சுவரிருந்தால்தானே சித்திரமே -இலங்கை
யுத்தவெறியன் அழிக்கவந்தான் ஈழமண்ணிலே
தடியெடுத்தான் தண்டக்காரன் ஆகிவிட்டான்
தமிழினத்தை சாய்க்கவந்தான் முல்லைத்தீவிலே
தலைக்கு மேலே சுனாமி கடல்வெள்ளமே போகுது
சாணென்ன முழமென்ன
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்--குண்டுகளை விதைப்பவன்
குண்டுகளைத் தானே அறுப்பான் ஈழமண்ணிலே
வைக்கோற் போர் நாய்குணம் மாறவேணும்-தமிழ்மக்கள்
சுதந்திரத்தை உலகமக்கள் ஆதரிக்கவேணும்-அது
சிங்களமக்களின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடாது
சிங்களதமிழினம் தமிழ்சிங்கள இனம் என்று-இரண்டற
கலந்திருப்பதாலே தமிழ்மக்களும் சிங்களமக்களும்
ஒருமித்த கருத்தொற்றுமை எடுத்திடவேணும்
No comments:
Post a Comment