கூடலும் ஊடலும் காதலுக்கு உரமாகுமே!இந்த
கூடாத பிரிவுதான் இனிமைக்கு பகையானதே!-அவனைக்
காணாத நாளெல்லாமே தனிமைக்கு உணவானதே!-அவனைக்
காணுகின்ற நாள்வரையில் இன்பத்துக்கும் தூரமானதே!
அவளின் மேனி எழிலே!
அன்பு பசலை பூத்து அழகற்றுப் போனதேனோ?
அவளின் பருத்த மூங்கிலாம் தோள்களே!
அழகிழந்து மெலிந்து வளைகள் எல்லாமே
அங்கொன்றும் இங்கொன்றும் கழன்று ஓடுவதேனோ?
அவளின் கண்கள் ஒளியிழந்து போனதேனோ?
அந்த காதகன் அன்புக் காதலன்
இங்கு வந்து சேர்ந்த பாடில்லையே!
அவனைப் பிரிந்த காலமெல்லாமே
எமனை நோக்கும் நரகமானதே!
கூடலும் ஊடலும் காதலுக்கு உரமாகுமே!இந்த
கூடாத பிரிவுதான் இனிமைக்கு பகையானதே!-அவனைக்
காணாத நாளெல்லாமே தனிமைக்கு உணவானதே!-அவனைக்
காணுகின்ற நாள்வரையில் இன்பத்துக்கும் தூரமானதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment