காதல் நிலவே கன்னி மலரே-தென்றல்
காற்றின் குளிரே சந்தன் மணமே!
கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயிலே!
….ஓடும் நீரில் முகம் பார்க்கும்
சிட்டுக் குருவியின் பரவசமே!…
என்னை நீயும்
உருகும் மெழுகில் உதிரும் விட்டில்போல்-காதல்
மனதினில் உருக்கிடும் மாயம் தான் என்ன?
கால் நனைத்த காலைப் பனியின்
ஈரம் கண்ணில்…தந்ததும் ஏனடி?
தரையில் விழுந்த மீனின்
துடிப்பு இதயத்தில்…தந்ததும் ஏனடி?-என் நினைவு தன்னையே! நீயும்.வெடித்துப் பறக்கும் பருத்தியைப் போல்வே!…
ஒரு நொடியில் வானவீதியில் சிறகின்றி பறக்க விட்டு
ஊனுமின்றி உறக்கமின்றி தவிக்கவிட்டதும் ஏனடியோ?
கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயிலே!
….ஓடும் நீரில் முகம் பார்க்கும்
சிட்டுக் குருவியின் பரவசமே!
உருகும் மெழுகில் உதிரும் விட்டில்போல்-காதல்
மனதினில் உருக்கிடும் மாயம் தான் என்ன?
/-”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment