Popular Posts

Tuesday, August 11, 2009

புதிய முன்னோக்கிய மாற்றத்தின் வழியே நீயும் அடியெடுக்க நீ மறந்தாலோ உன்னை உன் தலைமுறை-என்றுமே மறக்கவே மறக்காதே பூமியிலே!

நீ
அழகாலும் அறிவாலும்
உழைப்பாலும் திறமையாலும்
எவ்வள்வுதான் சாதித்தாலும்-உந்தன்
உணர்ச்சியின் பெயராலே-தனியுடைமை ஆதிக்க
மரபுகளின் சுமைகளுக்கு- நீயும்
மக்கிப்போய் அடிமையாகி விட்டாலே- உன்
எல்லாச் சாதனைகளும்
அர்த்தமற்றுப் போய்விடுமே-புதிய முன்னோக்கிய
மாற்றத்தின் வழியே நீயும் அடியெடுக்க நீ
மறந்தாலோ உன்னை உன் தலைமுறை-என்றுமே
மறக்கவே மறக்காதே பூமியிலே
நமக்குப் பிடித்ததையே
நாட்டின் சமூக அக்கறையுடன்
நடத்திக்காட்ட விரும்பினால்
அதற்கு ஏதும் தடையில்லை
எந்தவித தடையென்றாலும்- நன்மைசெய்ய
போராடுவதில் தவறில்லை

No comments: