மனமே! தனிமை கொடுமையானதன்றோ?
குளிர்தரும் காற்றே வெகுதூரத்திருந்தே!
இமயமலைக்கு அப்பாலிருந்தே!
அது ;தழுவிச் செல்லும் சில்லென்றே!
மனமே! இன்னமும் காலதாமதம் செய்யமுடியாது!
வா! என்னுடனே!
மனமே ! நான் உனைக்கட்டிக் கொள்ள நீயென்னைக் கட்டிக்கொள்ள!
மனமே ! நீயெனக்கு இன்பம் தருகின்றாயே! நான் உனக்கு பேரின்பம் ஆவேனே!
உன் துணையாலே காமனை மட்டுமல்ல ! தனியுடைமை த் தத்துவத்தின்
ஆணிவேரையும் சாய்த்திடுவோம் வா! என்னுடனே! நானும் உன்னுடனே!
புத்துலகம் நம் கண்முன்னே ! என்னுடன் கலந்துவிடு ! வேற்றுமை நீக்கிவிடு!
ஒற்றுமை ஆகிவிடு! ஒருகோடிக் கரங்கள் உயரத்தில் ! மனமே உயர்வோமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment