கோவில் கோபுரத்தில் பதித்த அழகுசிலையோ?-அவள்
குழைந்து நடந்தால் அன்னமும் தோற்றிடுமே!-அவள்
கொஞ்சி பேசினால் கிளியும் திகைத்திடுமே!-அவள்
தேனாய் பாடினால் குயிலும் ஓடிடுமே!-அவளின்
மேனியின் குளுமை கண்டு நீரோடையும் நாணிடுமே!-அந்த
தலைவியவள் தலைவனையே காதலித்தாளே!
தலைவனவனே தலைவியவளே! விரும்பிடவே!-தலைவன்
அவனே என்னதவம் செய்தானோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment