பகுத்தறிவினாலே !
வித்தாய்,மரமாய்,விளைந்த கனியாய், பூவாய்
சித்தாகி நின்றதிறம் அறிந்தேனே!
மனமாய்,கனவாகி, நினைவாகி, உயிரிருந்து-உண்மைக்
கருத்தாய் நினறநிலை புரிந்தேனே!
என்னதான் கற்றால் என்ன? எப்பொருளும் பெற்றால் என்ன?-பகுத்தறிவினாலே
தன்னை அறியாரே உயர்வாரோ? மெய்யறிவே!
தெளியத் தெளியத் தெளிந்த பகுத்தறிவுத்தேனே!-இன்பம்
பொழியப் பொழிய மனம் கனிந்திடுவேனே!
கள்ளக் கருத்தையெல்லாம் கட்டோடு வேரறுத்து -பகுத்தறிவினாலே!
உள்ளக் கருத்தையெல்லாம் உணர்ந்திடுவேனே!
வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்- தந்தை
தாயோடு மெய்யணைந்து அன்போடு தழுவி நின்றேனே!
கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே காட்சிகள் தானிருக்க-என்
நினைவை பகுத்தறிவு ஒளிமேல் நிறுத்தி இருந்தேனே!
தூறோடு இசைந்து சுழன்றுவரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து பகுத்தறிவிலே விளங்கினேனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment