அடுத்து அடுத்து வாழுகின்ற மானுடமே!- நீயும்
கெடுத்து கெடுத்து வாழ்ந்திடவே கூடாதே
அண்டை வீட்டுக் காரனை நேசியென்று !
விவிலியமும் சொல்கின்றதன்றோ!
அன்பே சிவமென்பாரே நல்லோரே!
யாதும் ஊரே யாவரும் நம்மக்களே!
எல்லாரும் நம் சுற்றத்தாரே!
இந்த உலகத்தின் தனியுடைமைக் கொடுமைகளே!
அதிகார அச்சுறுத்தலே தற்காலிகமே!
சுதந்திரக் காற்றின் சுவாசங்கள் இல்லாத தேசத்தில்
சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் மக்கள் எழுந்திடவேணும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment