வெலவாசி ஏறிக்கிட்டு நாடே நாறிக்கிடக்குதடி!
வெந்தத தின்னுவோம் விதிவந்தா சாவதில்ல வாழ்க்கையடி!
மானங்கெட்ட சந்தையில என்மருமகளக் கண்டீகளா?
ஏண்டியாத்தா மாமியா இந்தாதானே எதிரில நிக்குறேன்!
சூட்சுமக்கார சுந்தரி நல்லகாயா பாத்து நீயும் வாங்குடி!
நான்மாட்டேன் அந்தரி அலைந்து திரிந்து நீயே வாங்குடி!
எந்த சண்டை என்றாலும் வீட்டுல கட்டி வையடி!
இந்த விலைவாசி ஏத்தத்தை எதித்துப் போராட ஒண்ணுசேரடி!-
அடி நாம சண்டையப் போட்டா போலி அரசியல் வாதிக்குக் கொண்டாட்டண்டி!
அதனால மாமியா மருமக சண்டைய கிடப்புள போட்டுடுவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment