Popular Posts

Monday, February 2, 2009

நல்லறமாகாதே


உப்புற்ற பாண்டமடா ஒன்பது துவாரத்துள்உற்றசுகமடா அழுகும்உடலே

உயர்கின்ற வானிடை எறிந்தகல்லடா என்றும்

மலையிற்பொழியும் அருவியடாஎன்றும்

வெப்புற்ற காற்றிடை விளக்கடாகென்றும்

மேகம்உறுமின்னடாஎன்றும்

வீசுகாற்றின்மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும்

வினைதந்தவெறுமாய வேடமடாஎன்றும்

கப்புற்ற பறவைக் குடம்பையடாஎன் றும்

பொய்த்தகனவென்றும் நீரில்எழுதும்கைஎழுத் தென்றும்

உட் கண்டுகொண் டதிலாசைகைவிடேன் என்செய்குவேன்

என்றுபலரும் பலவாறு பாடிசென்றபோதும்

இவ்வுலகினில் வாழும்வாழ் நாளில்- நாமெல்லாம்

நல்லதைசெய்ய மறந்தால் நல்லறமாகாதே

No comments: