Popular Posts

Tuesday, September 8, 2009

ஆனை வந்தாலும் அவியல் கறியாம்! பூனை வந்தாலும் பொரியல் கறியாம்!-என்னைக்குமே! ஆடம்பரமா வாழக்கூடாதடா-அதிக அலங்கார வாழ்க்கையாலே! வாழ்வினில் சிங்காரம் கெட்ட

ஆனை வந்தாலும் அவியல் கறியாம்!
பூனை வந்தாலும் பொரியல் கறியாம்!-என்னைக்குமே!
ஆடம்பரமா வாழக்கூடாதடா-அதிக அலங்கார வாழ்க்கையாலே!
வாழ்வினில்
சிங்காரம் கெட்டு தறிகெட்டுப் போகுமடா!
ஆனமுதலில் அதிகம் செலவானாலே!
மானம் அழிந்து மதிகெட்டுப் போகுமன்றோ!
சேமிப்பு இல்லாத வாழ்க்கையே உலகத்திலே!
செல்லாத நாணயமாய் ஆகிடுமன்றோ!

2 comments:

Radhakrishnan said...

அடேயப்பா! அடுக்கடுக்காக அடுக்கி வைத்துச் செல்லும் பாங்கு வியக்க வைக்கிறது.

தலைப்பு கூட அப்படியே வைத்து இருக்கிறீர்கள்.

இப்படித்தான் எழுதவேண்டும் என நியதி எல்லாம் யார் வைத்தது எனக் கேட்பது போல் இருக்கிறது.

இன்னும் சில தினங்களில் ஆயிரம் பதிவுகள் வந்துவிடும் போலிருக்கிறதே.

நல்ல நல்ல கருத்துகள் அருமை.

தமிழ் வணக்கம்.

தமிழ்பாலா said...

நண்பர்ராதாகிருஷ்ணன் அவர்களே !
தங்களின் நட்புக்கு தோழமை உறவின் .......தங்களின் வாழ்த்துக்கு நன்றி நல்ல தமிழில் நானெழுத தாங்கள் எனக்குத் தந்த அன்பு உதவேகத்திற்கு கோடி வணக்கங்கள்!
இன்னும் தமிழில் நல்ல இலக்கியம் படைத்திட விளைகின்றேன்.