ஒரு ஊருக்கு ஒருவழியா?
ஊர்செல்ல பலவழியா?
ஒருகதவு மூடினாலே மறுகதவு திறந்திடுமே!!
உன் தாழ்வு என்று நீயும் தாழ்ந்து போனாலே!
உயரும் நாள் ஒன்று உன்னைத் தேடிவந்திடாது- நீ
விரக்தியில் என்றும் சோர்ந்து விடாதே!
விதியை எண்ணி நீயும் வீழ்ந்து கிடக்காதே!
ஜாதகம் பார்த்து தினம் சளித்துவிடாதே!
சங்கடத்தில் கிடந்து சாகாதே!
ஒரு ஊருக்கு ஒருவழியா?
ஊர்செல்ல பலவழியா?
ஒருகதவு மூடினாலே மறுகதவு திறந்திடுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment