Popular Posts

Monday, February 2, 2009

நாம் பிரமம்


வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை- நல்

வழிகொண்டு நல்லோர்துணை கொண்டு-மனித நேய

விழிகொண்டு சமத்துவக் கொள்கைதான் கொண்டு-தனியுடைமை

அழிக்கின்ற நல்லறத்தில் நாம்போகும் பாதையிலே

என்தேசமேஎனது உலகமேஎன் அண்டமே

என்றன்அறி வேஎன்அன்பே- நம் ஒற்றுமை பிரமம்

நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை

நன்மைதீ மைகளும் இல்லை

வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோவானைஒரு மான்தாவுமோவலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரியமலையைஓர் ஈச்சிறகினால்துன்புற அசைக்குமோ வச்சிரத் துண்ஒருதுரும்பினால் துண்டமாமோசூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழைதோயுமோ இல்லைஅதுபோல் மக்கள் ஒன்றுபட்டால்

மக்கள்சக்தி திரண்டுவிட்டால் அச்சக்திமுன்னே

எந்தசக்தி முன் நிற்கும்?

No comments: