Popular Posts

Wednesday, September 2, 2009


தந்தாளே தந்தாளே -காதலி எனக்குத் தன்விழியில் காதலன்பு
தந்தாளே தந்தாளே
காதல் நிறைந்த இதயம் தந்தாளே!
கண்ணில் அன்பு மொழிகள் தந்தாளே!
கருணை நிறைந்த நேசம் தந்தாளே!ஆனந்த
கண்ணீர் நிரம்ப பாசம் தந்தாளே!- தினமும்
மண்ணில் நிரம்ப மகிழ்ச்சி தந்தாளே
பார்வை நிரம்ப தூய்மை தந்தாளே!
சிந்தனை நிறைந்த பகுத்தறிவு தந்தாளே!-புரட்சிகர
செயல் நிறைந்த திட்டம் தந்தாளே!

ஆபத்துக் காலம் அடைக்கலம் தந்தாளே!
பாடிய நேரம் பரவசம் தந்தாளே!
வளம் நிறைந்த வாழ்வுமழை தந்தாளே!-எல்லோரும் வாழ சமத்துவ
ஒளி நிறைந்த பாதை தந்தாளே!

No comments: