Popular Posts

Sunday, May 22, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”சத்ய சாய்பாபாவே”--’

அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.

’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

-----நாஞ்சில்நாடன்

அங்கீகாரமற்ற கோடிப் படைப்பாளிகள் மண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சில படைப்பாளிகள் விண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சிலரிலும் நல்ல படைப்புக்கள் கொஞ்சம்!
அங்கீகாரம்பெற்ற சிலரின் நல்லபடைப்புக்களுக்கோ வந்ததிங்கே பஞ்சம்!
அங்கீகாரத்திற்கு தினம்போராடும் நல்லபடைப்பாளர்களும் உண்டு!
அங்கீகாரத்தை தக்கவைக்கப் போராடும் படைப்பாளர்களும் உண்டு!
அரங்கத்திலிருந்து அம்பலத்தில் ஏறாத எதுவும் பயனாவது இல்லை!தாங்கள் கூறியுள்ள
பேரும்புகழும் தேடும் மார்க்கம் அல்ல என்பதில் ’எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று உங்களுடைய சுயவிவரத்தில் கூறியுள்ளதில் அங்கீகாரம் என்பதுதான் என்ன?.அது புகழினை குறிப்பிடவில்லையா? உங்களின் பேரினைக் குறிப்பிடவில்லையா?

No comments: