உனது பழைய !
அந்த அதிகார ஆணவத்தை விடமாட்டேன் என்றால்!-ஒரு நாள்
உனக்கும் மக்களின் நியாயத் தீர்ப்பு எழுதப்படும்!
தேர்தல் வந்தது தேர்தல் கமிஷனால்-அதன் நேர்மையால்
தெருவெல்லாம் நிசப்தம் சந்தோசம்!
எனக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு
வாக்கினை செலுத்தி ஜன நாயகக் கடமையை!
நானும் நிறைவேற்ற ஓடோடிச் சென்று
அறம்செய்ய விரும்பினேன் ஆனாலும்
அடாவடி அரசியல் போலிவாக்குறுதி வேட்பாளர்
அவர்களோ!
அந்த காகித உறைகளில் காசினை வைத்து
எந்தன் வாக்கு உரிமையை கேட்டார்கள்
எனக்கு காசு வேண்டாம் என்றேன்!
ஆனாலும் எனது வீட்டுவாசலில் நாளேட்டின்
உள்ளே காசினைவைத்து கொடுத்தார்கள்!
இருந்தாலும் எனது நெஞ்சுறுதியாலே
எனக்குப் பிடித்த வேட்பாளருக்கு
எனது வாக்குரிமையை செலுத்தினேன்!
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்
மாற்றத்தை விரும்பிய வண்ணமே!
தேர்தலின் முடிவுவந்தது தெருவெல்லாம்
தேடிப் பார்த்தேன் அடாவடி அரசியல்
ஓடி ஒளிந்துகொண்டது!புரிந்துகொண்டேன்!!
அரியணை ஏறிய மாற்று அரசாங்கமே!
உனக்கும் ஒரு எச்சரிக்கை செய்கின்றேன்
உனது பழைய அதிகார ஆணவத்தை
ஒடுக்கி சுருக்கி வைக்காவிட்டால் இந்த
அடாவடி அரசியலுக்கு ஏற்பட்ட அதோ கதிதான் -உனக்கும்
அதனாலே மக்களுக்காக பணியாற்று!-இல்லை உனது பழைய
அந்த அதிகார ஆணவத்தை விடமாட்டேன் என்றால்-ஒரு நாள்
உனக்கும் மக்களின் நியாயத் தீர்ப்பு எழுதப்படும்!
மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும் -எந்த தத்துவமும் சுனாமியாய் சுருட்டப்பட்டு
மாற்றத்தில் குப்பைக்குப் போய்விடும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment