில் காலம் கழிக்காதே!
தானென்ற அகந்தையிலே செருக்குற்று போகாதே !
தனதென்ற அழிவு நோக்கி நீயும் நகன்று சாகாதே!

என்னாளும் எனைத்தொடர்ந்து இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருந்து இன்சுகத்தைத் தந்தவளே என்னவளே என்கண்ணவளே தேவதையே!

எல்லாத் தருமமும் என்னையிகழ்ந்திடத் தான் இகழாது
எல்லாம் எனதென இருந்தவளே என்துணையே என்னுயிர்க் காதலியே
என்னாளும் எனைத்தொடர்ந்து இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருந்து
இன்சுகத்தைத் தந்தவளே என்னவளே என்கண்ணவளே தேவதையே!

எனதென்பதும் உனதென்பதுமின்றி-உனதென்று எனதென்று தனதென்றுதன்னையுங்காணாது நமதென்று அன்பாலே நாமறிந்து காதலாம் பேரின்பமாகி வாழ்வதிலே நலமென்று !

எனதென்பதும் உனதென்பதுமின்றி-உனதென்று எனதென்று
தனதென்றுதன்னையுங்காணாது நமதென்று அன்பாலே
நாமறிந்து காதலாம் பேரின்பமாகி வாழ்வதிலே
நலமென்று நாமறிவோமே!

Tuesday, April 13, 2010

அதிகம் பேசினாலே வாயாடினு சொல்லுறாங்க! அமைதியாக தானிருந்தா அழுத்தக்காரினு சொல்லுறாங்க!பெண்களெல்லாமே நேர்மையான தன் சுதந்திரமா வாழுறதத்தான் பிடிக்காமலே !

அதிகம் பேசினாலே வாயாடினு சொல்லுறாங்க!
அமைதியாக தானிருந்தா அழுத்தக்காரினு சொல்லுறாங்க!பெண்களெல்லாமே நேர்மையான
தன் சுதந்திரமா வாழுறதத்தான் பிடிக்காமலே பெருமூச்சு விடுறாங்க!
தன் நாட்டுப் பெண்களுக்கே முப்பத்து மூன்றுசதவிகிதம் இட ஒதுக்கீடு என்றாலே சிலர் ஏனோ எதிர்க்கிறாங்க!
பெண்களே வேறெப்படித்தான் நாட்டுக்குள்ள வாழுறது தெரியலியே!ஆணாதிக்க
பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கொடுமைதனை களைந்திடுவோமே வாங்க!

Monday, April 12, 2010

எண்ணிலா ஆசை ஒழிய வுரைப்பாயோ? ஒருசேதி பூம்பொழில் நோக்கிய கண்ணில் வருந்தும்என் நெஞ்சே

எண்ணிலா
ஆசை ஒழிய வுரைப்பாயோ? ஒருசேதி
பூம்பொழில் நோக்கிய
கண்ணில் வருந்தும்என் நெஞ்சே

இன்பம் கொண்ட இளவேனிலைக் காணுந்தோறும் துன்பம் கலந்து அழிந்திடும் என் நெஞ்சே

இன்பம் கொண்ட இளவேனிலைக் காணுந்தோறும்
துன்பம் கலந்து அழிந்திடும் என் நெஞ்சே
குளிர்ந்த பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவந்து அழுவதேனோ?அன்பே சிதைந்தது என் தோள் - நீயும்
ஒளிமுகம்
கண்டு என்னை காணும் நாள்தான் என்றோ?

சிறகின்றி வான் தன்னில் காதலர் பறந்திடவே ஒருமந்திரமே சொன்னதே!

தூதொடு வந்த மழையே தூதொடு வந்த மழையே!
உலகமெல்லாம் பூத்தது பூத்ததில் காதலில் சிலமொழி சொன்னதே!
உள்ளமெல்லாம் பூரிக்க உவகையெல்லாம் தந்ததே!
சிறகின்றி வான் தன்னில் காதலர் பறந்திடவே ஒருமந்திரமே சொன்னதே!

!காதலன் அவனுள்ளத்தையே தொட்டும் தொடாமலே விட்டும் விடாமலே நெடுவிடை சென்றதென் இள நெஞ்சே!

எழில்வானம் மின்னுதடி காதலன் அவனின் தூதுரைத்தே!
அந்த வானம் கருவிருந்து ஆலிக்கும் அந்திப் பொழுதே!
இன்சொல் பலவுரைத்தே கண்மலர்களும் பூத்ததடி!
இளமூங்கில் இடையில் தென்றல் சென்று இன்குழல் ஊதும் பொழுதே!காதலன் அவனுள்ளத்தையே தொட்டும் தொடாமலே விட்டும் விடாமலே
நெடுவிடை சென்றதென் இள நெஞ்சே!

காதலிலே ஒன்றுபட்டால் துன்பமில்லையே- ஒரு கருத்தினிலே காதலரே ஒன்றிவிட்டால் துயரமில்லையே-காதலரில் ஒன்றான இதயத்துள்ளே ஒருவரில்லாமல் ஒருவரில்லையே

காதலிலே
ஒன்றுபட்டால் துன்பமில்லையே- ஒரு கருத்தினிலே காதலரே
ஒன்றிவிட்டால் துயரமில்லையே-காதலரில் ஒன்றான இதயத்துள்ளே
ஒருவரில்லாமல் ஒருவரில்லையே-அந்த காதலான பேரன்பான
ஒன்றுக்குள்ளே பிரிவுமில்லையே-கூடலான
ஒன்றுக்குள்ளே இனிமையாகுமே= ஊடலான
ஒன்றுக்குள்ளே கனிவுமாகுமே!

கரும்புதந்த தீஞ்சாறே, காலமெல்லாம் காத்திருந்தேன் காதலியே கனிதந்த நறுஞ்சுளையே, காத்திருப்பதில் சுகமுமுண்டு தேன்மொழியே

கரும்புதந்த தீஞ்சாறே,
காலமெல்லாம் காத்திருந்தேன் காதலியே
கனிதந்த நறுஞ்சுளையே,
காத்திருப்பதில் சுகமுமுண்டு தேன்மொழியே
அரும்புதந்த வெண்ணகையே
தேன்மொழியே திகட்டப்பேசு பொற்கிளியே!
அமுதான செந்தமிழே அன்பே,
பொற்கிளியே கிள்ளைமொழி அமுதகானமே!

Sunday, April 11, 2010

உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லாதடி உடைமையும் தராதடி -அதை வறுமையும் விடாதடி

பகுத்தறிவு -மெய்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமுமடி
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லாதடி
உடைமையும் தராதடி -அதை வறுமையும் விடாதடி
யானைக்கு இல்லை தானமும் தருமமுமடி
பூனைக்கு இல்லை தவமும் தயையுமடி -பகுத்தறிவு மெய்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமுமடி

புகைத்தாலும் அகிலு ம் நறுமணம் மாறாதடி- நம் காதலை பிரித்தாலும் என்னாளும் பிரியாதடி

அரைத்தாலும் சந்தனம் தன் மணம் மாறாதடி
சுட்டாலும் செம் பொன் தன் ஒளி கெடாதடி
கலக்கினாலும் ஆழ் கடல் சேறு ஆகாதடி
புகைத்தாலும் அகிலு ம் நறுமணம் மாறாதடி- நம் காதலை
பிரித்தாலும் என்னாளும் பிரியாதடி

விலைவாசி ஏற்றத்தைக் கண்டு கொந்தளிக்காமல் வெறுமனே வீட்டில் முடங்கிக் கிடக்காதே வாக்குரிமையை காசுக்கு விற்றுவிட்டு கஞ்சிக்கில்லாத தேசத்தில் கிடந்து !

சமுதாயம்
ஒன்றுபட்டு வாழ்கின்ற சமயந்தன்னிலே
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்காதே
தன்மனைவி விட்டு வேறுபெண்ணை ரகசியமாய்
கொண்டைமேல் பூத்தேடி திரியாதே
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லாதே
காரணமின்றி தேவையற்ற நேரத்தில்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்காதே
அடுத்தவர் மனதென்றும் தாங்காமல்
புண்படவே வார்த்தைகளைச் சொல்லாதே
ஒரு நாளும் நீ சென்று
சேராத இடம் தனிலே சேராதே
அடுத்தவர் காலத்தால் செய்த
செய்த நன்றி ஒருநாளும் மறக்காதே
கல்விச் சாலைதனில் கற்க கசடற
ஓதாமல் ஒருநாளும் இருக்காதே
உன்னிடத்து உண்மை அறியாத போதினிலே
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லாதே
பெற்றெடுத்த தாய்மை உள்ளமாம்
மாதாவை ஒருநாளும் மறக்காதே
தனியுடைமை கொடுமை செய்யும் வஞ்சகராம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்காதே
மக்கள் நலனில் அக்கறையில்லாததாம்
போகாத இடந்தனிலே போகாதே
நேருக்கு நேர் பேச திராணியற்ற கோழையாகி
போகவிட்டுப் புறம் சொல்லித் திரியாதே
அடுத்தவர்க்கு நல்லது செய்ய முயலாமல் என்றும்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்காதே
வாழ்க்கைதனை முறையாக வாழமுயலாமல் நீயும்
மனம்போன போக்கு எல்லாம் போகாதே
பொய்சொல்லி வேசம்போடும் போலி அரசியல்வாதிகள் பொய்
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரியாதே!
நல்லது நினைத்து நல்லதே செய் அதுவன்றி அல்லது செய்யும் கெட்டவராம்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே
முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன நல்ல கருத்துக்களாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்காதே
விலைவாசி ஏற்றத்தைக் கண்டு கொந்தளிக்காமல்
வெறுமனே வீட்டில் முடங்கிக் கிடக்காதே
வாக்குரிமையை காசுக்கு விற்றுவிட்டு
கஞ்சிக்கில்லாத தேசத்தில் கிடந்து தவிக்காதே!
நிதானமாய் சமூகத்தில் சிந்தித்து தெளிந்து முன்னேறாமல்
முன்கோபக் காரரோடு இணங்காதே

தமிழ்பாலா--/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/காதலாய் விளைந்தாய் நீ!,-அன்புள்ளக் கருத்துமாய் பொழிந்தாய் நீ!,- நெஞ்சினில் ராகமா யிருந்தாய் நீ!.-உலகெல்லாம்

காரணமாய் இருந்தாய் நீ!
பூரணமாய் நிறைந்தாய் நீ!
ஓவியமாய் வரைந்தாய் நீ!
காவியாமாய் நடந்தாய் நீ!
காதலாய் விளைந்தாய் நீ!,-அன்புள்ளக்
கருத்துமாய் பொழிந்தாய் நீ!,- நெஞ்சினில்

ராகமா யிருந்தாய் நீ!.-உலகெல்லாம்
ஏகமா யிருந்தாய் நீ.!,.- என்வாழ் நாளெல்லாம்
எண்ணிறந்து நின்றாய் நீ.!-அறிவினில்
ஆகமமாய் இருந்தாய் நீ!
காதல்
வானும் நீயல்லவோ,-பேரன்பின்
நிலமும் நீயல்லவோ!-தேயாத
மதியும் நீயல்லவோ! -வளரும்
கதிரும் நீயல்லவோ !-எந்தன்
ஊனும் நீயல்லவோ! -உயிரினில் உயிரான
உயிரும் நீயல்லவோ!-கண்ணின் மணியாய்
உளதும் நீயல்லவோ!-இவ்வுலகினில்
எல்லாம் நீயல்லவோ!- வாழும் நாளே
எல்லாம் துணையும் நீயல்லவோ!
தமிழ்பாலா--/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/

Saturday, April 10, 2010

எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே நான் கற்ற கல்வி இம்மா நிலம் பெறுகவே!
நான் உண்ணும் உணவு,உடை, வீடு இம்மக்கள் அனைவரும் பெறுகவே!
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!

என் காதலியே !அவளன்றி காதலும் இல்லை இல்லையடா என் தோழியே !அவளன்றி செய்யும் அருந்தவம் ஏதும் இல்லை இல்லையடா

என் காதலியே !என் தோழியே !என் துணையே !என் மனைவியே!
என் காதலியே !அவளன்றி காதலும் இல்லை இல்லையடா
என் தோழியே !அவளன்றி செய்யும் அருந்தவம் ஏதும் இல்லை இல்லையடா
என் துணையேஅவளன்றி இல்லறத்தில் ஆவதொன் றில்லை இல்லையடா
என் மனைவியே!அவளன்றி மக்கள் ஜன நாயகப் புரட்சியும் இல்லை இல்லையடா!
என் காதலியே !என் தோழியே !என் துணையே !என் மனைவியே!

கொடுமையை எதிர்த்துப் போராடாத மக்களும் புதரில் தூவிய வித்துக்களாகும்.

புதரில் தூவிய வித்துக்களாகும்.
முறையறிந்து செய்யாத தலைவனும், உறுதி இல்லாதவன் தவமும், ஒழுக்கமில்லாதவன் அழகும், கொடுமையை எதிர்த்துப் போராடாத மக்களும்
புதரில் தூவிய வித்துக்களாகும்.

ஊடலோடு சேராத காதலும் இன்பத்தைத் தராது

ஊடலோடு சேராத காதலும் இன்பத்தைத் தராது
தாளத்தோடு சேராத பாட்டும்இன்பத்தைத் தராது., இரந்து உண்பவனுடைய இரைச்சலும் இன்பத்தைத் தராது., ஒண்ட இடங்கொடுத்த மனிதர் வீட்டுப் பொருளை விரும்புவதும் இன்பத்தைத் தராது.தனியுடைமை கொடுமைதனை எதிர்க்காத தன்மையும் இன்பத்தைத் தராது

உயர்ந்த நெறியாகுமடா., நல்லோராம் பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகுமடா.

உயர்ந்த நெறியாகுமடா.
இளமைப் பருவத்தில் கற்பதும்உயர்ந்த நெறியாகுமடா., தந்தையையும் தாயையும் போற்றி வணங்குவதும்உயர்ந்த நெறியாகுமடா., நல்லோராம் பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகுமடா.

ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.வாக்குரிமை விற்பவன் குணத்தையும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது

குருடனுக்கு மனைவியின் அழகும்ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது., நூலைக் கற்றுப் பொருளை அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும்ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது., இசையாம் பண்களைத் தெரியாதவன் யாழின் இசையைக் கேட்பதும், ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.வாக்குரிமை விற்பவன் குணத்தையும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது

அறிவுடையார்க்கு நோய்களாகுமடா. விருந்தினர் இல்லாமல் உண்ட பகலும், மனைவியில்லா இரவும், வறியவர்க்கும் கொடுக்காத காலையும் அறிவுடையார்க்கு நோய்களாகுமடா.

அறிவுடையார்க்கு நோய்களாகுமடா.
விருந்தினர் இல்லாமல் உண்ட பகலும், மனைவியில்லா இரவும், வறியவர்க்கும் கொடுக்காத காலையும் அறிவுடையார்க்கு நோய்களாகுமடா.

அழியாத் தன்மை உடையவரடி! கடலின் அலைபோல் எழுந்து தடுமாறாத அறிவுடையவனும் , நுட்பமான நூல்களின் முடிவைக் கண்டானும், மனக்கலக்கம் ஒழித்தவனும், அழியாத் தன்மை

அழியாத் தன்மை உடையவரடி!
கடலின் அலைபோல் எழுந்து தடுமாறாத அறிவுடையவனும்
, நுட்பமான நூல்களின் முடிவைக் கண்டானும்,
மனக்கலக்கம் ஒழித்தவனும், அழியாத் தன்மை உடையவரடி!

முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வானடா. உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவனடா. பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவனடா. இவருடன் நட்பு

இவருடன் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகுமடா.
முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வானடா.
உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவனடா.
பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவனடா.
இவருடன் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகுமடா.

நல்லோர் சொல்லைக் கேட்காத மக்கள் குணமும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்

ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்.
அழையாத ஆட்டத்தைப் பார்ப்பதும், மது உண்டவன் சொல்லும், நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறை செல்வதும், நல்லோர் சொல்லைக் கேட்காத மக்கள் குணமும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்

கொடுமையைக் கண்டு எதிர்க்க முன்வராத தேசமும் ஒருவருக்கும் நன்மை தராது

கற்பிக்க இயலாதவர் ஊரிலிருத்தலும்ஒருவருக்கும் நன்மை தராது., கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத சபையும்ஒருவருக்கும் நன்மை தராது., பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஒருவருக்கும் நன்மை தராது.
கொடுமையைக் கண்டு எதிர்க்க முன்வராத தேசமும் ஒருவருக்கும் நன்மை தராது

வாக்குதனையும் காசுகொடுத்து வாங்கிடவும் கூடாது இவை எல்லாமே துயரத்தைத் தருமடா!.

இவை எல்லாமே துயரத்தைத் தருமடா.
பழகாத துறையில் இறங்கிப் போகக்கூடாது, விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும் ஆகாது, வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் கூடாது
வாக்குதனையும் காசுகொடுத்து வாங்கிடவும் கூடாது
இவை எல்லாமே துயரத்தைத் தருமடா!.

காதலில் ஊடலாலே காதலியர் காதலரை துன்பம் செய்வாரடி,

பல்லினாலே துன்பம் செய்யும் பாம்படியோ-காளையோ தன்
கொம்பினாலே துன்பம் செய்யுமடியோ, காதலில் ஊடலாலே
காதலியர் காதலரை துன்பம் செய்வாரடி,

நல்ல அரசியல் தத்துவத்தை நடைமுறை அழகு சேர்க்குமே போராட்டமே!

நிலத்துக்கு அழகுசேர்க்குமே , நெல்லும் கரும்புமே;
குளத்துக்கு அழகுசேர்க்குமே தாமரையே பெண்மை
நலத்துக்கு, அழகுசேர்க்குமே நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுமே; நல்ல அரசியல்
தத்துவத்தை நடைமுறை அழகு சேர்க்குமே போராட்டமே!
.

மக்கள்ஜனநாயக புரட்சிகர போராளிக்கும் வெற்றிபெறும் காலம்வரையினில் தூக்கம் இல்லையடா!

கள்ளமனம்' கொண்டார்க்கும் தூக்கம் இல்லையடா!; காதலியை நினைத்து
உள்ளம் தொடர்வார்க்கும் தூக்கம் இல்லையடா!; ' பொருள்தேடி அலைந்து
செல்லும் ' மனிதர்க்கும் தூக்கம் இல்லையடா!; சேர்த்த அந்த பொருள்
காப்பார்க்கும் . தூக்கம் இல்லையடா! மக்கள்ஜனநாயக புரட்சிகர போராளிக்கும் வெற்றிபெறும்
காலம்வரையினில் தூக்கம் இல்லையடா!

மனித நேயத்தில் உலக வாழ்க்கையும் செழித்திடுமே!

கல்லில் பிறக்கும், கதிர் மணியடியோ!; காதலி
சொல்லில் பிறக்கும்,பேரின்பமே - மழலையின்
இதழில் பிறக்கும், அன்புவெள்ளமே, மனித நேயத்தில்
உலக வாழ்க்கையும் செழித்திடுமே!

என்னிரண்டு கண்ணும் எண்ணிரண்டு வயது காதலியைத் தேடுதே கனவி னிலும் நினைவிலும் மனது நினைந்து ஏக்கமுற்றே அங்குமிங்கும் அலைந்தலைந்து வாட

என்னிரண்டு கண்ணும் எண்ணிரண்டு வயது காதலியைத் தேடுதே
கனவி னிலும் நினைவிலும்
மனது நினைந்து ஏக்கமுற்றே அங்குமிங்கும் அலைந்தலைந்து வாடுதே-
-தனிமையிலே அமைதியென்று காட்டினிலே அலையென்று கூறிடுவார்-அதைவிடுத்து
தனிமையிலே இனிமையில்லை இல்லறமே நல்லறமே என்று ஏற்றுக்கொண்டேன்
தாம்பத்யம் என்பது ஒருபிறவிதான் அனுபவிக்கும் நல்ல குடும்பத் தலைவானானேனே!

ராகம் பாடி உற வாடியதே வண்ணப் பைரவி தோடி ராகமே-மலர் மஞ்சத்தி லேசென்று கூடி

ராகம் பாடி
உற வாடியதே
வண்ணப் பைரவி தோடி ராகமே-மலர்

மஞ்சத்தி லேசென்று கூடி,காதலனே காதலிலே
மதுகுடிக்கும் வண்டாகி மயங்கி கிடக்கும் காதலியின் நாடித் துடிப்பும் ஓடி- அடித்தேனே

கன்னக் கதுப்பிலும் தேனிதழ்
வாசலிலும் காயங்கள் தந்ததாடி!
காளையவனின் அமுத இதழோடி?

காதலாலே நானும் தினம் வாடி யிருப்பது உந்தன் வஞ்சமோ? - வார்ப்பான இரும்புதான் உன் நெஞ்சமோ?

காதலாலே நானும் தினம்
வாடி யிருப்பது உந்தன் வஞ்சமோ? -
வார்ப்பான இரும்புதான் உன் நெஞ்சமோ? - உன்மீது நான்கொண்டகாதல்
மையல் பயித்தியம் கொஞ்சமோ? -
என்காதலியே உன்னை நேசித்தேன் என்று நீயும் - ஒரு
வார்த்தை என்னிடம் உரைக்கவும் பஞ்சமோ?

உடல் கதிரவன் வெம்மையும் விஞ்சி வாடுது அடிகாதலி நீ தருவாயா? உயிர் கட்டி அணைத்தொரு முத்தமே - தந்தால் காலமெல்லாம் துணைவருவேன்

மாலை தென்றல் வந்தது துள்ளியே - அழகு
வான்மதி குளிரொளி வீசிடும் அள்ளியே.
தேனாய் குயில் சத்தமே - கேட்கக்
தோன்றுது எந்தன் சித்தமே; - மயக்கிடும்
காதல் மன்மதன் பித்தமே; உடல்
கதிரவன் வெம்மையும் விஞ்சி வாடுது அடிகாதலி நீ தருவாயா? உயிர்
கட்டி அணைத்தொரு முத்தமே - தந்தால்
காலமெல்லாம் துணைவருவேன் நித்தமே.

உள்ளம் மெல்லமெல்ல காதல் செய்ய நினைந் துருகுதே;-அன்பு முத்தம் மலருதே;-ஆனந்த கண்ணீர் பெருகுதே; - எந்தன் தலை உச்சிக் கேறிக் காதல் ப

உள்ளம் மெல்லமெல்ல காதல் செய்ய நினைந் துருகுதே;-அன்பு
முத்தம் மலருதே;-ஆனந்த கண்ணீர் பெருகுதே; - எந்தன் தலை
உச்சிக் கேறிக் காதல்
பித்தம் கிறுகி றென்று வருகுதே;
கண்ணில் பேசும் மொழியெல்லாம் இதழும் பேச துடிக்குதே-என்
கருத்தில் நின்ற காதல் பாடம் தினந்தோறும் படிக்குதே!
மண்ணில் பூத்த பூவின் தேனெல்லாம் வண்டினமும் குடிக்குதே
மாலை நேரத் தென்றலிலே தென்னங்கீற்றும் கூத்துக்கட்டி நடிக்குதே!

தென்றலே புலியாகவே மாறிச் சீறுதே-எண்ணம் தடு மாறுதே; தேனிதழ் ஊறுதே; - ஆசைவெள்ளம் எல்லைமீறி அன்பு அணையையும் மீறுதே.

அன்புக் காதலியே உன்னை என்னுள்ளம் தேடுதே;-அதனாலே என்
மனம் வாடுதே; உயிர் தள் ளாடுதே; - காதல்
மயக்கத்தினாலே நினைவுகள் எங்கோ ஓடுதே.

தென்றலே புலியாகவே மாறிச் சீறுதே-எண்ணம்
தடு மாறுதே; தேனிதழ் ஊறுதே; -
ஆசைவெள்ளம் எல்லைமீறி
அன்பு அணையையும் மீறுதே.

Friday, April 9, 2010

காதலியே தேவதையே காத்திருந்தேன் கடற்கரையினிலே மாலை இளந்தென்றலோடு நோக்கரிய நோக்கே கொண்டவளே நுணுக்கரிய நுண் உணர்வே தந்தவளே

காதலியே தேவதையே காத்திருந்தேன் கடற்கரையினிலே மாலை இளந்தென்றலோடு
நோக்கரிய நோக்கே கொண்டவளே நுணுக்கரிய நுண் உணர்வே தந்தவளே-காதல் பேரின்ப
காணரிய பேரொளியே கண்மணியே காவியமே ஓவியமே மண்விண்ணே!
ஆற்றின்ப வெள்ளமே தோற்றச் சுடர் ஒளியாய்ச் சிரித்தவளே சின்னவளே என்னவளே!

விண்பார்க்கும் மனிதெரெல்லாம் மண்பார்த்துப் போராட எழுந்தால் ஓர்மாற்றம் உருவாகுமன்றோ?

காண்பதெல் லாங்கண் மயக்கமென் றேமனங் கண்டிருந்தும் காதலிலே களித்திருந்தோமே!
உயிரோடு உயிராகவே
கண்பார்த்து கருத்துபார்த்து மெய்பார்த்து ஓர்யோக நிலையில் மிதந்திருந்தோமே!
பண்பார்த்த துன்னைஇணைவதென் றோ காதல் பேரின்ப எல்லையின் விளக்கமன்றோ!
விண்பார்க்கும் மனிதெரெல்லாம் மண்பார்த்துப் போராட எழுந்தால் ஓர்மாற்றம் உருவாகுமன்றோ?-சோற்றினை மட்டும்
உண்பார்க்கு சொரணையில்லை பகுத்தறிவு உணர்வுடைய மாந்தர்க்கே பூலோகசுவர்க்கம் ஆகிடுமே!

என்ன சஞ்சலமடா? என்ன சபலமடா? எதையோ நினைத்து எதையோ நடத்தி எவரெவர்க்கோ? எப்படியோ?என்னென்னமோ?ஏதேதோ ?இவ்வுலகினிலே நடப்பதேனோ?

உண்பது படியடா உடுப்பது நான்கு முழமடா,மனித மனங்களிலே
எண்பது கோடி நினைந்து எண்ணுவதுதான் ஏனடா? - கண்புதைந்த
மனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாகுற வரைக்குமே சஞ்சலமே தானடா!
ஒன்றை நினைக்கின்றேன் வேறொன்றே நினைவுக்கு வருவதேனோ?
- ஒன்றை
நினையாத முன்னே - அந்த் ஒன்றே நினைவினில் வந்து நிற்பதுமேனோ?
என்ன சஞ்சலமடா? என்ன சபலமடா?
எதையோ நினைத்து எதையோ நடத்தி
எவரெவர்க்கோ? எப்படியோ?என்னென்னமோ?ஏதேதோ ?இவ்வுலகினிலே நடப்பதேனோ?

மோனம் என்பது ஞான வரம்பாகுமடி முத்தம் என்பது காதலின் வரவாகுமடி அன்பு என்பது வாழ்வின் தவமாகுமடி அறிவு என்பது சமூகத்தின் அமுதாகுமடி சுதந்திரம் என்பது உலக

மோனம் என்பது ஞான வரம்பாகுமடி
முத்தம் என்பது காதலின் வரவாகுமடி
அன்பு என்பது வாழ்வின் தவமாகுமடி
அறிவு என்பது சமூகத்தின் அமுதாகுமடி
சுதந்திரம் என்பது உலகத்தின் உயிர்நாடியடி

அன்புக் காதலியே பழகு மொழிச் சித்திரமே பாசுரமே,வாசகமே நீயும் காதலன் என்னை அன்பாலே தாங்கிடுவாயே!

பையச் பையச் சென்றால் வையம் மட்டுமல்ல தாங்கும்-அன்புக் காதலியே
பழகு மொழிச் சித்திரமே பாசுரமே,வாசகமே நீயும் காதலன் என்னை அன்பாலே தாங்கிடுவாயே!

மக்கள் ஜனநாயகம் இல்லாத நாட்டு மனிதரிடம் விலங்குகள் மாமன் மச்சான் முறைகொண்டாடுமே!

காதல்
மொழியிலார்க்கு காதலின்பம் தெரிவதில்லை -அன்பு
விழியிலார்க்கு ஏது வாழ்வு விளக்கு?
சுதந்திரம்
இல்லார்க்கு உயிர்மூச்சு இருந்தும் பயனேதுமில்லை-
மக்கள்
ஜனநாயகம்
இல்லாத நாட்டு மனிதரிடம் விலங்குகள் மாமன் மச்சான் முறைகொண்டாடுமே!

-காதலியே கண்இரண்டும் ஒன்றையே காணுதடி நம் நெஞ்சிரண்டும் ஒன்றையே தேடுதடி!

காதல் தலைவனும் தலைவியும் ஒன்றாகவே கண்ணாலே
பேசும் ஒருகாதல் தேன்பார்வையிலே -காதலியே
கண்இரண்டும் ஒன்றையே காணுதடி நம் நெஞ்சிரண்டும் ஒன்றையே தேடுதடி!

காதலர்க்குச் சென்ற இடம் எல்லாம் கனிவாகும் காதலர்க்கு காணுமிடமெல்லாம் இனிதாகும்

காதலர்க்குச்
சென்ற இடம் எல்லாம் கனிவாகும்
காதலர்க்கு
காணுமிடமெல்லாம் இனிதாகும்
காதலிக்கும் காலமெல்லாம்
காதலர்க்கு -
கனவெல்லாம் நனவாகும்-காதலர்க்கு
நனவெல்லாம் கனவாகும்

இல்லாளின் துணையிருக்க சமூகத்திலும் உயர்விருக்குமடா! இல்லாளின் துணையோடு புரட்சியும் , புதுமையும் காண்போமடா!

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றும் இல்லையடா!
இல்லாளும் இல்லாளே ஆனபோதே வாழ்ககையே ஒன்றும் இல்லையடா!
இல்லறமே நல்லறமாய் ஆகிவிடும் மனையாளே உள்ளபோதே!
இல்லாளின் கனிவினிலே வாழ்வின் பேரின்பமே உள்ளதடா!
இல்லாளின் துணையிருக்க சமூகத்திலும் உயர்விருக்குமடா!
இல்லாளின் துணையோடு புரட்சியும் , புதுமையும் காண்போமடா!

என்னாகும் ?என்னாகும்?மண்ணாகும் மண்ணாகும் மண்ணின் குடம் உடைந்தபோதே!

பொன்னாகும் பொன்னாகும் பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என்னாகும் ?என்னாகும்?மண்ணாகும் மண்ணாகும்
மண்ணின் குடம் உடைந்தபோதே!

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் - ஆனால் !காதலி நீயும் கண்ணாலே சுட்டாலே வெம்மையாகுமே!

நம்காதலே
நீர் மேல் எழுத்துக்கு நேராகிப்போனால்
நம்காதல் என்னாகுமோ?.
நம்காதலே கல்மேலே சிற்பமாகவே !
நாளெல்லாம் கல்லிலும் கவிபாடுமோ?
சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் - ஆனால் !காதலி நீயும் கண்ணாலே
சுட்டாலே வெம்மையாகுமே!

Thursday, April 8, 2010

அருவி நீர்வீழ்ந்ததென்று யாரோ? சொன்னார்கள் அருவி வீழ்ந்துவிடவில்லை!

அருவி
நீர்வீழ்ந்ததென்று யாரோ? சொன்னார்கள்
அருவி வீழ்ந்துவிடவில்லை!
விழுந்து ,எழுந்து,ஓடி,
பல மேடு பள்ளங்களைக் கடந்து,
பல தேசங்களையெல்லாம் செழிக்கவைத்து,
எல்லா மக்களையும் சிரிக்கவைத்து,
உலகமெல்லாம் வலம்வந்து,
கடலாகி வெற்றிகொண்டு அலையடித்து வெண்ணுரைச் சிரிப்பினில் சிறகடிக்கவில்லையா?அது
ஆர்ப்பரிப்பது தெரியவில்லையா?

-காதலாலே விம்முற்ற நெஞ்சினில் தோன்றிய இன்ப இனிய ஓர் அனுபவமே !உயிரினில் தோய்ந்தது ஓர்பொழுதே ! அதுவும் சிறுநுரை போல மெல்ல மெல்ல இருந்தும் இல்லாததாய் !

உயிர்தவச் சிறிதடி காதலோ பெரிதடி
மண்மீது மலரும் நினைவுகளோடே!அன்பினில் கலந்த ஆசையில் இணைந்தடி
ஒரு மனிதத்தின் பார்வையடி-அது நனவாகிடும் கனவுகளோடே!
மல்லாந்து நோக்குது விண்ணையடி!-காதலாலே விம்முற்ற நெஞ்சினில் தோன்றிய இன்ப இனிய ஓர் அனுபவமே !உயிரினில் தோய்ந்தது ஓர்பொழுதே ! அதுவும்
சிறுநுரை போல
மெல்ல மெல்ல இருந்தும் இல்லாததாய் ஆகிடுமே!மறுபொழுதே!

இளமை இனிதானது !இளமை உள்ளபோதே இனியதை செயலாற்றிவிடு.! முதுமை நன்றானது,முதுமை முடியுமுன்னே மனிதத்தை போற்றிவிடு!

இளமை இனிதானது !இளமை உள்ளபோதே இனியதை செயலாற்றிவிடு.!
முதுமை நன்றானது,முதுமை முடியுமுன்னே மனிதத்தை போற்றிவிடு!
உயிர் நன்றானது ,உயிர் உள்ளபோதே மனிதனாக வாழ்ந்துவிடு!, நல்லோனாய் வாழ்தல் இனிதானது !, நல்லனசெய்வதுதான் வாழ்வின் வேதமாகுமடா!....
, புயற்காற்று வீசிடும் சமூகவாழ்வுதன்னில் எதையும் எதிர்த்துப் போராடி! ,இம்மையில் நம்வாழ்வுதனை மல்லிகை மலர்மணாமாய் மணத்திட வைக்க மறவாதடா!

Wednesday, April 7, 2010

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் -இங்கு இல்லாமை இல்லாத பேரின்பமே வேண்டுமடா!

வாழ்க்கையில் இன்பம் பல கோடியடா!
வாழ்விதிலே இன்பம் இன்னும் எத்தனையோ இன்பமடா!
ஐம்புலனாலே நுகரும் இன்பத்திற்கு அளவில்லையடா!.
மழலையை அரவணைப்பது மெய்க்கு இன்பமடா!
மட்டற்ற சுவைதரும் நறுங்கனி உண்பது வாய்க்கு இன்பமடா!
மண்ணின் இயற்கைதனை காண்பது கண்ணுக்கு இன்பமடா!
மலரின்மணமாய் நுகர்வது மூக்குக்கு இன்பமடா!
மதுர செந்தமிழ் கேட்பது செவிக்கு இன்பமடா!
மாசற்ற கல்வி கற்பது அறிவுக்கு இன்பமடா!
மறவாது அனைவர் இடத்தும் அன்புகாட்டுவது இன்பமடா!
இவற்றிற்கெல்லாம் மேலான இன்பம் இம்மண்ணில் உண்டா?
எனக்கேட்கும் கேள்விக்கும் உண்டு பதிலே
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் -இங்கு
இல்லாமை இல்லாத பேரின்பமே வேண்டுமடா!












?

Monday, April 5, 2010

தன்வாக்குரிமை விலைக்கு விற்றுவிட்டு தரித்திரராய் திரிவாரடி கிளியே! தன்னாட்டின் விலைவாசி தான்கண்டும் சூடுசுரணை காணாரடி கிளியே!

அன்னையும் பிதாவையும் முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு!
அலமாரியில்ஆயிரம் சாமிகள் வைத்து கும்பிடுவாரடி கிளியே!!
தன்னைமட்டும் எண்ணியே வாழ்க்கையை ஓட்டுவாரடி கிளியே!
தனியுடைமை கோலோச்சும் தட்டுக் கெட்ட நாட்டினிலே!
தன்வாக்குரிமை விலைக்கு விற்றுவிட்டு தரித்திரராய் திரிவாரடி கிளியே!
தன்னாட்டின் விலைவாசி தான்கண்டும் சூடுசுரணை காணாரடி கிளியே!

நாதியற்று இருக்கின்றோம் என்று தாழ்வுற்று கிடந்திடவேண்டாம்!- நம்பிக்கையில் நாமெழுந்தால் நல்லகாலம் நிச்சயமாய் நமக்குண்டு!வீதியில் இறங்காமல் விடியாது

போரட்டமில்லாமல் இங்கு யாராட்டமும் செல்லாதடா!
பொறுமைக்கும் ஓரெல்லை உண்டு பொங்கிவிட்டால் அணையேது?
வீதியில் இறங்காமல் விடியாது எதுவுமடா!
விதியை எண்ணி வேதனையில் வீழ்ந்துவிட்டால் வாழ்வேது?
நாதியற்று இருக்கின்றோம் என்று தாழ்வுற்று கிடந்திடவேண்டாம்!-
நம்பிக்கையில் நாமெழுந்தால் நல்லகாலம் நிச்சயமாய் நமக்குண்டு!

சம்மந்தமில்லாத விஷயத்துல வீணா தலையிட்டு மூக்கொடை வாங்காதடா! ஒண்ணுமில்லாத காரியத்துல நுழைந்து உம்பேரத்தான் கெடுக்காதடா!

ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரியில சண்டையாம்
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போனது மண்டையாம்
ஊர்வம்ப வெலைக்கு வாங்க வேண்டாண்டா! ராமையா!
வீதியில போற சனியனத்தான் வீட்டுல கொண்டாந்து விடாதடா சோமையா!
சம்மந்தமில்லாத விஷயத்துல வீணா தலையிட்டு மூக்கொடை வாங்காதடா!
ஒண்ணுமில்லாத காரியத்துல நுழைந்து உம்பேரத்தான் கெடுக்காதடா!

மாமன் மகளின் முன்னாலே எகடாசி பேசாத அத்தை மகனுமில்ல அத்தை மகன வம்புக்கிழுக்காத மாமன் மகளுமில்ல!

கம்மங்கருதக் கண்டா கை சும்மா இருப்பதில்ல!
மாமன் மகளக் கண்டா வாயும் சும்மா இருப்பதில்ல??
கதிரக் கசக்குன கைக்கும் வம்பளக்கும் வாய்க்கும்
கால நேரம் என்பதில்ல!கணக்கு வழக்கும் இல்ல இல்ல!
மாமன் மகளின் முன்னாலே எகடாசி பேசாத அத்தை
மகனுமில்ல அத்தை மகன வம்புக்கிழுக்காத மாமன் மகளுமில்ல!

அவளுக்கு துணையா அவனும் அவனுக்குத் துணையா அவளும் இந்த உலகினில் புறந்து இருப்பதே இயற்கையின் வரப்பிரசாதமே!

அம்மி அடிச்சன்னைக்கே!, குழவியும் அடிச்சு இருக்குமே!.
அவபுறந்தப்பவே அவனும் புறந்திருக்கான் அடியே ஆத்தாடி!
அவளுக்கு துணையா அவனும் அவனுக்குத் துணையா அவளும்
இந்த உலகினில் புறந்து இருப்பதே இயற்கையின் வரப்பிரசாதமே!
அம்மி அடிச்சன்னைக்கே!, குழவியும் அடிச்சு இருக்குமே!.
அவபுறந்தப்பவே அவனும் புறந்திருக்கான் அடியே ஆத்தாடி!

Saturday, April 3, 2010

காதல் என்றும் தோற்பதில்லையே ! காதலர்களோ! சிலபொழுது தோற்கின்றார்களே!

காதல் என்றும் தோற்பதில்லையே !
காதலர்களோ! சிலபொழுது தோற்கின்றார்களே!
காதலர்கள் தோற்றுவிட்டு காதல் தோற்றதென்று கதைக்கின்றார்களே!விரும்பாதவர்களோ?
காதலர்களை தோற்கவிட்டு காதல் தோற்றதென்று சொல்கின்றார்களே!
கண்கள் மறுப்பதில்லையே நெஞ்சும் ஒதுக்குவதில்லையே
காமம் நீக்கிய அன்புக் காதலே என்றும் தோற்றதில்லையே!-உடலின்
காதல் ஓடிபோகும் உள்ளத்தின் காதல் கூடி நிற்கும்!
சாதிபார்த்து மதம்பார்த்து இனம்பார்த்து மொழிபார்த்து தேசம் பார்த்து
நேசம் என்றும் வைப்பதில்லையே! நம்பிக்கை இல்லாத காதல்-உண்மைக்
காதலாகவே உருவமாவதில்லையே!உண்மைக்
காதலே தன்னையே மாய்த்துக் கொள்ளும் கோழைக் காதல் இல்லையே -உண்மைக்
காதலே எதிர்நீச்சல் அடித்து சமுதாயத்தில் வெற்றிநடை போட்டிடுமே!

அழகான தேவதையே !என்ற ஒரு தேனான வார்த்தைக்கு ஈடு இணை எதுவும் இல்லையே!-அதனாலே !உன்னை நானே அழகான தேவதையே என்றே அழைக்கின்றேனே!

அழகான தேவதையே !
உன்பெயர்தான் தெரியவில்லை
எந்த பெயர்தான் சொல்லியே உன்னை நான் அழைத்திடவோ?
மலர்களின் பெயரைத்தான் கூறிடவா?
நதிகளின் பெயரைத்தான் கூறிடவா?
மண்ணின் பெயரைத்தான் கூறிடவா?
மரங்களின் பெயரைத்தான் கூறிடவா?இயற்கை அத்தனையும் ஒருசேர்த்து ஒருபெயராக்கியே!
எந்த பெயரைத்தான் கூறினாலும்! உன்னை அழைத்திடவே!
அழகான தேவதையே !என்ற ஒரு தேனான வார்த்தைக்கு ஈடு இணை எதுவும் இல்லையே!-அதனாலே !உன்னை நானே
அழகான தேவதையே என்றே அழைக்கின்றேனே!

இந்த நாணத்தையே நீயும் எந்த பாவையிடம் தான்கற்றுக் கொண்டாயோ? அந்த நாணத்தையே அந்தபாவையும் எங்குதான் கற்றுக் கொண்டாளோ?

தொட்டாச் சிணுங்கியே -ஏ ஏஏ
தொட்டாச் சிணுங்கியே
இந்த நாணத்தையே நீயும் எந்த பாவையிடம் தான்கற்றுக் கொண்டாயோ?
அந்த நாணத்தையே அந்தபாவையும் எங்குதான் கற்றுக் கொண்டாளோ?

நாவினை அடக்காத மனிதனே நாட்டினிலே நாதியற்று போயிடுவானே! நாவினால் சுட்டவடு ஆறாது என்று எம்பாட்டன் வள்ளுவனும் சொன்னானே!

நாக்கே நாக்கே மூன்று அங்குல நாக்கே நாக்கே - நீயெப்படி? , ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொல்லும் திறமையே கொண்டு இருக்கின்றாயோ?
நாவினை அடக்காத மனிதனே நாட்டினிலே நாதியற்று போயிடுவானே!
நாவினால் சுட்டவடு ஆறாது என்று எம்பாட்டன் வள்ளுவனும் சொன்னானே!

அகங்காரம் முன்னே சென்றால் அழிவு உன் பின்னே வந்திடுமடா! தனியுடைமை என்னாலும் பேரழிவினை சந்திக்காது இருக்காதடா!

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரையடா;-அதிலேறி நீயும் சவாரி செய்தாலே அது உன்னையே ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விட்டிடாது புரிஞ்சுக்கோடா!
அகங்காரம் முன்னே சென்றால் அழிவு உன் பின்னே வந்திடுமடா!
தனியுடைமை என்னாலும் பேரழிவினை சந்திக்காது இருக்காதடா!

வாழ்க்கைப் பயணம் ஒன்றும் எளிதானது அல்லடா வாழ்ந்து பார்ப்பதுதான் வாழ்க்கையின் இலக்கணமடா! வாழ்க்கை என்பது போராடும் களமாகுமடா!.

கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாமடா!-வாழ்வினில் நீ நடந்திடும்
. உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது தானடா!
வாழ்க்கைப் பயணம் ஒன்றும் எளிதானது அல்லடா
வாழ்ந்து பார்ப்பதுதான் வாழ்க்கையின் இலக்கணமடா!
வாழ்க்கை என்பது போராடும் களமாகுமடா!.

Friday, April 2, 2010

காதலி -; என்னைப் பிரமிக்கவைப்பது காதல் கற்பனையின் நீளம் மட்டுமல்ல! உனது மனிதநேயமும்,மக்கள்ஜன நாயகபுரட்சியின்மீது நீ வைத்த கொள்கைபிடிப்பும்

காதலன் -:
என்னைப் பிரமிக்கவைப்பது உன்மீதுகொண்ட காதல் கற்பனையின் நீளம் மட்டுமல்ல!
உனது தன்னிகரில்லாத அன்பின் ஆழமும் அகலமும் தானடி!
காதலி -;
என்னைப் பிரமிக்கவைப்பது உன்மீதுகொண்ட காதல் கற்பனையின் நீளம் மட்டுமல்ல!
உனது மனிதநேயமும்,மக்கள்ஜன நாயகபுரட்சியின்மீது நீ வைத்த கொள்கைபிடிப்பும் தானடா!

உன் கனிந்த மெல்லிய இதழ்களே! தேன்பிளிற்றும் செம்மாதுளை மொட்டென திகழ்ந்ததே!

உனது இனிக்கும் இதழ்களே!
அமுதம் ததும்பும் பவழச் செப்போ?-அடியே காதலி
உன் கனிந்த மெல்லிய இதழ்களே!
தேன்பிளிற்றும் செம்மாதுளை மொட்டென திகழ்ந்ததே!

அந்த காதளவு நீண்ட நீலோத்பலத்தின் இதழைப் போலவே-ஓராயிரம் கதைசொல்லி காதலின் உச்சத்தை தேடும் சுவர்க்கமானதே!

உனது பார்வை அகன்று சிரிக்கின்ற
உன்செவ்வரி ஓடிய கருநிறக் கண்களே
சிறகுவிரித்த தேன்வண்டுகளோ?அவை மீண்டும்
கருநீலக் கண்களாகியே -அந்த
காதளவு நீண்ட நீலோத்பலத்தின் இதழைப் போலவே-ஓராயிரம்
கதைசொல்லி காதலின் உச்சத்தை தேடும் சுவர்க்கமானதே!

உன்பார்வையோ! இந்த பிரபஞ்சத்தையே ஈடாகக் கேட்குதடி! உன் இலக்கோ! பொதுவுடைமை சமுதாய விடியலையே தேடுதடி!

உனது கண்களோ?காசிப்பட்டின் மென்மையடி
உன்கண்ணின் போதையோ? கள்ளின் போதையை விஞ்சி நிற்குதடி!
உன்னிதழோ! காட்டுத் தேனின் இனிமையடி!
உன்னழகோ! கார்காலத்து மின்னலின் ஜொலிப்படியோ!
உன்பார்வையோ! இந்த பிரபஞ்சத்தையே ஈடாகக் கேட்குதடி!
உன் இலக்கோ! பொதுவுடைமை சமுதாய விடியலையே தேடுதடி!

ஒன்றும் பேசாமலே ஓராயிரம் கோடி கருத்துக்களையே கூறுகின்ற காதலாம் இலக்கணத்தின் காரணத்தையே! என்னென்று சொல்லவோ? ஏதென்று சொல்லவோ?

ஏழு-
வண்ணத்தில் குழைத்ததாகவே - அன்பாலே ஒரு
எண்ணத்தில் ஓடியதாகவே-ஓர்
எழுத்தினில் அமைத்து பேசாமலே-மவுனமாகவே
பேசுகின்ற காதலினையே என்னென்று சொல்லவோ?
ஏதென்று சொல்லவோ?ஒன்றும்
பேசாமலே ஓராயிரம் கோடி கருத்துக்களையே
கூறுகின்ற காதலாம் இலக்கணத்தின் காரணத்தையே!
என்னென்று சொல்லவோ?
ஏதென்று சொல்லவோ?

வான்வெளியும் அடங்கியதே-அகத்தினில் தென்றலாய்
மாருதமும் தவழ்ந்ததே!
காதலியின் உள்ளந்தன்னிலே-காதல்
காற்றாகி சுழலுதே!
அலைகடலும் ஓய்ந்தது-அன்பு
அகக்கடல்தான் ஓய்வெப்போது?

யார்தான் நம்புவாங்க? அட யார்தான் நம்புவாங்க?அடி விட்டில்பூச்சிக்கு விளக்கினையே பிடிக்கவில்லை என்று சொன்னாலே! யார்தான் நம்புவாங்க?

யார்தான் நம்புவாங்க? அட
யார்தான் நம்புவாங்க?அடி
விட்டில்பூச்சிக்கு விளக்கினையே பிடிக்கவில்லை என்று சொன்னாலே!
யார்தான் நம்புவாங்க?
யார்தான் நம்புவாங்க?
காதலர்க்கு காதலினையே பிடிக்கவில்லை என்றுசொன்னாலே
யார்தான் நம்புவாங்க? அட
யார்தான் நம்புவாங்க?அடி
காதலியர் இதழோரத்தில் விளையாடும் இள நகையே
காதலரையே எவ்விதமாய் சித்தபிரமை கொள்ள செய்கின்றதோ?
காதலியரின் கடைக்கண் பார்வையிலே
காதலரே கட்டுண்டு கிடந்து திகைப்பதேனோ?

அழகுதான் உண்மையாகும் உண்மைதான் அழகாகும் இதை நான்மட்டும் சொல்லவில்லை அன்றே ஜான்கீட்ஸ் என்ற ஆங்கில கவிஞனும் சொல்லிவிட்டானே!

அழகுதான் உண்மையாகும் உண்மைதான் அழகாகும்
இதை நான்மட்டும் சொல்லவில்லை அன்றே ஜான்கீட்ஸ் என்ற
ஆங்கில கவிஞனும் சொல்லிவிட்டானே!

இயற்கைக் காதலன்புக்கு பூவேது? வாசமேது? புனலேது? அனலேது? ஆறேது? குளமேது? கோடியேது? குலமேது? சாதியேது? மதமேது? இனமேது? மொழியேது? நிறமேது?

எந்தன் சிந்தைக்கு இன்பமே தரும் எனதினிய நல்ல சொந்தமுள்ள கிளியே!
மோகனத்தின் ஜூவசுரங்கள் தென்றலில் மிதந்து இதமாய் வரும்போதினிலே -மல்லிகையின்
மோகன மணத்துடன் பாடலிசையே எல்லோர் மனதினையும் கவர்ந்திடுமே!
இயற்கைக் காதலன்புக்கு
பூவேது? வாசமேது?
புனலேது? அனலேது?
ஆறேது? குளமேது?
கோடியேது? குலமேது?
சாதியேது? மதமேது? இனமேது? மொழியேது? நிறமேது? இந்த
பிரபஞ்சந்தன்னிலே எந்த வேற்றுமையும் இல்லையடா!

நீ எனக்கு ஒரு சத்தியம் செய்திட வேணுமடி! இந்த உலகத்தினிலே தனியுடைமை கொடுமைதனை அழித்திடவே என்னோடு துணையாகவே என்னோடு என்றென்றும் நீயே நிற்பாய் என்று!

கனவிலும் உனைமறவேன் எனதினிமைக் காதலியே!
நினைவிலும் நனவிலும் மறவாத துணை நீயே!-தோழியே
என்னுடல்,பொருள் ,ஆவிதனைக் கொடுப்பேன் உனக்காகவே1`
அதற்குமுன்னே நீ எனக்கு ஒரு சத்தியம் செய்திட வேணுமடி!
இந்த உலகத்தினிலே தனியுடைமை கொடுமைதனை அழித்திடவே
என்னோடு துணையாகவே என்னோடு என்றென்றும் நீயே நிற்பாய் என்று!
அந்த சூளுரையின் செயல்பாட்டினில்-போராடி வெல்ல
நீயும் என்னுடன் இருந்தாலே போதுமடி!
என்னாளும் நன்னாளுக்கு போராடும் நல்லோரின் வழியினிலே!
இவ்வுலகினையே இல்லாமை இல்லாத பொன்னுலகாய் ஆக்கிடுவோம்!

நாமே நல்ல சினிமா எடுப்போம் வாடா! நல்ல ரசனையோடு எடுப்போம் வாடா!-சினிமா ஒண்ணும் யாருக்கும் என்றும் பட்டாப் போட்டுக் கொடுக்கவில்லை புரிஞ்சுக்க-

நீயும் கேட்காமலே அனுப்பப்படும் ஸ்கிரிப்ட்களே -
யாரும் படிக்காமலே கிழித்து தூக்கி எரியப்படுமே!சினிமாக் கனவினிலே
நீயும் சிறகடித்துப் பறக்க நினைத்திடும் வசந்த காலங்களே
யாரும் உன் திறமைதனை அறிகின்ற வரையினிலே நீயிந்த
ஊரில் உலகில் உன்படைப்பினையெ தூக்கிக்கொண்டு திரியும் ;தேசாந்திரியே!
நல்ல படைப்பினையே நாடுபோற்ற நற்காலம் வந்தாச்சு
நாமே நல்ல சினிமா எடுப்போம் வாடா!
நல்ல ரசனையோடு எடுப்போம் வாடா!-சினிமா ஒண்ணும்
யாருக்கும் என்றும் பட்டாப் போட்டுக் கொடுக்கவில்லை புரிஞ்சுக்க-மக்கள் எல்லாமே
நல்லசினிமாவ ரசிக்க ஆரம்பிச்சாச்சு !இனி நல்லவங்களுக்குத்தானே நல்ல காலம்!

யாரடா? ஒரு முழுமையான மார்க்சீய வாதியடா?

யாரடா? ஒரு முழுமையான மார்க்சீய வாதியடா?
மானுட வாழ்க்கையின் சகல கூறுகளையும் அதைபற்றிய பார்வையும்
மானசீக மாகவே புரிதலும் ஒப்புயர்வற்ற ஈடுபாடும் உள்ளவரே -பகுத்தறிவினாலே
விஞ்ஞான வளர்ச்சி கண்டு மெய்ஞான வளர்ச்சி கொண்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் எவரோ? அவரே-ஒரு முழுமையான
மார்க்சீய வாதியாவாரடா!

மார்க்சீயம் என்பது எதையும் ஆழ்ந்து தேடுவதாகுமே ! எதையும் நடைமுறையில் போராடி ஜெயிக்கின்ற மனித நேய தத்துவமாகுமே !

வெற்று ஆத்திகம் என்பது சரணாகதியாகுமே!
வெறும் நாத்திகம் என்பது நிராகரிப்பாகுமே!
அதிதீவிரவாதம் என்பது அழிந்துபோகுமே! வளரும் விஞ்ஞான தத்துவமானதுமே ,
மார்க்சீயம் என்பது எதையும் ஆழ்ந்து தேடுவதாகுமே !அதுவும்
எதையும் நடைமுறையில் போராடி ஜெயிக்கின்ற மனித நேய தத்துவமாகுமே !

செனாயே செனாயே ஊர்வல வாத்தியமே செனாயே- நீயே உலக வாத்தியமாய் ஆனதும் ஒருபெருங்கதையாகுமே!

செனாயே செனாயே
ஊர்வல வாத்தியமே செனாயே- நீயே
உலக வாத்தியமாய் ஆனதும் ஒருபெருங்கதையாகுமே!
எங்கிருந்து வந்தது? ஆர்மோனிய கட்டைகள் மீதினிலே விரல்கள்
ஆடுகின்ற விசித்திர நடனமே!அதோடு தேனிசை தென்றல் வந்து தெம்மாங்குகூட இசைத்ததே!
என்ன?என்ன? சுரங்களின் இடுக்குகளுக்குள் இதமாகவே வளைந்து செல்லும் இசை நளினங்களின்
அமுதகானம் தான் என்ன? என்ன?

காணி நிலமும் கனவு இல்லமும் வாழ் நாளில் நிறைவேறாத கானலாகவே போய்விடத்தான் விடுவேனோ?

எல்லோர்க்கும் உணவு ,உடை, வீடு என்ற ஒப்பற்ற ,அரசியல்,தத்துவ,பொருளாதார நடைமுறையோடு கூடிய, மார்க்சீய வழியினிலே!
காணி நிலமும் கனவு இல்லமும்
வாழ் நாளில் நிறைவேறாத
கானலாகவே போய்விடத்தான் விடுவேனோ?

அஞ்ஞானம் விட்டேன் மெய்யன்பு ஞானத்து எல்லைத் தொட்டு மெய்ஞான நல்லற இல்லறவீடு பெற்றேன் இக்காலமே

தன்னை அறிந்து கொண்டேனே!உன்னில் என்னையும் என்னில் உன்னையும் புரிந்துகொண்டேனே!
ஓடாமல் ஓடி உலகைவலம் வந்தேனே -சுற்றித்
தேடாமல் உன்னில் உன்னையும் என்னில் என்னையும் நம்மில் நம்மையும் கண்டோமே! நீயும்
உன்னில் உன்னையே தரிசித்தாயே!-
என்னில் என்னையே தரிசித்தேனே!தன்னை அறிந்து கொண்டேனே!உலகைப் புரிந்து கொண்டேனே!
அஞ்ஞானம் விட்டேன் மெய்யன்பு ஞானத்து எல்லைத் தொட்டு
மெய்ஞான நல்லற இல்லறவீடு பெற்றேன் இக்காலமே!

Thursday, April 1, 2010

உண்மைக் காதல் அன்பினாலே எனக்குள் நீ! உனக்குள் நான்!- நாமே நம்மை நாமே உணர்ந்து கோண்டோமே!

இந்த பிரபஞ்சத்தினிலே!`
நினைப்பதொன்று காண்கிலேனே -காதலியே !இந்த பிரபஞ்சத்தினிலே!`
நீயில்லாது வேறில்லையே!
நினைப்புமாய் மறப்புமாய்-கனவினில்
நின்றகாதல் காதல் ஆமோ?- உண்மைக் காதல் அன்பினாலே
எனக்குள் நீ! உனக்குள் நான்!- நாமே நம்மை
நாமே உணர்ந்து கோண்டோமே!

பகுத்தறிவினாலே ! வித்தாய்,மரமாய்,விளைந்த கனியாய், பூவாய் சித்தாகி நின்றதிறம் அறிந்தேனே

பகுத்தறிவினாலே !
வித்தாய்,மரமாய்,விளைந்த கனியாய், பூவாய்
சித்தாகி நின்றதிறம் அறிந்தேனே!
மனமாய்,கனவாகி, நினைவாகி, உயிரிருந்து-உண்மைக்
கருத்தாய் நினறநிலை புரிந்தேனே!
என்னதான் கற்றால் என்ன? எப்பொருளும் பெற்றால் என்ன?-பகுத்தறிவினாலே
தன்னை அறியாரே உயர்வாரோ? மெய்யறிவே!
தெளியத் தெளியத் தெளிந்த பகுத்தறிவுத்தேனே!-இன்பம்
பொழியப் பொழிய மனம் கனிந்திடுவேனே!
கள்ளக் கருத்தையெல்லாம் கட்டோடு வேரறுத்து -பகுத்தறிவினாலே!
உள்ளக் கருத்தையெல்லாம் உணர்ந்திடுவேனே!
வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்- தந்தை
தாயோடு மெய்யணைந்து அன்போடு தழுவி நின்றேனே!
கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே காட்சிகள் தானிருக்க-என்
நினைவை பகுத்தறிவு ஒளிமேல் நிறுத்தி இருந்தேனே!
தூறோடு இசைந்து சுழன்றுவரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து பகுத்தறிவிலே விளங்கினேனே!

கல்வி அடிப்படை உரிமை ஆனதுங்க சட்டத்தாலே!-அதை நடைமுறை ஆக்கும் கடமை ஒவ்வோர் இந்தியனுக்கும் இருக்குதுங்க!

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்கல்வி சட்டமானதுங்க!
சட்டமானது குறித்து சந்தோசம் தானுங்க -ஆனாலும் மக்கள்
எல்லோர் மனதிலும் விழிப்புணர்வும் வேணுங்க!
கல்வி அடிப்படை உரிமை ஆனதுங்க சட்டத்தாலே!-அதை நடைமுறை ஆக்கும்
கடமை ஒவ்வோர் இந்தியனுக்கும் இருக்குதுங்க!
ஒரு ஒளிமயமான இந்தியாவின் எதிர்காலம் கண்ணில் தெரியுதுங்க!-கல்வி
இல்லாதபேர்களையே இல்லாமல் ஆக்கிடும் வசந்தம் வந்திடுங்க!
இந்தியாவின் முன்னேற்றம் ஒவ்வோர் இந்தியனின் விழிப்புணர்வினில் இருக்குதுங்க!