Popular Posts

Saturday, February 28, 2009

ஒரே ஒரு மரம் நடு


எட்டாம் சொல்லிய ஆசார வித்தோ?- நீ

உலகினை நேசிக்கிற அவதார முத்தோ?

இந்த சமூகத்திற்காக

குறைந்த பட்சமாக நீ என்ன செய்யலாம் ?என

எண்ணிக் கொண்டிருக்கிறாயா?-முடிந்தால்,

என்ன உன்னால் முடியும்-

உன் ஆயுளுக்குள்

ஒரே ஒரு மரம் நடு

மரபாய்


அன்றோ போர்க்களத்தில் உயிர்துறந்த

மகாவீரர்களின் ஞாபகமாக

வீரக் கல் நட்டுக் கோயில்

எடுப்பது மரபு.

வெறும் கல் மட்டும்

ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தார்-ஆனால் இன்றோ

நடிகற்கு கோயில்

சினிமா நடிகை, நடிகருக்கு

சிலைஎடுப்பதும் அந்த மரபு தானோ?அன்றோ

பள்ளிப்படையாக அத்துடன் ஏதேனும்

ஒரு தெய்வத்தின் சிலையையும்

ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தார் =இன்னாளில்

பாரம்பரியமாக குலதெய்வங்களாக,குறுந்தெய்வங்களாக

தொடர்ச்சியாக பரம்ரையாக மாசிஅமாவாசை

திருவிழாவாக தமிழர்கள் வாழையடி வாழையாக

வணங்கிடும் மரபாய் நிற்கும் வழக்கங்கள்

கடமையல்லவா


காடாயிருந்தால் என்ன?,

நாடாயிருந்தால் என்ன?-வேறு

பூமியாயிருந்தால் என்ன?

வேறுஎதுவாகததான் இருந்தால் என்ன?,

நாம் வசிக்கும் மண்ணை ரம்யமாக்குவது

நாம்தான் என்று புத்தனும் சொன்னானே

இருக்குமிடத்தை சுவர்க்கமாக்குவதும்

நரகமாக்குவதும் நாமல்லவா?

நல்லதை நேசிப்பதும்

கெட்டதை ஒழிப்பதும் - நம்

வாழ்க்கைக் கடமையல்லவா

Friday, February 27, 2009

உயர்ந்திடலாமே


அருகங்கட்டையும் ஆபத்தில் உதவுமடா-அதனாலே

அனைவரையும் நேசம் கொள்ளடா

அன்பாலே எவரையும் அரவணைக்கலாமே- நல்

அறிவுகொண்டு உலகத்திலே உயர்ந்திடலாமே

கெட்டது


உறவோ போகாமல் கெட்டது
கடனோ கேட்காமல் கெட்டது
காதலோ பேசாமல் கெட்டது
நட்போ புரியாமல் கெட்டது
அன்போ கொடுக்காமல் கெட்டது
கண்ணோ பார்க்காமல் கெட்டது
மண்ணோ விதைக்காமல் கெட்டது

காதல் அலையே


உலகமெங்கும் படுக்கை விரித்தும்

உறங்காமல் அலைகின்ற கடல் அலையே

உள்ளமெங்கும் கனவை விளைத்தும்

உணர்வெல்லாம் திளைக்கின்ற காதல் அலையே

Thursday, February 26, 2009

இசையாகி


நீ தான் சகலமும் சுவாசக் காற்றே-விழியின்றி

உன்னைப் பார்க்க முடியாது காதலே-அன்பின்றி

உன்னைப் பிடிக்கவும் முடியாது. ந்ட்பின்றி நீ பேச

உனக்கு வாயில்லை ஆனாலும்- உள் உணர்வோடு

நீ ஓசை எழுப்புவாய்-ஒரு நாளும்

நீ உறங்காமல் மனதினில்-புல்லாங்குழலாகி தினம்

சங்கீத இசையாகி இசைத்திடுவாயே

காதல்


எரித்தாலும் எரிவதில்லை-காதல்

அணைத்தாலும் அணைவதில்லை -என்றும்

பிரித்தாலும் பிரிவதில்லை-விருப்பின்றி

இணைத்தாலும் இணைவதில்லை--காலம்

அழித்தாலும் அழிவதில்லை-எவரும்

பழித்தாலும் தாழ்வதில்லை-புழுதிவாறித்

தூற்றினாலும் கலைவதில்லை-இனத்தாலும்

மொழியாலும் விலகுவதில்லை-சாதியாலும்

மதத்தாலும் ஒழிவதில்லை

Wednesday, February 25, 2009

நினைவையே


வெள்ளமாய் காதல் கண்ணில் துவங்கி -என்

உள்ளத்துஉள் கொண்டு-அன்பில்

மெள்ள எழுந்து உள்ளம் புகுந்து

குளிர்ந்தே ஓர் கவிபாடும் மயங்கிய மாலைப்

பொழுதினிலே மதுரமான மங்கை ஒருத்தி

விழுதாகி தாங்கி நின்றாள் என் நினைவையே

அன்பே


அன்பே

வண்டுகளை ஏமாற்றும்-உன்

பொன்மலர் சூட்டிய கூந்தலே

கொன்றைமலர் பூத்ததடி சோலையிலே

குங்குமப்பூவும் பார்த்ததடி மாலையிலே

கார்காலமும் வந்ததடி கொல்லையிலே

கார்காலமும் வாரேனென்று சொன்னவனே

ஓடிவந்து கட்டிக்கொள்ள மாட்டானா?-அவன்

பொய்கூறும் பொய்யன் இல்லையடி-அவன்

வாராது எனக்கில்லை மழைக்காலமே

ஐந்தறிவு


காதலுமில்லை கருணையுமில்லை

கல்யாணம் செய்வதற்கு

காசு நகை பெரிதென்று-அன்பில்

காணும்துணை சிறிதென்று-தூரப்

போகிறானே தலைவனவனே-தூய

உள்ளத்தைத் தான் புறக்கணைத்தே

உள்ளன்பைக் காணாமலே-அவன்

ஆறறிவு மானுடனா?--இல்லை

ஐந்தறிவு விலங்குதானா?

பெண்ணென்றால் எளப்பமாக

பேடியவன் எண்ணிவிட்டானா?-அவன்

ஆணாதிக்க சமூகத்தில்

அவலத்தின் உச்சக்கட்டம்

பெண்களை என்ன அவன்?

ஏளனமாய் எண்ணிவிட்டானா?-சமூகத்தில்

மூளைகெட்ட முடமானவன்-வாழ்க்கைதனை

சீரழிக்கும் துரோகியவன்



Tuesday, February 24, 2009

வானத்தில்


வானத்தில் காணும் முழுநிலவே

பொன்னே மணியே

புதுமலரே செந்தேனே

உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே -முன்னே

முகிழாத முன்மணக்கும் முல்லை மணமே

முன்வந்த சந்தனத்துச் சோலை மணமே

இன்பத்து முக்கனியே என்னன்பே -உன்

சின்ன இமையைத் திறந்ததேன்?

கனிச்சாறே தனித்தமிழே

சின்னமணிக் கண்ணை -உன்

இமைக்கதவால் ஏன்மூடிவைத்தாய்!

Monday, February 23, 2009

சாதிக்க முடியுமே


சிறகுடன் சிறகுடன் நீயிருந்தால்

வானம் தொட்டுவிட வழியொன்று

பிறக்குமே

சிந்தனை செய்துடன் செயலென்றால்

நீயும் எதையும் சாதிக்க முடியுமே

பறவை


துயரம் கொண்டமனத்தில்-உயிர்

துடித்து வாடும் வனத்தில்

கிளை இழந்த மரத்தில்

துணை பிரிந்த பறவை

நீ







ஏனிந்த சந்தேகம்



ஏனிந்த சந்தேகம்



பட்சிக்குமுண்டோ?



உச்சிமோகமென்று



உயரும் எண்ணம்



ஆருக்குமுண்டு-உலகே நீ



புரிந்துகொள்ளு

ஆழ்ந்துவிடாதே


சிறிது சிறிதாய் ஓய்வு ஓய்வு

நீண்டதூரப் பார்வையிலே-வெற்றி

இலக்கு நோக்கி

நெடு நாளையப் பயணமே-வெற்றி

நேரம் வரும்போது

நெருங்கி போகும்போது-தூங்கி

போய்விடாதே- நீயும்

துயரத்தில் ஆழ்ந்துவிடாதே

போதாதோ?


பட்டமரம் தளிர்க்க

வெட்டவெளி தவமோ?

மழைவேண்டியோ?

மண்வளம் வேண்டியோ?

இட்ட அடி நோகுதடி

எடுத்த அடி நொந்ததடி

வட்ட நிலா காயுதடி

வாடைக்குயில் பாடுதடி

கட்டபுள்ள ஒத்தையிலே

காத்ததெல்லாம் போதாதா?
ஒத்தக்குயிலின் சோககீதம்-இரு
உயிர்களின் துடிப்பில் காதல் நாதம்

கனிவு


இனிது இனிது


ஏகாந்தம் இனிது-அதனினும்


கனிவு கனிவு -பொதுவுடைமைச்


சித்தாந்தக் கனிவு

சிறகைவிரி


சின்னப்பறவையே சின்னப்பறவையே

சிறகைவிரி சிறகைவிரி

வானம் வானம் வசப்படுமே

வையம் வையம் கைவருமே

மவுனமே




பட்டமரத்தில் துளிராய் ஒருபறவை


பறக்குது பறக்குது வானமே


பாடுது பாடுது கானமே


கலையுது கலையுது மவுனமே

ஈழமண்பூராம்


பட்டமரம் தானே இங்கு பாக்கி- ஈழ மண்பூராம்

பாலை நிலமாச்சு-இது

சிங்கள போர்வெறி மிருகம்

சுய நல மனிதன்

சுரண்டிய பூமியிது

வரண்டிடும் ஊரிது

குயிலே


சின்னக்குயிலே சின்னக்குயிலே

சித்தாரக்குயிலே-உன் சிறகை எனக்கு

கடன்கொடு கடன்கொடு வண்ணக்குயிலே- நானும்

சிகரம் தொட்டிடவேணும் எஞ்செல்லக்குயிலே

எங்கள் ரகுமானுக்கு விருதாகி


ஆஸ்கார் விருதே- நீ

உனக்கே விருது கொடுத்துக் கொண்டாயோ?

எங்கள் ரகுமானுக்கு விருதாகி-தமிழ்

மண்ணுக்குள் - நீ

பெருமைசேர்த்துக் கொண்டாயோ?என்றோ

வேறுதிறமையான படைப்பாளிகளுக்கும்,

கமலுக்கும் , அமீர்கானுக்கும்- நீ

விருதாகி இருந்திருப்பாய் ஆனால்-இன்னும்

அதிகமாக பெருமை சேர்த்திருப்பாய்-ஆனால்

இல்லையே ,வாழ்த்துக்கள்

இப்போதாவது உன்விழிகள்

இந்தமண்பக்கம் திரும்பிப் பார்த்ததற்கு-மீண்டும்

அன்பானவாழ்த்துக்கள்-உன்

நியாயமான பணிதொடரட்டும்

எதை ஆளப்போகிறீர்?


இறையாண்மை

காப்பதற்கா?

கொல்வதற்கா?

உலகமக்களே உங்கள் கண்ணெதிரே

இனவெறியாலே படுகொலைக்கு

பலியாகி ப்ரிதவிக்கும்

ஈழத்தமிழரின் துயரத்தை

பார்த்திடவே மாட்டீரா?-தினம் தினம்

சாகின்ற தமிழ்மக்கள் படும்துன்பத்தை

ஐ. நா.சபை தலையீட்டில்

அமைதி திரும்பிடவே

ஆவண செய்திடத்தான் மாட்டீரா?

எல்லோரையும் கொன்றுவிட்டு

பாலைவனமாய் ஆக்கிவிட்டு

சிங்களவெறியரே - நீங்கள் எதை

ஆளப்போகிறீர்?

Saturday, February 21, 2009

அன்பு உள்ளங்களே


நெஞ்சை தென்றலாக வருடும்

மெல்லிசைக் காதலே

கொஞ்சிடும் தமிழ்பேசும்

கண்ணிமை மோதலே

அஞ்சாத மனதினிலே

நடைபோடும் வாழ்விலே

ஆருக்கும் உவமைசொல்லும்

அன்பு உள்ளங்களே

வைரமுத்துவே ,இசைச்சொத்து நீ


வானத்தையே போதிமரமாக்கிய வைரமுத்துவே-வாழும்

கீதத்தையேதிரை இசையாக்கிய இசைச்சொத்து நீ-உன்

இலக்கியப்பார்வை

புதுக்கவிதையின் விசாலத்தைக் காட்டியவை.
புதுக்கவிதையைக் கொணர்ந்தாலும்-எந்த நடையினில்

எது தந்தாலும்--உன்னால் மாற்றுமொழிப்

பதங்களைத் தந்தாலும், பழந்தமிழ் இலக்கியப் பாடல்களும்,

பாமரர் பாடும் தெம்மாங்கும் புதுமெருகேறி

இன்றும் பட்டிதொட்டிகளிலும்-என்றும் இளமையாகி

இனிமையாகி பாடச்செய்யும் வல்லமைகொண்டு

நடமாடும் இசைப் பல்கலைகழகம் நீயல்லவா?

இளையராஜா-எங்கள் இசை ராஜா


இளையராஜா --எங்கள் இசை ராஜா- நீ

அறியாத இசை வடிவம் ஒன்றில்லையே- நீ இசைக்காத,

இசை உத்தி உலகினில் இல்லை இல்லையே

கர்நாடக தேனிசையா?

களிப்பூட்டும் தெம்மாங்கா?

இந்துஸ்தானி இன்னிசையா?இன்னும்

திருவாசக உயிரிசையா?எந்த

இசையாயினும் தித்திக்க செய்திடும்-உன்

இசைத்தமிழ் எத்திக்கும் தமிழ்பேசும்

Friday, February 20, 2009

சிட்டே







கொத்துவிடா நெத்தே,கொஞ்சவந்தாயா?



கோதுபடா மாங்கனியே முத்தம் தந்தாயா?



பருவப் பலாச்சுளையே இனிக்க சொன்னாயா?



பக்குவத்து கொய்யாவே அணைச்சுக்கிட்டாயா?



அக்கரையின் சர்க்கரையே இக்கரையின் சித்திரையே



, அதிமதுர தென்னவட்டே என்னாசை வண்ணச்சிட்டே

காட்சிதந்தது


கொப்புக்கனியே, வம்புக்கு வந்தாயா?

கோதுபடா மாங்கனியே

தோப்புக்குள் நின்றாயா?

தொப்புள் கொடிக் கருத்துவாரத்தையே

ஆபாசமாய் திரைப்படமும்

காட்டுகின்ற அவலத்தையே

சாடுகின்ற கேள்விக்கணையாகவே-உன்

கண்ணிமையும் காட்சிதந்தது

Tuesday, February 17, 2009

கண்ணொப்பமே


ஆய கலைக ளறுபத்து நான்கும்-கற்று

தேர்ந்து வந்தேன் காதலியே -இன்பப்

பார்வை அன்புசெய்த மெய்ப்பொருளே-காதல் வேண்டும்

இதுஎன் விண்ணப்பமே.

அது நம் கண்ணொப்பமே

உண்மைதனை







நாராய் நாராய் செங்கால் நாராய்



பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன



பவளக் கூர்வாய் செங்கால் நாராய்



நீயும் நின் மனைவியும் தமிழகம் நோக்கி,கீழ்திசை அய் நா சபையிடமும்,போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தச் சொல்லி



வடமேல்திசை போவீர்கள் என்றால்எம்



ஈழத்தமிழ் மக்களை இனவெறியாலே



இரத்தப்பசி தீர்க்கின்ற சிங்களவெறி



இராணுவத்தின் கண்மூடித்தாக்குதலாலே



இலங்கைவாழ் தமிழ்மக்கள் படும்துயரை



அவலத்தை,துன்பத்தை,துயரத்தைக் கண்டு நீங்கள்



விட்ட ரத்தக்கண்ணீர் உணமைதனை



எடுத்துச்சொல்வீரே

Monday, February 16, 2009

திருமப


அன்பு எனும் ஆறு கரை அது புரளும்-கல்வியே

என்னையும் ஒருவ னாக்கி --உலகினில்

பொன்னாய் மின்னவைத்ததே

வாழ்கின்றாய் வாழ்த்துகின்ற நெஞ்சமே-காதலிலே

ஆழ்கின்றாய் அன்புக்குள் இன்பமே-- நட்பினிலே

சூழ்கின்றாய் இன்பத்துள் இன்பமே -சிலபொழுது

வீழ்கின்றாய் திரும்ப நீ எழுவதற்கே

பகிர்ந்துண்டு


இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது

ஆராத இன்பம் தரும் பேரழகே

எண்ணுதற்கு எட்டாத எழிலே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

ஆரா அமுதே அளவிலாத விண்மீனே

ஆற்றின்ப வெள்ளமே பேரன்பு உள்ளமே

சேர்த்தென்னை துணையாக்கி சமமாகி

பார்த்தென்னில் பரவசமாய் ஆவாயோ?

பார்தன்னில் பொதுவுடைமை ஆக்காயோ?

பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பிட மாட்டாயோ?

Sunday, February 15, 2009

இளமை


வயது என்பது வருடத்தின் கணக்கு-அடஇளமை

என்பது அவரவர் ரசனையின் கணக்கு-அவரவர்

ஆற்றலின் கணக்கு அவரவர் மனதின் கணக்கு- நாம்

என்றேன்றும் இளமை என்று எண்ணிவிட்டால்- வேறு

எவர்வந்து தானதை தடுத்திடவே முடியும்?-எப்போதும்

இளமை உணர்வுடன் உள்ளவன் தானே-வாழ்வினை

என்றும் ரசனையுடன் ரசித்திடவே முடியும்-அது

இல்லாத மானுடமே வீதிக்குத்தானே சொந்தம்

Saturday, February 14, 2009

விஞ்ஞானம்


அரும்பு கோணிச்சு-

மலரதுமணங் கோணுச்சோ?

கரும்பு கோணிச்சே-அதுவே

கட்டியும் பாகுமாச்சே

இரும்பு கோணுச்சே-அங்குசமாகியே

யானையும் அடங்குச்சே-உடல்

நரம்பும் கோணுச்சே

நாமதற் கென்செய்வோம்.

விஞ்ஞான்ம் தான் கொணடு

நாமதையே சீர்செய்வோம்

காதல்


காதல் கருவூலமே-கெண்டை மீன்

கண்ணே-என்னைத் தழுவும்

-கார்மேகமே,-ஈர்க்கும்

கண்ணால், -தமிழினிய

கிளிமொழியால்-உந்தன்

. அமுத இதழ்நீரால், -அன்பே நீ

கல்கண்டோ, -இனிக்கும்

சர்க்கரையோ-தித்திக்கும்

தேனோ,-கனிவான

தனிப்பாகோ அறியேன்.

நல்லது

நல்லது

கேட்பதும் சொல்வதும் நிகழ்த்திட வேண்டும்=

நல்லன

படிப்பதும் செய்வதும் நடத்திட வேண்டும்-உள்ளது


உரைத்திடும் துணிவதும் இருத்திட வேண்டும்=


நியாயங்கள்


ஜெயித்திடும் தத்துவமும் உயர்த்திட வேண்டும்\


தனியுடைமை


அழித்திடும் ஒற்றுமை ஓங்கிட வேண்டும்

காதல் வந்தது


காதல்வந்தது

காதலற்கு கணமும் யுகமானது-கண்

-, பார்த்தது - நெஞ்சமும்

பரவசமானது-இந்த

யுகத்தில் காதல் தூது எத்தனையோ

வந்துவிட்டது.

காதலினால் மானிடர்க்கு இன்பமுண்டாம்

கவிஞர்களும் சொன்னாரே

ஆதலினால் காதல் செய்துவாழ்வோம்

காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி-அது

.எப்போது? எங்கு?

வந்து அமரும் என்று

யாருக்குத்தெரியும்?ஆனாலும்

காதலுக்கும், காதலிக்கும் -காதல்

நெஞ்சத்திற்குமாய் -காலமெல்லாம்

காத்திருப்பது சுகம்தானே?

ஒற்றுமை


சுவரிருந்தால்

சித்திரம் வரையலாம்.

நீயிருந்தால்

நித்திரை மறக்கலாம்

நினைவிருந்தால்

நித்தமும் பறக்கலாம்

கனவிருந்தால்

வானில் மிதக்கலாம்

துணையிருந்தால்

எங்கும் வாழலாம்

துணிவிருந்தால்

எதிலும் ஜெயிக்கலாம்

ஒற்றுமையிருந்தால்

உலகமே வசந்தமாக்கலாம்

சிலந்திபூச்சியே


சிலந்தி பூச்சியே

முயற்சியின் உச்சியே

வலை பின்னுவாய் நீயும்

உன்னிடம்

நூலில்லை என்றாலும்?-உனக்கு நீயே

கோட்டைகட்டி ராஜாங்கம் நடத்தி

ராஜாவாய் ஆட்சிசெய்வாய்-முயற்சி

நீ செய்து நம்பிக்கை ஊட்டுகின்றாய்

தோல்வி என்றும் தொடர்வதில்லை-என்று

தொடர்ந்து உழைத்து காட்டுகின்றாய்

நினைவானதே


உலகமெல்லாம் காலலை நீட்டி,

உறக்கமின்றி அலைகின்ற கடலாய்

உள்ளமெல்லாம் பேரலை ஆக்கி

ஓய்வின்றி அழைக்கின்ற காதலாய்

ஒருத்தி சொன்ன கண்ணின் கதையாய்- நெஞ்சில்

இருத்தி நிற்கும் அன்பின் நினைவானதே

Saturday, February 7, 2009


ஏடாகோடம்பேசாதே


ஏறுக்கு மாறு;செய்யாதே-உன்


ஒட்டு உறவு; ஆகாது -தினம்


ஓட்டமும் நடையுமாகி;என்றும்


ஓய்வு சாய்வு;எடுக்காமலே


கண்டவன்கடியவனெல்லாம்-ஏச


கண்டது கடியதெல்லாம்;பேச


கணக்கு வழக்கில்லாமல்-வாழ்ந்தால்;


கண்ணும் கருத்துமாய்;இல்லாமலே


கலியாணம் காட்சி;செய்யாமலே


காமா சோமாஎன்றிருந்தால்-உலகம்;


கன்னா பின்னானு திட்டாதா?எதையும்


கிண்டிக் கிளறி;பாக்காமலே--ஏதோ


குஞ்சுங் குழுவானும் என பொறுப்பின்றி


; குண்டக்க மண்டக்கமாய் பேசிக்கிட்டு


[“குண்டக்கா மண்டக்கான்னு” நடந்துக்கிட்டு


குத்தலும் குடைச்சலுமாய்;வாங்கிக்கிட்டு


கூட்டம் நாட்டம்;இல்லாமலே-ஊரை


கூட்டிக் குறைத்து மதிப்பிட்டு மற்றவருக்கு


; கூட மாட ஒத்தாசை செய்யாமலே--திருடி;


கையும் களவுமாய்;மாட்டிக்கிட்டா


கொஞ்ச நஞ்சமாவது ரோசமிருக்கா?;


கொள்வனை கொடுப்பனை;இல்லாம


குளம் குட்டையெல்லாம்;சுற்றித்திரிந்தா


கோள் குண்டுணி;மூட்டிவிட்டு-அப்புறம்


சீத்துப் பூத்தென்று அவமானப்பட்டு


; சொள்ளை சொட்டைனு பேருவாங்கி


துட்டுத் துக்காணி உழைப்பில்லாம


; தூசி துரும்புனு கேவலப்பட்டு;

தோலும் துருத்தியுமாய்; நஞ்சிபோயி

நன்னியும் குன்னியுமாய் பெத்துப்போட்டு

; பிய்த்துப் பிடுங்கி;சோறுபோட்டு

பூச்சி பொட்டு;கடிக்காமலே

பூவும் பிஞ்சுமாய் வளத்து ஆளாக்கி;

பெண்டு பிள்ளைகள்;பரம்பரையாய்

பெற்றது பிறந்தது[ வழிமுறையாய்பேச்சு

பொய்யும் புளுகும்தொடர்கதையாய்;

நடை நடந்து மினுக்கித் தளுக்கி]

; மூலை முடுக்கெல்லாம்;ஓடோடி

வாய்க்கும் கைக்கும்; பத்தாமலே

விட்டகுறை தொட்டகுறையாகி

வீடும் குடித்தனமுமாய் குப்பை கூட்டி;

வேர்த்து விருவிருத்து; வேலை வெட்டிசெய்தாலும் -உலகம்

வேலவெட்டி இல்லாதவன்” என்று சொல்லி;

தூத்தும் பேத்தும்

Thursday, February 5, 2009

வெத்தல


ஆசைக்கு அவளெக் கட்டி
அழகுக்கு இவளெக் கட்டி
கொஞ்சி விளையாடக் -ப்ச்சை
குமரியக் கட்டி-சிவந்திருக்கு

வாய் நிறைய செவந்தவளே-காதல்

வழக்காட வந்தவளே

வெத்தல பாக்கு சுண்ணாம்பு

பத்தல பத்தல பத்தலயே

சுமை


சிவத்த முகத்தினில்

சில்லறை கொட்டிக் கிடக்குது-அந்த

"வருத்தம் இலாத சுமை

குழந்தைச் சுமை தான்

அன்பு சுமையானது

அறிவுச் சுவையானது

சுகமான சுமையானது