Popular Posts

Saturday, September 5, 2009

மற்றவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கு கற்றுக்கொள்ள ஒருவாய்ப்பு அமைகிறது என்பதை ஏற்றுகொள்ளடா! சரியான கருத்து இல்லை என்று தெரிந்தால் அதை மறுத்துக்கூற சரி

மற்றவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கு கற்றுக்கொள்ள
ஒருவாய்ப்பு அமைகிறது என்பதை ஏற்றுகொள்ளடா!
சரியான கருத்து இல்லை என்று தெரிந்தால் அதை மறுத்துக்கூற
சரியான நேரத்தில் உனக்கு உரிமை உண்டடா!
மற்றவர்கள் உனது நல்ல முடிவோடு ஒத்துவர நீ அவர்களுக்கு
மறவாது ஊக்கம் அளித்திடவே தவறவே கூடாதடா!
அவர்கள் விரும்பினால் உங்களுடன் சேர்ந்து தவறான கருத்தை
எதிர்த்து நிற்கவும், நல்ல விஷயத்திற்கு ஒத்துழைத்து தங்களுடன் செயல்பட அனுமதிக்கவேண்டும்
மற்றவர்களின் தேவைகள் மாறுபட்டு இருக்கலாம் என்பதை நீ
உணர்ந்திட வேண்டுமடா!
மற்றவருடன் பழகும்போது கண் நேராகவும் ,கனிவுடனும் இருக்கவேண்டுமடா!
மற்றவரின் பார்வைதனை தவிர்க்காமலும்,முறைக்காமலும் இருக்கவேண்டுமடா!
மற்றவருடன் அளவளாவும்போது கைகள், கால்கள் தளர்வாக இருக்கவேண்டுமடா!
மற்றவருடன் உரையாடும்போது கைகளை குறுக்கே மறுக்கே ஆட்டக்கூடாதடா!
சம்பாஷணையின் போதினில் மனத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்திருடா!
உரையாடலின் போதினில் பை,எழுதுகோல்,விரல்களை,கைகளை ஆட்டக்கூடாதடா!
உரையாடலில் செயலில் நிதானம்,அமைதியான குரல்,அதிக சத்தமில்லாமையும்
மென்மையில்லாத குரலாக இருக்கவேண்டுமடா!

உனது குரல் நேரடியாகவும்,மரியாதை கலந்ததாகவும் இருக்கவேண்டுமடா!~
உனது பேச்சு உன்மரியாதையையும் அடுத்தவர் மரியாதையையும் காப்பதாக
இருக்கவேண்டுமடா!
”நல்லகாரியம் நான்செய்யவேண்டும் என்று விரும்புகிறேன் தாங்கள் செய்யவிரும்புகிறேன் நீங்கள் செய்யவேண்டுமென்று நினைக்கிறேன்”என்ற
இலகுவான இனிமையான வார்த்தைகளில் கூறி, உங்களிடமிருந்து எனக்குத்
தேவை உங்களின் மேலானதொரு ஒத்துழைப்பு என்று கனிவாக பேசிடடா!
”நான் சொல்லவருவது நல்ல கருத்து தங்களுக்கு நேரம் இருந்தால்” என்று
இழுத்துப் பேசி உரையாடலை சிதைக்கவே கூடாதடா!

No comments: