ஆலின் சிறுவிதையே உன்னையே !
நான் கண்டு வியந்தேனே!-உந்தன் சிறுவிதைக்குள்!
கோடிக்காலத்து ஆல விருட்சமே!
எத்தனை அரிய பெரிய வித்துயிரே-உன்னுள்
அடங்கி ஒடுங்கி கிடக்கும் விந்தைதான் என்ன?
ஆலின் சிறுவித்தே அரியபெரிய விருட்சமாகுமே!
மனிதமூளையே அதுபோலவே!
யோசிக்கும் பகுத்தறியும் மூளையே!
மனிதவளர்ச்சிக்கு மகத்தான தொரு பங்காற்றுதே!
மனிதவிஞ்ஞானமே தர்க்கரீதியாகவே மொட்டவிழுமே!
அறிவுத்தேடலின் பரிணாமம் இவை யுகசந்தியின் கத்திமுனையிலே!
அந்த ஓர் அரியகணத்தில் பகுத்தறிவு பாற்பட்ட பிரக்ஞையே!
அந்த உணர்வு பாய்ச்சலின் ஒரு ஞானதிருஷ்டியே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment