தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கட்டுரை/
அங்காடித் தெரு –
நன்றி இரவி அருணாசலம் அவர்களே!
வசந்தபாலனுக்கு இது இரண்டாவது திரைப்படம். தமிழில் வந்தவற்றுள் உயர் தரத்தில் இருக்கக் கூடிய ”வெயில்” திரைப்படத்தை முதலில் தந்த நிறைவோடும், நீண்டநாட்களுக்குப் பின்னருமாக 'அங்காடித் தெரு' வைப் படைத்திருக்கிறார். நீண்ட காலத் தாமதத்திற்கு இப்படம் பதில் தந்திருக்கிறது.
ஒன்றைச் சொல்ல வேண்டும். அங்காடித் தெரு , அது பேசிய 'மனிதம்' 'வெயிலை விஞ்சி நிற்கிறது. வசந்தபாலன் திரைப்படத்துறைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்
'அங்காடித் தெரு' பெயரே ஒரு எதிர்பார்ப்பினை எதிர் நோக்கி நிற்கின்றது.'
மனிதஉழைப்பினை உறிஞ்சிக் குடித்துவிட்டு சக்கையாகத் துப்புகிற இடமே 'அங்காடித் தெரு.'என்று உணரவைத்திருக்கின்றது.
இது வெறுமனே காதற்கதை அல்ல . காதற்கதையோடு . அதனூடாக அவர் சொல்லி முடித்த சமூகத்தின்பால் வசந்தபாலன் வைத்திருக்கின்ற அக்கறையுடன் கூடிய ஈர்ப்பான,சமூகத்தின் இன்றைய அத்யாவசிய தேவையான சிந்தனைச் செய்திகளை ,மக்களுக்கு சொல்ல முயன்றிருக்கும் யுக்தி ,பிரபஞ்ச அளவு ஆனது-
உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல், சக மனிதர்கள் மீதான நேசம், முதலாளித்துவ இயந்திரத்தின் குரூரம் எனப் பலவற்றைப் பேசுகிறது 'அங்காடித் தெரு.' பல நூற்றுக்கணக்கானோர் பணியாற்றுகின்ற பல்பொருள் அங்காடியில் இருவருக்கிடையில் ஏற்படுகின்ற காதலும்,.....வேண்டாம்.
கதையென்று எதைச் சொல்ல? அது இங்கு தேவையில்லாதது. உண்மையில் இதனை எழுத முற்பட்டதே இவ்வாறாக திரைப்படங்கள் வருகிற போது நம்மால் வழங்கப்படுகின்ற வரவேற்பு வார்த்தைகள் மேலும் இத்தகைய திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதை அதிகரிக்கும்.
. வசந்தபாலன் மனிதத்தை உயர்த்திப் பிடித்தார்.
கதையில் அதிகாரம் செய்வோரின் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறார்கள். 'அங்காடித் தெரு'வில் அடுத்த வேளைச் சோற்றுக்கு குடும்பமே பரிதவிக்கப் போகிறது என்பதற்காக கெஞ்சல். '
சில இடங்களில் நெகிழ்ந்தும், சில சமயங்களில் தளர்ந்துமாய் 'அங்காடித் தெரு' திரைப்படம் என்னைச் சுற்றிச் சுழன்றது. ஆயினும் நெகிழ்ந்த கட்டங்கள் பல.
மனிதர்களுக்கு மிக அத்தியாவசியமானவை உணவும், நித்திரையும். அது இங்கு மறுபடவில்லை. தரப்படுகிறது. அது தரப்படுவதை காட்சிப்படுத்திய விதம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இப்படியுமா? வசந்தபாலன், இதை நம்பலாமா?
நாயகியின் தங்கை 'ஆச்சாரமான' குடும்பத்தில் வேலைக்காரியாக இருக்கிறாள். அவள் சாமத்தியப்பட்டாள். நாயகனும், நாயகியும் அவளைப் பார்க்கப் போனார்கள். கூண்டு மாதிரி கட்டப்பட்ட ஒன்றில் அல்சேசியன் நாய் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதே மாதிரிக் கூண்டில் சாமத்தியப்பட்ட அச்சிறுமி முடங்கிப் படுத்திருக்கிறாள். அக்காவானவள் அள்ளி எடுத்து அணைத்து அழுகிறாள். எந்த வசனத்தையும் வசந்தபாலன் இதில் வைக்கவில்லை.
நாயகியின் தங்கை நாயகியிடம் கேட்டிருக்கிறாள். 'உங்களோடை வந்தாரே ஒரு அண்ணை. அவர் ஆர்.'
'நீ ஆரென்று சொன்னாய்?' நாயகன் கேட்டான்.
'சிரித்தேன்' நாயகியின் பதில் இது. இப்படிக் காதலை நுணுக்கமாகச் சொல்லவும், வேறும் பலவற்றுக்கும் ஜெயமோகனின் வசனம் நிரம்பவே உதவியிருக்கிறது.
முகவெட்டும், உடம்புக் கட்டும் கொண்ட நடிகர், நடிகைகள் வசந்தபாலன் போன்றோரின் திரைப்படங்களுக்குத் தேவைப்படுவதில்லை. 'பருத்திவீரன், நான் கடவுள், பசங்க, வெண்ணிலா கபடிக்குழு' போன்ற படங்களிலும் அதனைக் கவனிக்கலாம். இந்த நெறியாளர்கள் தங்கள் ஆளுமைகளை மாத்திரம் நம்புகிறார்கள். அந்த ஆளுமைக்குள் பிரதிகளைத் தெரிவு செய்தல், அதனைச் செப்பனிடல், கட்டிறுக்குதல், காட்சி பூர்வமாக அதை வெளிப்படுத்தல், இசை பூசி எம்மை வசியப்படுத்தல் என்று யாவும் அடங்கும்.
வசந்தபாலன் அதை நேர்த்தியாகவே செய்கிறார். ஆனால் ஒன்றில் அவர் எம் நெஞ்சைத் தொட வைக்கவில்லை. அது இசை என்பேன். பின்னணி இசை இத்திரைப்படத்தின் காட்சிக்கும், பிரதிக்கும் இசை ஒத்திசையவில்லை என்பது என் தற்துணிபு. விஜய் அன்ரனி வழங்கிய மேற்கத்தைய இசைக்கோலம் சென்னையின் ரங்கநாதன் தெருவுக்குள்ளால் புகுந்து வெளிவரவில்லை. புகக்கூட மிகச் சிரமப்பட்டது.ஆனாலும் “அவள்அப்படி ஒன்றும் அழகில்லை”என்ற பாடல் எப்போது நினைத்தாலும் நினைவில் ரீங்காரம் செய்துகொண்டு இருக்கும் ;அளவிற்கு நினைவோட்டத்தில் ஓடிகொண்டே இருக்கின்றது.
மேலும் என்ன சொல்ல? தமிழின் மிகத் தரமான திரைப்படங்களின் வரிசையில் 'அங்காடித் தெரு'வும் ஒன்றாகிறது. வாழ்த்துக்கள் வசந்தபாலன்.வுக்கு
0
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment