அகப்பட்டவனுகோ அஷ்டமத்துல சனி என்பாரே!
ஓடிப் போனவனுக்கோ ஒன்பதாம் இடத்தில குரு என்பாரே!
குருபார்க்க கோடி நன்மை என்பாரே-ஏழைக்
குடிசைக்கெல்லாம் குருபார்க்கும் நாளெந்த நாளோ?
மூலத்திலும் பேதமுரைப்பார்-ஆண்
மூலம் அரசாளும் என்பாரே-பெண்
மூலம் நிர்மூலம் என்பாரே!
செவ்வாயோ வெறுவாயோ என்பாரே!
செவ்வாயில் விரதமிருப்பாரே!
வாக்குச் சனியன் வாயில இருக்கு என்பாரே!ஆனாலும் அந்த
வாக்கை காசுக்கு வாங்கி மந்திரி ஆவாரே!
-ஆனாலும்
நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லையடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment