Popular Posts

Monday, February 2, 2009

ஈழத்தமிழரின் வாழ்வெங்கே?தமிழ்மண்ணே இன்னும் தூக்கம் ஏனிங்கே?




காதல்எங் கே?அமுத கானம்எங்கே ?
அன்புவாழ்க்கை சுகம் காண்பதெங்கே?
காணுமின்பகாட்சிஎங் கே ?
சிங்களர்சூழ்ச்சிஇங் கே
இலங்கை கொடுங்கோல்அர சாட்சிஇங்கே
ஞானம்எங் கே?
ஐ நாவின் மவுனம்இங் கே
சிங்கள அரசின் இனவெறிஇங்கே
ஈழத்தமிழரின் சுதந்திரம்எங் கே ?
உலகமக்களின் தூக்கம்இங்கே
உலக நாடுகளே அமைதி நடவடிக்கைக்கு
தாமதம் ஏனிங்கே?
ஈழப்படுகொலைஇங் கே
ஈழஅமைதி எங்கே ?
வசந்தம் எங்கே ?இனவெறி முடிவுதான் எங்கே ??
ஈழ இயற்கை எங்கே?
ஈழ அழகு எங்கே?
மனிதரை மனிதர் வேட்டையாடும் ரத்தவெறி இங்கே
குருதி ஆறு ஓடும் பிண நாற்றம் இங்கே
எழில் எங்கே ?
சொந்தம் பந்தம் பாதையில் இங்கே
பாதகரின் படுகொலையாலே பிணக்குவியல் இங்கே,
உலகமக்களே உங்களுக்கு கண்ணில்லையா?
உலகின் சமாதானம் எங்கே?
வசந்த விடிவு எங்கே ?
இனவெறிப்போரின் முடிவு எங்கே?
தமிழ்மண்ணே இன்னும் தூக்கம் ஏனிங்கே?

No comments: