Popular Posts

Tuesday, August 11, 2009

ஜூவனுடனே ஜூவனுடனே ஓடுது தாமிரபரணி

ஜூவனுடனே ஜூவனுடனே
ஓடுது தாமிரபரணி
வலசைப் பறவையுமாக-கூட்டம்
கூட்டமாக கொக்குகளாக
வரிசையாக நகரும் மீனகளுமாக
கல்மண்டபமாக வெயில்பட்டு ஜொலிக்கிற
கண்ணான தண்ணீருமாக
ஜூவனுடனே ஜூவனுடனே
ஓடுது தாமிரபரணி
காதலுடன் சேர்ந்த வாஞ்சையுடனே
காத்துக் கிடக்குது சி நேகிதமே
பிரியம் பிரியத்திற்காகவே
ஏற்றதாழ்வின்றி எல்லார்க்குமாகவே
சமத்துவத்தையே பறைசாற்றியே
ஜூவனுடனே ஜூவனுடனே
ஓடுது தாமிரபரணி

No comments: