சமுதாயம்
ஒன்றுபட்டு வாழ்கின்ற சமயந்தன்னிலே
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்காதே
தன்மனைவி விட்டு வேறுபெண்ணை ரகசியமாய்
கொண்டைமேல் பூத்தேடி திரியாதே
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லாதே
காரணமின்றி தேவையற்ற நேரத்தில்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்காதே
அடுத்தவர் மனதென்றும் தாங்காமல்
புண்படவே வார்த்தைகளைச் சொல்லாதே
ஒரு நாளும் நீ சென்று
சேராத இடம் தனிலே சேராதே
அடுத்தவர் காலத்தால் செய்த
செய்த நன்றி ஒருநாளும் மறக்காதே
கல்விச் சாலைதனில் கற்க கசடற
ஓதாமல் ஒருநாளும் இருக்காதே
உன்னிடத்து உண்மை அறியாத போதினிலே
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லாதே
பெற்றெடுத்த தாய்மை உள்ளமாம்
மாதாவை ஒருநாளும் மறக்காதே
தனியுடைமை கொடுமை செய்யும் வஞ்சகராம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்காதே
மக்கள் நலனில் அக்கறையில்லாததாம்
போகாத இடந்தனிலே போகாதே
நேருக்கு நேர் பேச திராணியற்ற கோழையாகி
போகவிட்டுப் புறம் சொல்லித் திரியாதே
அடுத்தவர்க்கு நல்லது செய்ய முயலாமல் என்றும்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்காதே
வாழ்க்கைதனை முறையாக வாழமுயலாமல் நீயும்
மனம்போன போக்கு எல்லாம் போகாதே
பொய்சொல்லி வேசம்போடும் போலி அரசியல்வாதிகள் பொய்
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரியாதே!
நல்லது நினைத்து நல்லதே செய் அதுவன்றி அல்லது செய்யும் கெட்டவராம்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே
முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன நல்ல கருத்துக்களாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்காதே
விலைவாசி ஏற்றத்தைக் கண்டு கொந்தளிக்காமல்
வெறுமனே வீட்டில் முடங்கிக் கிடக்காதே
வாக்குரிமையை காசுக்கு விற்றுவிட்டு
கஞ்சிக்கில்லாத தேசத்தில் கிடந்து தவிக்காதே!
நிதானமாய் சமூகத்தில் சிந்தித்து தெளிந்து முன்னேறாமல்
முன்கோபக் காரரோடு இணங்காதே
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
It's time to think about agriculture. Otherwise we have to depend on other countries for food.
Prices will keep going UP.. All our income will be spend on the food items.
Please see FOOD INC..documentary. you can know how corporates having control over the seeds and how food is manufactured.
நன்றி உரித்தாகுக!
Post a Comment