சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தமிழினத்தை மட்டும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஒருவேள்வி நடத்திய தோழர் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்”
காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி ”
என்று உரக்கச்சொல்லும் ஒப்பற்ற தமிழனே !சீமானே
உந்தனுக்கு எந்தன் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில்
பணபலத்திற்கு அஞ்சாத
அதிகாரபலத்திற்கு அஞ்சாத
உண்மையான வாக்கு அஸ்திரத்தால்
திமுக காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திய
தமிழ் உணர்வுகொண்ட நல்ல தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி
எந்த தேசமே என்றாலும் மக்களைவிட்டு விலகிய எந்த அரசியல் கட்சிக்கும்
இதே நிலைதான் என்பதை தமிழகம் நிரூபித்துவிட்டது!
ஊழலை எதிர்த்து,வன்முறையை எதிர்த்து,குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து
மணற்கொள்ளையை எதிர்த்து,திரைத்துறையினில் ஏகபோகத்தை எதிர்த்து, நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து,தமிழின துரோகத்தை எதிர்த்து கிளம்பிய சுனாமியே தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவே!ஆதிக்கத்தை அதிகாரத்தை விரட்டியடித்து ,விலைவாசி உயர்வுக்கு எதிராக,மின்வெட்டை எதிர்த்த போரின் இறுதிமுடிவே!
தன் சுயலாபத்திற்காக தமிழினத்தையே காவுகொடுத்தவர்கள் காசுக்கு வாக்கினை விலைபேசியவர்கள் இப்போது எங்கே மூலையிலே முடங்கிக் கிடக்கின்றார்கள்!
ஈழத்தில் நமது தமிழின உறவுகளை சிங்கள இனவெறியர்கள் கொன்று குவிக்க பேருதவி புரிந்த காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்திவிட்டார்கள்!
. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.என்ற சீமானின் வாழ்த்துக்கள் நடந்தேறட்டும்
சீமானின் மிகப்பெரிய பிரச்சாரத்தால் காங்கிரஸ் வீழ்ந்தது!
ஈழமண்ணின் சிங்கள வெறியனால் மாண்டஒவ்வொரு தமிழனின் குருதி அணுக்களும் சந்தோசப்படட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment