காலம் போய்விடும் போய்விடும்!-கவிதையாய்
காதல் நிற்கும் நிற்கும்!
வாழ்க்கை போய்விடும் போய்விடும்!- உண்மை
வார்த்தை நிற்கும் நிற்கும்!
கோலம் அழிந்துவிடும் அழிந்துவிடும்- நல்ல
கொள்கை நிற்கும் நிற்கும்!
மண்ணும் மாறிவிடும் மாறிவிடும்!- அன்பான
மனிதம் என்றும் நிற்கும்!
விண்ணும்கூட போய்விடும் - நம்
விழிபிறந்த நேசம் நிற்கும்!
கடலும் தூர்ந்துவிடும் தூர்ந்துவிடும்- நம்
காதல் நிற்கும் நிற்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment