எம்மாமன் என்னை எப்பவுமே எளப்பமா பார்த்ததில்ல!
பம்மாத்து தனமாக பவிசுதனம் பண்ணுனது இல்ல!
தங்கமுனு தாங்குவாக தாமரையுனு புகழுவாக!
ஏலமுனு ஏந்துவாக எலுமிச்சையுனு சுவைப்பாக!
அங்கமெல்லாம் இச்சுகொட்டி அமுதாக சேர்ப்பாக!
ஆழமான காதலன்பில ஆனந்தம் கொள்ளுவாக!
பொங்கிவரும் அழகெல்லாம் பூமியில பார்ப்பாக!
புரட்டின்றி நேசத்துல பாசமழை பொழிவாக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment