வித்தாரக் கள்ளியே விறகொடிக்கப் போகாத
கத்தாழை முள்ளு கொத்தோட குத்துமடி
செத்த நேரம் உக்காந்து போவோமா தேன்குயிலே!-காதலாலே
வத்தாம பாட்டுவரும் கம்மாக் கரையோரமே!
கஞ்சிக்கு இல்லேனாலும் உன்கொப்பன் மவனே
காதல்பாட்டென்னாடா திருட்டுப்பய மவனே
கொஞ்சி வெளையாட ஒருபிள்ளை தாரேன்டி- நீயும்
ஆலவட்டம் போட்டு ஆசையிலே அசைபோடு
வேலையில்ல வேலைக்கேத்த கூலியில்ல
பாதி நாளும் பட்டினிதாண்டா இதுசரிப்படுமா?
ரெண்டுபேரும் வேலைபாத்து இல்லறத்த நடத்திடுவோமடி
சேர்ந்து தட்டும் கைகளில் ஓசைமட்டுமல்ல வாழ்க்கபூராம்
சந்தோசம் பூத்துக் குலுங்கும் வசந்தமாகும் என் தோழி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment