நானும் எழுதிய
காதல் கடிதமிது- நானே வாழும்
காலத்திலேயே எழுதிடவேண்டும் என்று எண்ணிய
காலத்தின் வசந்தமிது~ காதல் கடிதமிது!
காதலியே உனக்கு
நானும் எழுதிய
காதல் கடிதமிது-
காதலியே நானுன்னை சந்தித்த நாள்முதலாகவே!
கண்களாலே எழுதிப் பழகிய பார்வையின் முகவரியிது!
காற்றினிலே கடுமழையினிலும் நடப்பதற்கே சிறகாலே நான் தடுமாறிய போது!-அன்பு
வானத்திலே பறந்திடவே எந்தனுக்கு கற்றுத்தந்தவள் நீயல்லவா?
வாழுகின்ற மனிதரெல்லாம் சதையாலே சேர்க்கப்பட்டவர் என்று நான்சொன்ன போதிலும்!
வாழும் மனிதரெல்லாம் மனித நேயத்தால் கட்டப்பட்டவர் என்று சொன்னவளே!
ஆகாய விண்மீன்கள் எல்லாம் இரவுபகல் அடையாளம் என்றுசொன்ன எந்தனுக்கே!-அந்த
அண்டத்தையே தொட்டுவிட என்னோடு சேர்ந்துவந்த பீனிக்ஸ் பறவை நீயல்லவா?-வாழ்வின்
கணக்கினை மட்டும் கணக்குப் பார்த்து வாழஎண்ணிய சராசரி மனிதன் நானல்லவா?
காலமெல்லாம் வாழ்கின்ற அன்புக் கவிதையாகவே என்னோடு வாழ்கின்றவள் நீயல்லவா?
நானும் எழுதிய
காதல் கடிதமிது- நானே வாழும்
காலத்திலேயே எழுதிடவேண்டும் என்று எண்ணிய
காலத்தின் வசந்தமிது~ காதல் கடிதமிது!
காதலியே உனக்கு
நானும் எழுதிய
காதல் கடிதமிது-
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment