”ஏழையின் சிரிப்பினில்
இறைவன் வந்தான் கோவணத்தோடு”
ஆம் இறைவன் அவனும் தன்வறுமைக்காக இல்லாமைக்காக மனிதனோடு
சேர்ந்து போராட வந்தானோ?
”எந்த ரப்பரைக் கொண்டும் அழிக்கமுடியவில்லை
வறுமைக்கோடு”
ஆனால்
மக்கள் ஜன நாயக புரட்சியாலே அதை அழித்திடலாமே!
”மதுக்கடையை திறந்துவைத்தார் அமைச்சர்
காந்திசிலை அருகில்”
எம்.பாலகுமார் -திருச்சி-
”அமைச்சரின் அன்னக்கை அதன் அருகினில் பாரை திறந்தார்”
”கலவரம்
சிலைகள் உடைந்தன
கழிப்பிடம் இழந்தன காக்கைகள்”
வடுவூர்-சிவமுரளி----
”அதுமட்டுமா? மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தை உருவாக்கின”
நான் ரசித்த ஹைக்கூப் பூக்கள் இன்னும் தொடரும்!
தோழமையுடன் கவிஞர் தமிழ்பாலா-------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment