உன்வீட்டைச் சுற்றி உயர்ந்த மதிலகள் கட்டி!
உன்வீட்டுச் சாளரங்களை எல்லாம் மூடிவைத்து!
உன்வீட்டையே சிறைக்கூடமாக்கி!
உன்னையே நீ சிறைப்படுத்திக் கொள்ளலாமா? - நீயே
உன்னை ஒருகைதியாக்கி சிறைவாசம் செய்யலாமா?
உன் தேவைக்கு அதிகமாக நீயும் சேர்த்துவைத்து!
அல்லும்பகலும் தூக்கமின்றி கிடக்கலாமா?
தன்னலத்தை பெரிதாக நினைக்கும் கருத்தைமாற்றி
பொது நலத்தில் கவனம்கொள்ள நீயும் மறக்கலாமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment