இன்று மிகமிக நல்ல நாளாகும்-மன்னிப்பு
என்றும் மிகமிக நல்ல வெகுமதியாகும்-வாழ்வில்
பணிவு மிகவும் வேண்டியதாகும்--வெறுப்பு
எப்பவும் வேண்டாததாகும்-சமயோகிதபுத்தி
மிகப்பெரிய தேவையாகும்-பேராசை
மிகக்கொடிய நோயாகும்-அன்பு
மிகப்பெரிய வேதமாகும்-குற்றம் காணுதல்
மிகவும் சுலபமாகும்--பொறாமை
மிகவும் கீழ்த்தரமான ஒன்றாகும்-வதந்தியென்றும்
மிக நம்பக்கூடாததாகும்-அதிகப்பேச்சு
ஆபத்தைக் கொடுப்பதாகும்-தேவையில்லாத
உபதேசம் செய்யக்கூடாததாகும்--உதவியென்றும்
அடுத்தவருக்கு செய்யக்கூடியதாகும்-பயனில்லாவிவாதம்
ஒதுக்கிவிட வேண்டியதாகும்-உழைப்பென்றும்
உயர்வினுக்கு வழியாகும்-வாய்ப்புகளையே
ஒருபோதும் நழுவவிடக் கூடாததாகும்-- நட்புஒருபோதும்
பிரியக்கூடாத்தாகும் - நன்றி ஒரு நாளும்
மறக்கக்கூடாததாகும்-பொதுவுடைமை தத்துவமே
பிரபஞ்சத்திற்கே வசந்தமாகும்