விடியும் வரையினில் காமன் விளையாட்டு--பொழுது
புலரும் வரையினில் காதல் பண்பாட்டு--அந்த
மன்மத பாடத்துக்கு -காதலரே!
கருத்தாழம் கண்டனரே!
காதலன் அவனோ
காதலி அவளை!
கணப்பொழுதும் பிரியேன் என்றானே!
காதலி அவளோ
கோடிப் பிறவி எடுத்தாலும்
காதலன் அவனே அன்புக் கணவன் அறிவுத் துணைவன் என்றாளே!
கண்களாலே நோக்கி நோக்கி
மகிழ்ந்த விழிகளில்- நெஞ்சில்
முகிழ்ந்த
காதலில் பட்டுத்தெறித்தது அன்பில்
காந்தமாய் காதலரையே! உயிரில் காதலின்பம்
கவ்வியது அன்றோ அந்திமாலையிலே!
வாய்பேச்சு இல்லாமலே!--காதலியே
பாசத்தோடு -அவளும் காதலன்
தோளில் தவழ்ந்தாளே!=அவனும்
தென்றலாய் அணைத்தானே!
ஆற்று நீராய் அவனின் நெஞ்சில்--காதலி
அவளும் பாய்ந்தாளே!
அவன் அள்ளினான் அவளோ
அமுதாய் துள்ளினாள் தேனாய்
அருகினில் இனித்தாளே!-அவனோ
சீண்டலில் கிள்ளினான் அவளோ
நீரூற்றாய் கிளர்ந்தெழுந்தாளே!
அவனோ அன்பென்றான் -அவளோ!
ஆருயுர் என்றாள் -அவனோ
கூந்தலை கோதிஅவளின் செவ்விதழினில் முத்தமிட்டான்!
காதலி அவளோ காதலன் அவனை இறுகக் க்ட்டிக் கொண்டாளே!
விடியும் வரையினில் காமன் விளையாட்டு--பொழுது
புலரும் வரையினில் காதல் பண்பாட்டு--அந்த
மன்மத பாடத்துக்கு -காதலரே!
கருத்தாழம் கண்டனரே!
காதலன் அவனோ
காதலி அவளை!
கணப்பொழுதும் பிரியேன் என்றானே!
காதலி அவளோ
கோடிப் பிறவி இருந்து எடுத்தாலும்
காதலன் அவனே அன்புக் கணவன் அறிவுத் துணைவன் என்றாளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment