ஓவியக் கலஞன் ஒருவனே! மென்மைத்
தூரிகை கொண்டே வண்ணமே குழைத்து
தீட்டிய அழகு ஓவியமே!~அவளே!
எழிலாம் காவியமே!
கட்டுடல் கன்னியருகே!அவளின் அந்த பொன்னிற மேனியாளின் கண்களே!
கயல்மீனாய் நீண்டு காதளவு செல்கின்றதே!அவளின்
கரியகூந்தல் மேகத் திரளானதே!-அவளின்
செக்கச் சிவந்த இதழ்கள் செம்பவளமானதே!-அவளோ
முல்லை மொட்டுப் பற்களிலே!
மோகனப் புன்னகை செய்தாளே!-அவளின்
தங்கக்குட நெஞ்சழகு மேலும்
கண்ணாடியாய் பளபளக்கும் கன்னங்களே!அவளோ
நூல்போல் சிறுத்த சிற்றிடையாள்
செவ்வாழையாய் வழவழத்த கால்கொண்டு நடந்துவந்தாளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment