இயல்பாகவே வாழ்வினையே அணுகிப் பார்க்கின்ற
எதார்த்தமான மன நிலை வேண்டுமே
உன்னை சரியாகவே அறிந்து கொள்ளாமலே
உலகவாழ்வில் எதைத்தான் நீயும்
சரியாகவே அறிந்து கொள்ளுவாயோ?தன் கையின்
நீளத்தையே அறிந்திட முடியாதவனே-வேறு பொருளின்
நீளத்தையே எவ்வாறு அறிந்திட முடியுமோ?-உண்மையிலே
தேடுவது என்பது தேடாமலிருப்பது தானடா- நீயும்
தேடாதிருக்கும் நிலையினிலே - நீயும்
தேடியதெல்லாமே கிடைத்துவிடும்
பூவின் புன்னகையினிலும்
புதுமை மிளிர்ந்திடுமே-குயிலின் கூவலினிலும்
அதிசயம் மலர்ந்திடுமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment