Popular Posts

Tuesday, February 3, 2009

எல்லோரும்


ஊரில அவனைப் பார்க்குறேன்,

இவனைப் பார்க்குறேனு

மார் தட்டிக் கொண்டவங்க-அட

வெட்டியவங்க, குத்தியவங்க-எதிலும்

ஜெயிக்கமுடியாம ஊருக்குள்ள

, மண்ணைக் கவ்வியவங்க--அடுத்தவங்க

வாழப்பொறுக்காம பொறாமையாலே

மண்ணை வாரி வீசியவங்க,

வேலப்பர் கோவிலில் சீட்டு எழுதிக் கட்டியவங்க,

அடுத்தவன் மனைவிக்கு ஆளாப்பறந்தவங்க,

கிண்டல் நையாண்டி பேசியவங்க,-இன்னும்

நல்லவங்க, வல்லவங்க

கள்ளசாவி போட்டவங்க

கெட்டவங்க துயரம் பட்டவங்க

காலமெல்லாம் கஷ்டப்பட்டு

கண்ணீரில் அல்லல்பட்டு--வாழ்விலொரு

சந்தோசம் காணாதவங்க

ஏழைகளின் வயிற்றினில்

அடிச்சவங்க நடிச்சவங்க

நாடகம் போட்டவங்க

நயவஞ்சருங்க,.அடுத்தவன்

குடிதனைக் கெடுத்தவங்க

பம்மாத்து பகல்வேசக்காரனுங்க

சாதி மத இன மொழிவெறிதனை

தூண்டியவங்க,தனியுடைமை

தாந்தோன்றி காரனுங்க

ஒருவேலையும் செய்யாமலே

ஊருக்கு பாரமாகவே

ஊருக்குள்ள திரிந்தவங்க

நாளெல்லாம் நாட்டுக்கே

நல்லதைச் செய்து வாழ்கின்ற

நல்லோர்கள் இன்னும் ஒரு

குறிக்கோளும் இல்லாமலே

எந்த நல்ல சிந்தனையும்

இல்லாமலே போகுறபோக்குல

நாட்டுக்கும் நம்ம வீட்டுக்கும்

பாரமாகவேஓயாமல் ஓடித் திரிந்தவங்க

இவங்க எல்லோரும் இங்க

எரிந்தும் புதைந்தும் எதுவுமற்றுப்

போன இடம் இருட்டுல ஊமையாய்க் கிடக்குதுங்க

கரிக்கட்டையாகிப் போன

எல்லோரும் சாம்பாலான

இல்லாத வெறுமை பாருங்க

மண்ணாகிப்போன உண்மை நிலை

பாருங்க சமத்துவத்தப் பாருங்க

இதபார்த்தும்

திருந்தாம நீங்க இருந்தாக்கா

நல்லத நினைக்காட்டா

நீங்க மானுட ஜன்மமில்லைங்க

No comments: