.
காதலர் நம்கை
விரல்களின் ஸ்பரிசத்தில்
பொழிந்தது  காதல்மழையே!-குடை
காற்றினில் ஆடிடும் இடைவெளியினிலே!-அன்பினில் 
கனிந்திடும் இளமைச் சாரல் துளியே!
நானும் நீயுமே 
ஒரு குடையின் கீழே
கைவிரல்கள் கோர்த்தே
மெளனித்து  நாமும்  நடந்திடும்போதினிலே-காதலர் நம்கை
விரல்களின் ஸ்பரிசத்தில்
பொழிந்தது  காதல்மழையே!
சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தாகவே!காதலியே உந்தன்
கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறதே காதல் புன்னகையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment