காதலே
ஒரு வரியில்
சொல்ல முடியாத புதிரானதே!
காதலே
புரிந்தே சொல்ல முடியாத
கவிதையானதே!
காதலே
ஒரு மெய்யிற்குள்
இரண்டு உயிர்கொண்டதே!
காதலே
ஒரே உறவுக்குள்
உலகத்தை உணர்ந்து கொண்டதே!.
காதலே
மண்ணுக்கே கிடைத்த
நித்திய வரமானதே!
காதலே
மலர்ந்த
பூக்கள் தருகின்ற மணமானதே!
காதலே!
வேறு ஒருவராலும் உணரவும்
உணர்த்தவும் முடியாத உறவானதே!
காதலே!
என்றும் எவரும்
கேட்கின்ற
கேள்விகளுக்கெல்லாமே!
காத்திருக்கும் பதிலானதே!
காதலே!
இரண்டு மனங்களின் சந்திப்பில்
இன்ப உலகத்திற்கான தேடலானது!
காதலே
எவ்வளவு உணர்ந்தாலும்
இன்னமும் சொல்லவும் கேட்கவும்
விரும்புகிற உணர்வானது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment