Popular Posts

Tuesday, August 11, 2009

இன்பவலியோ? துன்பசுகமோ?-உலகினில் ஏதாவது கொடுக்கவேண்டும் காதலே!

ஏற்கவோ மறுக்கவோ இல்லாத காதலாலே
என்னபயன் சொல் தோழியே?
அன்பினாலே வெளிப்பட்டு
அரவணைப்பாலே துளிர்விட்டு- நினைவுத்
தூரிகையாலே எண்ணஓவியம் வரைந்து
தொடர்ந்து வந்து காத்திருந்து
தூங்காமல் விழித்திருந்து-தனிமைத்
தொந்தரவில் உறங்காது
துணிவோடு ஜெயிக்கும்வரை
இன்பவலியோ? துன்பசுகமோ?-உலகினில்
ஏதாவது கொடுக்கவேண்டும் காதலே

No comments: