காதலி உனைப்போலவே!
காதல் கொண்டு காதல்கொண்டு
கடல் நிலத்தை நெட்டித் தள்ளியதே
நிலவே பவுர்ணமி நிலவே-வானமதிலே
தாழத்தொங்கியதே-இனிக்கின்ற
காதலாலே கனத்ததே-
தவிக்கின்ற காத்து கிடக்கின்ற மஞ்சள் மாலையினில்
இளந்தென்றலில்
இனியும் தனிமை தேவையில்லை என்று
அல்லியைத் தேடியதே!
ஊடலுக்கு மூடுவிழா கேட்டதே !
கூடலுக்கு திறப்புவிழா என்றதே!
காதல் பைத்தியம் பிடித்தது போலவே!கண்கள் சிவந்து மயங்கியதே!
கல்யாண வைத்தியம் செய்கின்ற வரையினிலே-இல்லற
கட்டுக்குள் போகின்ற வரையினிலே -இந்த
காதல் பைத்தியம் இருந்திடுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment