மீண்டும் மீண்டும்
காதல் பூபூக்கும்
உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்
உன் நினைவுகளைத்
சொல்லும் இரவுகளே!-எனக்கே நான்
செல்லும் இடம்தெரியாது பயணம்செய்யும் மாயமென்ன? மந்திரமென்ன?
அல்லும் பகலும் உன் நினைவில் நானும் தவிப்பதென்ன? தவிப்புமென்ன?
உன்
கொஞ்சும் மனதினிலே
மஞ்சம் கேட்டு கெஞ்சும் கோலமென்ன?
பசியில்லாத வாழ் நாளும்
பட்டினி இரவுகளும் எந்தனுக்கே
பழகிப் போனதடி
உனக்குள் கலந்துவிட்ட
வாழ்க்கைச் நீரூற்றினில் -அன்பு கொண்டு
என் வேர்கள் நீர்தேடுதடி
மீண்டும் மீண்டும்
காதல் பூபூக்கும்
உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment