காற்றின் ஈரப்பதத்தை!
ரோஜாக்களின் நறுமணத்தை!
கீற்றின் தென்றல் தழுவும் தேனிசையை
கிணற்றுத் தவளையின் சத்தத்தை!
குயிலிசைத்திடும் கூ கூ” குரலிசையின் கீதத்தை
மேற்கிருந்து கிழக்காகவே ஓடும் வைகையாற்றின் சல சலப்பில்!
ஆற்றின் நடுவிருந்து மெல்ல மெல்ல தவழ்ந்து கரையொதுங்கும் நுரையினில்!
பார்த்ததும் ரசித்ததும் உணர்ந்ததும் ஸ்பரிசத்ததும் இயற்கையின் அழகினில்!
ஆர்த்தெழும் கோடி கோடி பேரின்பவெள்ளம் என்னுள்ளத்தின் இனிமையானதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment