கவிதை என்பது..அந்தக் காதலைப் போலே!.. அது ஒரு அன்பின் எல்லையான காதலே. காதலுக்கு பேதங்கள் இல்லை. இவர்தான் காதலிக்கவேண்டுமென்று எவரையும் சொல்லிவிட முடியாதே!. அது போல் தான் கவிதையுமே!.
கவிதை என்பது அந்தக் காதலைப் போலவே !
கவிதை என்றால் கண்ணதாசனும் வண்ணதாசனும் விஜயும் பழனிபாரதியும்
கம்பதாசனும் கல்யாணசுந்தரமாம் மக்கள் கவிஞனும்,தமிழ்பாலாவும் மட்டுமே எழுதிடவேண்டும் என்பதில்லையே!
கவிதை என்பது அந்தக் காதலைப் போலவே!
அந்தப் பூவுக்குள்ளும் இருக்கும்.-காதலாய்
அன்று பார்த்த அவளின் கண்ணுக்குள்ளும் இருக்கும்.
அந்தக் காட்டுக்குள்ளும் இருக்கும்
அந்த கானக் குயிலுக்குள்ளும் இருக்கும்
அந்தத் தென்னங்கீற்றிலும் இருக்கும்
அந்தக் காற்றுக்குள்ளும் இருக்கும்-காதலி
அவளின் நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
அந்த வானத்திலும் இருக்கும் -காதலன்பாகவே!
அதுவே எல்லாருக்கும் பொதுவானது. அது அந்த தென்றலைப் போலவே
தினம் தினம் வந்து கவிதையாகியே காதலிக்கும் நெஞ்சங்களையே தாலாட்டிடுமே!.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment